H3N2: சளி, இருமலை தவிர்க்க இஞ்சியை எவ்வாறு உட்கொள்ளலாம்?

தற்போது பரவி வரும் எச்3என்2 பாதிப்பின் முக்கிய அறிகுறியாக இருக்கிறது இருமல், சளி. இதனை எதிர்கொள்ள எந்த வகைகளில் இஞ்சியை சேர்த்துகொள்வது, நோய் பாதிப்பை தடுக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
H3N2: சளி, இருமலை தவிர்க்க இஞ்சியை எவ்வாறு உட்கொள்ளலாம்?
H3N2: சளி, இருமலை தவிர்க்க இஞ்சியை எவ்வாறு உட்கொள்ளலாம்?canva
Published on

நமது பாரம்பரிய சமையலில் சுவைக்காக மட்டுமல்லாது, மருத்துவ குணநலங்களுக்காகவும் இஞ்சி சேர்த்துக்கொள்ளப்படுகிறது. இந்தியா, நைஜீரியா, சீனா, நேபாளம் போன்ற நாடுகளிலும் இஞ்சி விளைவிக்கப்படுகிறது.

வயிறு தொடர்பான உபாதைகள், சளி, இருமல், சுவாசப் பிரச்னைகள் போன்றவற்றிற்கு இஞ்சி ஒரு சிறந்த தீர்வு.

தற்போது பரவி வரும் எச்3என்2 பாதிப்பின் முக்கிய அறிகுறியாக இருக்கிறது இருமல், சளி. இதனை எதிர்கொள்ள எந்த வகைகளில் இஞ்சியை சேர்த்துகொள்வது, நோய் பாதிப்பை தடுக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்

பச்சையாக சாப்பிடுவது:

காலை நேரத்தில் இஞ்சியை பச்சையாக சாப்பிடுவதால் அதிலிருக்கும் சாறு, அதன் காரம் சளிக்கு இதமானதாக இருக்கிறது. மேலும் இருமலை கட்டுபடுத்தவும் உதவுகிறது.

H3N2: சளி, இருமலை தவிர்க்க இஞ்சியை எவ்வாறு உட்கொள்ளலாம்?
Health: மீன், முட்டை, நட்ஸ் - மூளை நலனைக் காக்க எந்த உணவுகள் சிறந்தது?

ஜிஞ்சர் லெமன்:

வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிது எலுமிச்சை சாறு உடன் இஞ்சியும் சேர்த்து குடித்தால் உடலில் இருக்கும் சளி வெளியேறும்.

ஜிஞ்சர் ஹனி:

கொதிக்கும் தண்ணீரில் துருவிய இஞ்சி, எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து பருகினால், வறண்ட தொண்டை, வறட்டு இருமலுக்கு நல்லது. வறட்சியால் உண்டாகும் தொண்டை எரிச்சலையும் இது குறைக்கும்.

H3N2: சளி, இருமலை தவிர்க்க இஞ்சியை எவ்வாறு உட்கொள்ளலாம்?
Health: சமைக்காமல், பச்சையாக சாப்பிடக் கூடாத உணவுகள் என்ன?

இஞ்சி மிட்டாய்:

இதனை வீட்டிலேயே எளிமையாக தயாரிக்கலாம். வேகவைத்த இஞ்சியுடன், சிறிது மிளகு, தேன் சேர்க்க வேண்டும். சூடு ஆறியதும் மிட்டய் போல இதனை சாப்பிடலாம். இருமலுக்கு நல்லது.

ஜிஞ்சர் கேரட் ஜூஸ்:

இஞ்சி சாற்றை நேரடியாக அருந்த விருப்பமில்லாதவர்கள் அதனை கேரட் ஜூஸுடன் சேர்த்து குடிக்கலாம். இது இருமலை குறைக்க உதவுகிறது

H3N2: சளி, இருமலை தவிர்க்க இஞ்சியை எவ்வாறு உட்கொள்ளலாம்?
காய்கறிகளின் குணங்கள் : எது கோபம், எரிச்சல் உண்டாக்கும்? எது சாந்தம், நன்மை தரும் ?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com