சுவைகளில் அனைவரும் அதிகமாக விரும்புவது இனிப்பு தான். பொதுவாக நாம் பயன்படுத்தும் வெள்ளை நிற சக்கரையை விட வெல்லம், கரும்புச் சர்க்கரை போன்றவை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
உணவில் வெல்லம் சேர்த்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன?
வெல்லத்தில் வைட்டமின்கள் சி, இ, ஏ, பி5 உள்ளிட்டவை நிறைந்துள்ளது. மேலும் இதில் மினரல்களும் அதிகம். இதனால், வயது முதிர்வை தடுக்கிறது, மேலும் சருமத்தில் கொப்பளங்கள், டார்க் ஸ்பாட்ஸ் வராமல் தடுக்கிறது.
வெல்லத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் அதிகம். இதனால் நோய் ஏற்படாமல் நமது உடலை பாதுகாக்கிறது. இதிலுள்ள செலெனியம், நோய் எதிர்ப்பை உண்டாக்கி, வயது முதிர்வையும் தடுக்க உதவுகிறது
ரத்ததின் சிவப்பு நிறத்துக்கு காரணமான ஹீமோக்ளோபின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வெல்லம், ரத்ததை சுத்தீகரிக்கவும் உதவுகிறது. இதனால், இரும்புச் சத்தும் அதிகரித்து, ரத்த சோகை போன்ற நோய்களை தடுக்கிறது வெல்லம்
வெல்லத்தை நேரடியாக உட்கொள்வது சளி, இருமல் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வளிக்கிறது. ஒரு வேளை அதனை நேரடியா உட்கொள்வது தித்திப்பாக இருந்தால், தேநீர் அல்லது வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடிக்கலாம். தவிர தலைவலி, மைக்ரேன் போன்றவற்றையும் தடுக்கிறது
வெல்லத்தில் உள்ள பொட்டசியம் மற்றும் சோடியம் உடலில் உள்ள அமிலங்களின் அளவை கட்டுக்குள் வைத்து, ரத்தகொதிப்பு ஏற்படாமல் உதவுகிறது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust