கொரோனாவுக்கு அடுத்த ஆபத்து : உலகை அச்சுறுத்தும் அதிவேக Marburg virus - என்ன நடக்கிறது?

மார்பர்க் எளிதில் மற்றவர்களுக்குப் பரவக் கூடியது என்பதால், அந்த இருவரோடு தொடர்பிலிருந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கும் 98 பேரை மேற்கு ஆப்பிரிக்க நாடான கானா தனிமைப்படுத்தியுள்ளது.
Marburg virus
Marburg virusTwitter
Published on

கானா நாட்டில் மார்பர்க் என்கிற வைரசால் இருவர் பாதிக்கப்பட்டது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் இறந்துவிட்டதாக சில மணி நேரங்களுக்கு முன் பல சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

எபோலா தொற்றை ஏற்படுத்தும் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த அதே வைரசால் மார்பர்க் பரவுவதாக்க பிபிசியில் செய்தி வெளியாகியுள்ளது.

பாபா வாங்கா என்கிற எதிர்காலத்தைக் கணிக்கக் கூடிய பெண்மணி, 2022ஆம் ஆண்டில், மற்றொரு ஆபத்தான வைரஸ் வெளிப்படுமெனக் கணித்திருந்தது இங்கே நினைவுக்கு வருகிறது.

அச்செய்தியை முழுமையாகப் படிக்க இங்கே சொடுக்கவும்: https://www.newssensetn.com/wow-news/blind-mystic-baba-vanga-has-already-had-2-of-her-6-predictions-for-2022-come-true

மார்பர்க் வைரசால் பாதிக்கப்பட்ட இருவரும் சிகிச்சைக்காக தெற்கு அஷான்டி பிராந்தியத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், சிகிச்சை பலனின்றி அவர்கள் இறந்துவிட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

அந்த இரு நோயாளிகளின் மாதிரிகளைக் கடந்த மாதம் ஆராய்த போது அவர்கள் மார்பர்க் வைரசால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. தற்போது செனெகலில் உள்ள ஆய்வகத்திலும் அது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மார்பர்க் எளிதில் மற்றவர்களுக்குப் பரவக் கூடியது என்பதால், அந்த இருவரோடு தொடர்பிலிருந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கும் 98 பேரை மேற்கு ஆப்பிரிக்க நாடான கானா தனிமைப்படுத்தியுள்ளது.

Marburg virus
பசி, அடுத்த வைரஸ் : 2022 ஆம் ஆண்டில் என்னவெல்லாம் நடக்கும்? - நோஸ்ட்ராடாமஸ் கணிப்புகள்

கானா நாட்டின் இந்த அதிரடி நடவடிக்கைகளை, உலக சுகாதார அமைப்பு பாராட்டியுள்ளது. மேலும் அந்நாட்டுக்கு இவ்வமைப்பு முழுமையாக உதவி வருகிறது.

கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருந்த போது எப்படிப் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் பார்ப்பது என்றே தெரியாமல் மருத்துவர்கள் திணறினார்களோ, அதே நிலை மார்பர்க் வைரசுக்கும் இருக்கிறது. நிறையத் தண்ணீர் குடிப்பது, மார்பர்க் வைரஸ் அறிகுறிகளுக்குச் சிகிச்சை எடுத்துக் கொள்வது, உயிர் பிழைக்க உதவும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

இந்த வைரசும் பழந்தின்னி வெளவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியது. அதன் பின் மனிதர்களின் உடல் திரவங்கள் மூலம் மனிதர்களுக்கு மத்தியில் பரவிக் கொண்டிருக்கிறது மார்பர்க் வைரஸ்.

Marburg virus
கொரோனா வைரஸ்க்கு முன்பு கண்டங்களை காவு வாங்கிய கருஞ்சாவு - விலகிய 700 ஆண்டுகள் மர்மம்

தலைவலி, காய்ச்சல், தசை வலிகள், ரத்த வாந்தி... போன்றவை மார்பர்க் வைரஸின் அறிகுறிகள். மார்பர்க் வைரஸால் பாதிக்கப்படக் கூடியவர்கள் மிகக் கடுமையான உடல்நலக் கோளாறு முதல் மரணம் வரை ஏற்படலாம்.

தயவுசெய்து குகைகள் பக்கம் யாரும் செல்ல வேண்டாம் என்றும், சாப்பிடக் கூடிய இறைச்சி மற்றும் அசைவ உணவுகளை நன்றாக சமைத்து சாபிடுமாறும் அதிகாரிகள் மக்களை எச்சரித்து வருகிறார்கள்.

மேற்கு ஆப்பிரிக்கப் பகுதியில் மார்பர்க் வைரஸ் பரவல் ஏற்பட்டிருப்பது இது இரண்டாவது முறை. கடந்த ஆண்டு கினியா (Guinea) நாட்டில் ஒருவர் மார்பர்க் வைரஸால் பாதிக்கப்பட்டார்.

Marburg virus
கொரோனா வைரஸ் : சீனாவை நெருங்கும் ஒரு முக்கிய ஆபத்து, அஞ்சும் அரசு - என்ன நடக்கிறது அங்கே?

அங்கோலா, காங்கோ ஜனநாயகக் குடியரசு, கென்யா, தென்னாப்பிரிக்கா, உகாண்டா ஆகிய நாடுகளிலும் மார்பர்க் வைரசால் இதற்கு முன் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2005ஆம் ஆண்டு அங்கோலா நாட்டில் மார்பர்க் வைரசால் பாதிக்கப்பட்டு 200க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தது மிகப் பெரிய வைரஸ் வெடிப்பென உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

1967ஆம் ஆண்டு ஜெர்மனியில் மார்பர்க் வைரஸ் உலகிலேயே முதல் முறையாக வெளிப்பட்டு ஏழு பேர் பலியாயினர். கொரோனா வைரஸையே இன்னும் உலகம் முழுமையாக ஒழிக்கவில்லை, அதற்குள் மார்பர்க் என மற்றொரு வைரசா..? என மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Marburg virus
இந்தியா கேரளாவில் குரங்கு அம்மை: கொரோனா போல் பரவுமா? அறிகுறிகள் என்ன? சிகிச்சை உள்ளதா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com