குரங்கு அம்மையை உலகளாவிய அவசரநிலை எனச் சொல்கிறார்கள். எந்தளவுக்குப் பரவியது, இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் பற்றிச் செய்தியாளர்கள் கூட்டத்தில் உலகச் சுகாதார அமைப்பு தலைவர், டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், “இந்தக் குரங்கு அம்மை பரவல் உலகளாவிய அவசரநிலையாகப் பிரதிபலிக்கிறது. இதை அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும்” என்கிறார்.
உலகச் சுகாதார நிறுவனம் குரங்கு அம்மையை உலகளாவிய சுகாதார அவசரநிலையாக அறிவித்ததால், உலகெங்கிலும் எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது. அரிய வைரஸ் நோய் என்றாலும் பொதுவாக இந்த வைரஸ் தொடங்கியது மத்திய மற்றும் மேற்கு ஆப்ரிக்கா நாடுகளில்தான். இப்போது 74 நாடுகளில் கிட்டத்தட்ட 17000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகச் சுகாதார அமைப்பின் மதிப்பீட்டுப் படி, “உலகம் முழுவதும் குரங்கு அம்மை மிதமான அளவிலே பரவியுள்ளது. ஆனால், ஐரோப்பிய நாடுகளில் மட்டும் ஆபத்து அதிகமாக இருப்பதாக நாங்கள் மதிப்பிடுகிறோம்” என்கிறார்.
உலகச் சுகாதார அமைப்பு குரங்கு அம்மை பரவலை "சர்வதேச அக்கறையின் பொதுச் சுகாதார அவசரநிலை (PHEIC)" என வகைப்படுத்தியுள்ளது.
உலகளவில் பரவலாகப் பரவக்கூடிய நோய் என்பதால் இதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. மேலும் இது சர்வதேச பரவலுக்கும் வாய்ப்பு உள்ளதால் இது அபாயமானது. இந்த அபாயத்துக்கு எதிரொளியாகச் சர்வதேச அளவில் எச்சரிக்கையுடன் கவனமாகக் கையாள வேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்துகிறது.
வைரஸின் பரவலைத் தடுக்க உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம் தேவை.
WHO -ன் பிரகடனத்தை வாஷிங்டன் வரவேற்றுள்ளது. "இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க உலகச் சமூகத்திற்கான நடவடிக்கைக்கான அழைப்பாகக் கருதுகிறோம்" என்கிறது.
"குரங்கு அம்மையைத் தடுக்கவும், நோய் பரவும் அபாயத்தில் உள்ள சமூகங்களைப் பாதுகாக்கவும், தற்போதைய பரவலை எதிர்த்துப் போராடவும் ஒருங்கிணைந்த, சர்வதேச பதில் அவசியம்" என்று வெள்ளை மாளிகையின் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் உயிர் பாதுகாப்புப் பிரிவின் மூத்த இயக்குநர் ராஜ் பஞ்சாபி கூறினார்.
ஜூலை 22 அன்று வெளியிடப்பட்ட அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (CDC) கணக்கின்படி, குரங்கு அம்மையால் 74 நாடுகளில் 16,800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவிலும் இதுவரை மூன்று பேர் வைரஸால் பாதித்தவர்கள் என வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த 3 பாதித்தவர்களும் கேரளாவைச் சேர்ந்தவர்கள்தான்.
வெள்ளிக்கிழமை, அமெரிக்கா தனது முதல் இரண்டு குரங்கு அம்மை நோயை குழந்தைகளிடம் அடையாளம் கண்டுள்ளது.
WHO -ன் கூற்றுப்படி, 31 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களில் உள்ளவர்கள்தான் அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளனர். மேலும் அவர்களில் பெரும்பாலோர் ஆண் நோயாளிகள்.
பாதிக்கப்பட்டவர்களில் 98 சதவீதம் பேர் ஓரினச்சேர்க்கையாவார்கள், இருபாலின ஆண்கள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மூன்றில் ஒரு பகுதியினர் முந்தைய மாதத்தில் செக்ஸ் பார்ட்டி, சானாஸ் போன்ற செக்ஸ்-ஆன்-சைட் இடங்களுக்குச் சென்றதாக அறியப்படுகிறது.
குரங்கு அம்மைக்குச் சிகிச்சையளிக்கப் பெரியம்மை தடுப்பூசியான 'இம்வானெக்ஸ்' பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றிய மருந்து கட்டுப்பாட்டாளர் பரிந்துரைத்துள்ளார். டேனிஷ் மருந்து தயாரிப்பாளர் பவேரியன் நோர்டிக் என்பவரால் உருவாக்கப்பட்ட ‘இம்வானெக்ஸ்’, பெரியம்மை நோயைத் தடுப்பதற்காக 2013 முதல் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. குரங்கு பாக்ஸ் வைரஸுக்கும் பெரியம்மை வைரஸுக்கும் இடையே உள்ள ஒற்றுமையின் காரணமாக இது குரங்கு அம்மைக்கும் தடுப்பூசியாகப் பயன்படுத்த அறிவுறுத்துகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust