காந்த மலை முதல் பறக்கும் கல் வரை: இந்தியாவில் இருக்கும் மர்ம விஷயங்கள் தெரியுமா?

பாறையைச் சுற்றி மொத்தம் 11 பேர் கூடி தங்கள் ஆள்காட்டி விரலைக் காட்டி, அந்தக் கல்லின் மீது சாபமிட்ட துறவியின் பெயரைச் சொன்னால், அது தானாக பறந்துவிடுமாம்.
mystery of lifting stone
mystery of lifting stoneTwitter
Published on

உலகின் ஏதோ ஒரு மூலைமுடுக்குகளில் பல்வேறு வித்திரமான சம்பவங்கள் நிகழ்வதை கேள்விப்பட்டிருப்போம். நம்மை சுற்றியே பல ஆச்சரிய விஷயங்கள் நிகழ்ந்துக் கொண்டே தான் இருக்கிறது. அப்படி இந்தியாவில் இருக்கும் வித்தியாசமான மர்மமான விஷயங்களை இங்கு காணலாம்.

இரட்டையர்கள் கிராமம்

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கோடின்ஹி என்ற கிராமம் "இரட்டையர் கிராமம்" என்று அழைக்கப்படுகிறது.

இந்த கிராமத்தில் அதிக எண்ணிக்கையில் இரட்டை குழந்தைகள் பிறப்பதால் இந்த கிராமம் "இரட்டையர்களின் கிராமம்" என்று அழைக்கப்படுகிறது.

இந்த கிராமத்தில் தற்போது 220 ஜோடி இரட்டை குழந்தைகள் இருப்பதாக கூறுகின்றனர்.

இந்த பகுதியில் உள்ள தண்ணீரில் உள்ள ரசாயனங்கள் தான் இதற்கு காரணம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

தொங்கும் தூண்

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள லெ பக்ஷியில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில் ஒன்று 70 தூண்களுடன் கட்டப்பட்டுள்ளது.

70 தூண்களில் ஒன்று, எந்தத் துணையுமின்றி காற்றில் தொங்கிக் கொண்டிருக்கும் வண்ணம் உள்ளது.

இந்த தூண் காண்போர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.

பறக்கும் கல்

மகாராஷ்டிராவில் உள்ள ஷிவாபூரில் உள்ள ஹஸ்ரத் கமர் அலி தர்வேஷ் ஆலயத்தில் 70 கிலோ எடையுள்ள ஒரு கல் இந்தியாவில் தீர்க்கப்படாத மர்மங்களில் ஒன்றாகவே உள்ளது.

இந்தப் பாறையைச் சுற்றி மொத்தம் 11 பேர் கூடி தங்கள் ஆள்காட்டி விரலைக் காட்டி, அந்தக் கல்லின் மீது சாபமிட்ட துறவியின் பெயரைச் சொன்னால், அது தானாக பறந்துவிடுமாம்.

mystery of lifting stone
Bermuda Triangle : உண்மையில் இங்கு கப்பல்கள் காணாமல் போகிறதா? - விலகும் மர்மம்

கதவு இல்லாத வீடுகள்

குஜராத்தில் உள்ள ஷானி ஷிங்னாபூர் (அகமத்நகரில் இருந்து 35 கிமீ தொலைவில் உள்ளது) என்ற இடத்தில் உள்ள குடியிருப்பு வீடுகள், கடைகள் மற்றும் பள்ளிக்கூடங்களுக்கு கதவுகள் கிடையாது.

ஆனால், இந்தக் கிராமத்தில் இதுவரை ஒரு குற்றச் செயல் கூட நடந்ததில்லை என்று கூறப்படுகிறது.

காந்த மலையின் மர்மம்

இது காஷ்மீர் லேயில் இருந்து கார்கில் நோக்கி 30 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய சாலையாகும். இது லடாக்கின் காந்த மலை என்று அழைக்கப்படுகிறது.

அவ்வழியில் செல்லும் வண்டிகள் அம்மலை இருக்கும் திசை நோக்கி ஈர்க்கப்படுகிறது என நம்பப்படுகிறது. ஆதலால் இம்மலை காந்தமலை எனப் பெயர்பெற்றது.

mystery of lifting stone
மேற்கு தொடர்ச்சி மலை : குளிர்காலத்தில் நிச்சயம் காணவேண்டிய 5 அற்புத தலங்கள்!

தற்கொலை பறவைகள்

கடந்த 100 ஆண்டுகளில், அசாமின் ஜதிங்காவில் உள்ள சிறிய நிலப்பரப்பில் ஆயிரக்கணக்கான பறவைகள் பறந்து இறந்துள்ளன.

ஒவ்வொரு மழைக்காலத்திலும், இந்த இடத்தில் மிகவும் வினோதமான விஷயங்கள் நிகழ்வதாக கூறப்படுகிறது.

விசா கடவுள்

அமெரிக்க விசா பெறுவது எவ்வளவு கடினம் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

ஹைதராபாத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் இருக்கும் சில்கூர் பாலாஜி கோவிலுக்குச் செல்வோரின் 'விசா' வேண்டுதல்கள் நிறைவேறுவதாக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு திரள்கின்றனர்.

அங்கு சென்றால் விசா கிடைப்பதாகவும் மக்கல் நம்புகின்றனர்.

mystery of lifting stone
இந்தியாவின் இந்த சாலைகளில் பேய்கள் நடமாடுகிறதா? - ஓர் அமானுஷ்ய தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com