கன்னியாகுமரி TO கலிஃபோர்னியா- வெளிநாட்டில் பொம்மலாட்டம் நிகழ்ச்சி நடத்தும் தமிழக கலைஞர்கள்

இது குறித்து பொம்மலாட்ட நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் பி.முத்துச்சந்திர ராவ் கூறுகையில் "நான் அவர்களுக்காக ஒரு ஆன்லைன் நிகழ்ச்சியினை நடத்தினேன். அது வட அமெரிக்க தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்புக்கு பிடித்து போனது, எனவே அவர்கள் எங்களை அழைத்துள்ளனர்" என்றார்
From Kanniyakumari to California: Puppet artiste to perform in the U.S.
From Kanniyakumari to California: Puppet artiste to perform in the U.S.Twitter
Published on

இன்று அனிமேஷன் படங்களுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறதோ அந்த அளவுக்கு சங்ககாலத்தில் பொம்மலாட்டம் , தோல்பாவை கூத்து ஆகியவற்றுக்கு மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு இருந்தது.

ஆனால் பயாஸ்கோப் எனப்படும் சினிமா துறை காலடி எடுத்து வைத்தவுடன் தமிழகத்தின் சில பாரம்பரிய கலைகளுக்கு இருண்ட காலம் என்றே கூறலாம். ஆனாலும் இன்றும் ஒரு சில இடங்களில் உயிர்ப்புடன் உள்ளது.

அந்த வகையில் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு சில கலைஞர்கள், 'தோல் பாவை கூத்து' எனப்படும் பொம்மலாட்டம் தொடர்ந்து நடத்தி, கலையை உயிர்ப்புடன் வைத்துள்ளனர்.

இவர்களை பாராட்டி, தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற பி.முத்துச்சந்திர ராவ்வுக்கு, வடஅமெரிக்க தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு (FeTNA) மற்றும் Sacramento Tamil Mandrum ஆகியவற்றால் நடைபெற உள்ள ஃபெட்னா 36வது மாநாட்டில் நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதில் நடிகர் வாகை சந்திரசேகர் தலைமையில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தினர் தமிழகத்தைச் சேர்ந்த 20 நாட்டுப்புறக் கலைஞர்கள் ஃபெட்னா 36வது மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளனர்.

இது குறித்து பொம்மலாட்ட நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் பி.முத்துச்சந்திர ராவ் கூறுகையில் "நான் அவர்களுக்காக ஒரு ஆன்லைன் நிகழ்ச்சியினை நடத்தினேன். அது வடஅமெரிக்க தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்புக்கு பிடித்து போனது எனவே அவர்கள் எங்களை அழைத்துள்ளனர்" . இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தினர் செய்து வருவதாக கூறினார்.

From Kanniyakumari to California: Puppet artiste to perform in the U.S.
கொரிய மொழியில் தமிழ் வார்த்தைகள்! - தமிழருக்கும் கொரியாவுக்கும் என்ன தொடர்பு?| Explained

மேலும் தனது பொம்மலாட்ட நிகழ்ச்சி குறித்து கூறுகையில் இந்த பொம்மலாட்ட பொம்மைகளை தயார் செய்ய ஆட்டின் தோலை பயன்படுத்துவதாக கூறினார்.

தற்போது குழந்தைகள் ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையாகி இருக்கும் நிலையில் குழந்தைகளை கவரும் வகையில் புதிய நவீன நிகழ்ச்சிகளை நடத்துவதாகவும், தற்போது அமெரிக்காவில் நடக்க உள்ள நிகழ்ச்சிக்கு தனது பொம்மைகளை எடுத்து செல்வதாக பெருமையுடன் கூறினார்.

From Kanniyakumari to California: Puppet artiste to perform in the U.S.
18 ஆண்டுகள், 13,000 கிமீ: காதலியை பார்க்க கண்டங்கள் கடந்த நாரை - ஒரு காவிய காதல் கதை!

மேலும் தங்களது குடும்பம் மகாராஷ்டிராவிலிருந்து தமிழ்நாட்டிற்கு குடிபெயர்ந்தவர்கள் என்றும் தற்போதும் பொம்மலாட்டம் நிகழ்ச்சியில் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களை மையமாகக் கொண்டிருந்தாலும், கலைஞர்கள் நவீன காலத்திற்கு ஏற்ற கதைகளை உருவாக்கி பொம்மலாட்ட கலையினை உயிர்ப்புடன் வைத்துள்ளதாக கூறுகிறார்.

கடந்த சில காலமாக அழிவு நிலையில் இருந்த பொம்மலாட்ட கலை தற்போது தமிழகத்தின் கடலோர பகுதியான கன்னியாகுமரியிலிருந்து கலிபோர்னியாவில் தனது திறனை வெளிகாட்ட உள்ளது.

இதனால் அழியும் நிலையில் உள்ள நாட்டுபுறப் கலைகள் உயிர்பெறும் என நம்பப்படுகின்றது.

From Kanniyakumari to California: Puppet artiste to perform in the U.S.
மரணத்துக்கு பிறகு நம் சமூக வலைத்தள பக்கங்கள் என்னவாகும்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com