கெளதம் அதானி : பில்கேட்ஸை பின்னுக்குத் தள்ளி உலகின் 4வது பெரிய பணக்காரராகும் இந்தியர்

அதானி, உலகின் நான்காவது பெரிய பணக்காரர் ஆவதற்கு பில்கேட்ஸ் கடந்த வாரம் டிவிட்டரில் வெளியிட்ட அறிவிப்பு தான் முக்கிய காரணமாக இருந்தது. அதில் அவர் தனது சொத்தில் இருந்து 20 பில்லியன் டாலரை தொண்டு நிறுவனத்துக்கு வழங்குவதாக கூறியிருந்தார்.
அதானி
அதானிTwitter
Published on

ஃபோர்ப்ஸ் இணையத்தளம் கடைசியாக வெளியிட்ட உலக பணக்காரர் பட்டியலில் 4வது இடத்தைப் பிடித்திருந்தவர் பில்கேட்ஸ். தற்போது அவர் அந்த இடத்திலிருந்து கீழிறங்க, அவ்விடத்தை நிரப்புகிறார் அதானி.

அதானி உலகின் நான்காவது பெரிய பணக்காரர் ஆவதற்கு பில்கேட்ஸ் கடந்த வாரம் டிவிட்டரில் வெளியிட்ட அறிவிப்பு தான் முக்கிய காரணமாக இருந்தது.

அதில் அவர் தனது சொத்தில் இருந்து 20 பில்லியன் டாலரை அவரும் அவரது மனைவியும் இணைந்து நடத்தும் கேட்ஸ் தொண்டு நிறுவனத்துக்கு நன்கொடையாக வழங்குவதாக அந்த அறிவிப்பில் கூறியிருந்தார்.

பில்கேட்ஸ், இதுகுறித்து, "தொண்டு நிறுவனத்துக்கு நன்கொடை அளிப்பதை நான் தியாகமாக கருதவில்லை. உலகில் கஷ்டத்தில் இருக்கும் மக்களின் வாழ்வை மேம்படுத்த என் உடைமைகளை சமூகத்துக்கு திருப்பி அளிக்க வேண்டிய கடமை எனக்கு உள்ளது. வசதியாக இருக்கும் அனைவரும் இதைச் செய்ய முன்வர வேண்டும்" என எழுதியிருந்தார்.

Bill Gates
Bill GatesTwitter
அதானி
Google -ஐ மிஞ்சிய கெளதம் அதானி : அடுத்த டார்கெட் Microsoft பில்கேட்ஸ் -ஆ?

அத்துடன் வறுமை, பசி, கல்வியின்மை, சமத்துவமின்மை, காலநிலை மாற்றம் போன்ற மனித குலம் எதிர்கொள்ளும் பிரச்னைகளை தீர்க்க உழைக்கப் போவதாகவும் பில் கேட்ஸ் கூறினார்.

இதன் மூலம் தனது உலகின் நான்காவது மிகப் பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தை இழந்தார் பில்கேட்ஸ்.

இவரின் தற்போதைய மொத்த சொத்து மதிப்பு 102 பில்லியன் டாலர்கள் என ஃபோர்ப்ஸ் கூறியுள்ளது.

அதானி
பணக்காரர் பட்டியலில் இருந்து வெளியேற விரும்பும் பில் கேட்ஸ் - என்ன காரணம்?

இதனால் 114 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புக் கொண்ட அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி 4வது பெரிய பணக்காரராகியிருக்கிறார்.

இவரது சொத்து மதிப்பு 2021, 2022 ஆண்டுகளில் மட்டும் 50 பில்லியன் முதல் 90 பில்லியன் டாலர்கள் வரை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் முக்கிய கூட்டு நிறுவனங்களில் ஒன்று அதானி குரூப்ஸ். பொதுத்துறை பட்டியலில் உள்ள 7 துறைகளில் அதானியின் கை ஓங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மின்சாரம், வணிகங்கள், துறைமுகங்கள், ஏற்றுமதி & இறக்குமதி, சுரங்கம் மற்றும் வளங்கள், எரிவாயு, பாதுகாப்பு மற்றும் விண்வெளி, விமான நிலையங்கள் போன்ற வணிகங்களை தன்வசம் கொண்டுள்ளது அதானி நிறுவனம்.

அதானிக்கு முன்னதாக ஃபோர்ப்ஸ் பட்டியலில் மூன்றாவது இடத்தில் அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பெசோஸ், இரண்டாவது இடத்தில் லூயிஸ் உய்ட்டன் நிறுவனத்தின் பெர்னர்ட் அர்னால்ட் மற்றும் முதலிடத்தில் எலான் மஸ்க் உள்ளனர்.

அதானி
கௌதம் அதானி வெற்றிக் கதை : கடத்தப்பட்ட பணையக் கைதி அம்பானியை முந்திய வரலாறு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com