Haryana: 6 பேர் பலி, பற்றி எரியும் மாநிலம், பரவும் கலவரம் - என்ன நடக்கிறது? | Explained

இந்த கலவரத்தில் இரண்டு பாதுகாப்பு வீரர்கள் உட்பட 6 பேர் இதுவரை மரணித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. 200க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடந்துள்ளனர். மசூதிகள் கடைகள் நொருக்கப்பட்டுள்ளன. இந்து அமைப்பினர் துப்பாக்கியுடன் கலவரத்தில் ஈடுபடும் காட்சிகள் இணையத்தில் பரவியுள்ளன.
Haryana: 6 பேர் பலி, பற்றி எரியும் மாநிலம், பரவும் கலவரம் - என்ன நடக்கிறது? | Explained
Haryana: 6 பேர் பலி, பற்றி எரியும் மாநிலம், பரவும் கலவரம் - என்ன நடக்கிறது? | Explained Twitter

விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள், மாத்ரிசக்தி துர்காவாஹினி ஆகிய இந்து அமைப்புகள் ‘பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்ரா’ என்ற பெயரில் பேரணியை ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த பேரணியை நூஹ் மாவட்ட பாஜக மாவட்டத் தலைவர் கார்கி கக்கர் தொடங்கிவைத்தார்.

பேரணி சென்றவர்கள் நல்ஹர் சிவாலயத்துக்கு அருகில் செல்லும் போது சில இளைஞர்கள் அவர்களை வழிமறித்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் கற்களை வீசி பேரணியைத் தடுக்க முயன்றதால் கலவரம் வெடித்தது.

இந்த கலவரத்தில் இரண்டு பாதுகாப்பு வீரர்கள் உட்பட 6 பேர் இதுவரை மரணித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. 200க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடந்துள்ளனர். மசூதிகள் கடைகள் நொருக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் பல எரிக்கப்பட்டுள்ளன.

இந்து அமைப்பினர் துப்பாக்கியுடன் கலவரத்தில் ஈடுபடும் காட்சிகள் இணையத்தில் பரவியுள்ளன. வதந்திகள் பரவுவதைத் தடுக்க ஆகஸ்ட் 5ம் தேதி வரை இணையவசதி முடக்கப்பட்டுள்ளது. 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்கள் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கலவரத்துக்கு என்ன காரணம்?

பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த மோனு மனேசர் என்ற நபர் காவல்துறையால் தேடப்படும் குற்றவாளியாக இருக்கிறார்.

பசு கண்காணிப்பு பிரிவின் தலைவராக இருக்கும் இவர் கடந்த பிப்ரவரி மாதம் பசு வதை செய்ததாக இரண்டு இஸ்லாமிய இளைஞர்களை எரித்துக் கொலை செய்துள்ளார்.

monu manesar
monu manesarஇந்த பேரணியில் மோனு மனேசர் கலந்துகொள்ளப் போவதாக வீடியோக்கள் பரப்பப்பட்டன. இதன் விளைவாக தான் பேரணியை இளைஞர்கள் தடுக்க முயன்றுள்ளனர். இப்போது கலவரமாக இந்த விவகாரம் வெடித்துள்ளது.

மோனு மனேசர் ராஜஸ்தான் காவல்துறையால் தேடப்படும் குற்றவாளியாக இருந்துவரும் சூழலில் அவர் ஹரியானாவின் நூஹ் மாவட்டப் பேரணியில் கலந்துகொள்வதாக பரப்பப்பட்டது வதந்திதான் எனக் கூறப்படுகிறது.

Haryana: 6 பேர் பலி, பற்றி எரியும் மாநிலம், பரவும் கலவரம் - என்ன நடக்கிறது? | Explained
மோடி - குஜராத் கலவரம் தொடர்பு பற்றிய BBC ஆவணப்படம் தடை - அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன?

இதுகுறித்து ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் எங்களிடம் எந்த தகவலும் இல்லை எனக் கூறியிருக்கிறார்.

எங்களால் முடிந்தால் மோனு மனேசரை பிடிக்க உதவி செய்கிறோம் என்றும் கூறியுள்ளார்.

"எங்களால் பாதுகாப்பு அளிக்க முடியாது"

நூஹ் மாவட்டத்தில் இருந்து ஃபரிதாபாத், பல்வால் மற்றும் குருகிராமுக்கும் கலவரமானது பரவி வருகிறது.

மாநிலத்தின் மக்கள் தொகையை குறிப்பிட்டுக் காட்டிய பாஜக முதல்வர் மனோகர் லால் கட்டார், "எங்களால் எல்லாருக்கும் பாதுகாப்பு அளிக்க முடியாது" என திட்டவட்டமாக கூறிவிட்டார்.

Haryana: 6 பேர் பலி, பற்றி எரியும் மாநிலம், பரவும் கலவரம் - என்ன நடக்கிறது? | Explained
மணிப்பூர்: பழங்குடி மக்களுக்கும் மெய்தேய் மக்களும் என்ன பகை - விரிவான தகவல்!கலவரத்தில் ஈடுபட்ட 116 பேருக்கும் மேலானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரத்தைத் தொடர்ந்து டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் பேரணி செல்ல தயாரானது விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு.

டெல்லியில் கலவரம் எழலாம் என அலர்ட் செய்யப்பட்டுள்ளது. கலவரத்தைக் கட்டுப்படுத்த இரண்டு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்த அரசு முன்வந்துள்ளது.

அடுத்த ஆண்டு தேர்தல் வர இருக்கும் சூழலில் வடகிழக்கில் மணிப்பூர் கலவரம், வடக்கில் ஹரியாணா கலவரம் என நாடே பற்றி எரிவது ஆபத்தான சூழலாக அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.

Haryana: 6 பேர் பலி, பற்றி எரியும் மாநிலம், பரவும் கலவரம் - என்ன நடக்கிறது? | Explained
மணிப்பூர் விவகாரம் : விகடனில் வெளியான சிறப்புக் கட்டுரை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com