மணா : இந்தியாவில் முதல் கிராமம் பற்றி தெரியுமா? எங்கு இருக்கிறது?

மணா கிராமம் உயரமான பனி மூடிய மலைகளால் சூழப்பட்ட அழகிய பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இந்த கிராமம் இமயமலையின் அற்புதமான காட்சிகளை வழங்குகிறது. பழமையான குடிசை வீடுகளில் வசுந்தரா நீர்வீழ்ச்சிகளை ரசித்துக் கொண்டே ஒரு நாள் முழுவதையும் இங்கு செலவிடலாம்.
Mana village will now be known as “First Indian Village”
Mana village will now be known as “First Indian Village”Twitter
Published on

இந்தியாவின் கடைசி கிராமமாக அறியப்பட்ட "மணா கிராமம்" தற்போது முதல் இந்திய கிராமம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்தோ-திபெத்திய எல்லைக்கு அருகாமையில் இருப்பதால் மணா கிராமம் முன்பு இந்தியாவின் கடைசி கிராமமாக அறியப்பட்டது.

ஆனால் தற்போது பெயர் பலகையில் முதல் இந்திய கிராமம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் எங்கு இருக்கிறது? விரிவாக படிக்கலாம்.

உத்தரகாண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் அமைந்துள்ளது தான் இந்த மணா கிராமம்.

இந்தியா சீனா எல்லையில் இருந்து சுமார் 24 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள உத்தரகாண்டின் மணா இந்தியாவின் முதல் கிராமம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கிராமம் கடல் மட்டத்திலிருந்து 3,219 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

Mana village will now be known as “First Indian Village”
பாலிதானா : அசைவ உணவுக்கு தடை விதிக்கும் ஓர் இந்திய நகரம்; எங்கே இருக்கிறது?

மணா கிராமம் எதற்கு பிரபலமானது?

பழமையான குடிசை வீடுகளில் வசுந்தரா நீர்வீழ்ச்சிகளை ரசித்துக் கொண்டே ஒரு நாள் முழுவதையும் இங்கு செலவிடலாம்.

அதுபோக ஐந்து பாண்டவர்களில் ஒருவரான பீமனால் கட்டப்பட்டதாக நம்பப்படும் 'பீமா புல்' என்ற கல் பாலமும் இங்கு உள்ளது.

பாண்டவர்கள் தங்கள் இறுதிப் பயணத்தின் போது மணா கிராமத்தின் வழியாகச் சென்றதாக புராணங்கள் கூறுகின்றன.

மேலும், சுற்றுலாப் பயணிகள் 'வியாஸ் குஹா' என்ற சிறிய குகையையும் பார்வையிடலாம். இந்த குகையில் இருந்தப்படி தான் வேத வியாசர் 'மகாபாரதம்' எழுதியதாக பரவலாக நம்பப்படுகிறது.

மணா கிராமம் உயரமான பனி மூடிய மலைகளால் சூழப்பட்ட அழகிய பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இந்த கிராமம் இமயமலையின் அற்புதமான காட்சிகளை வழங்குகிறது.

ஆன்மிக பயணம் மேற்கொள்வோருக்கு மட்டுமல்லாமல் ட்ரெக்கிங் போன்ற சாகச பயணம் செய்வோருக்கும் ஏற்ற இடம் தான் இந்த மணா கிராமம்.

மணாவுக்கு எப்போது செல்லலாம்?

மே முதல் நவம்பர் தொடக்கம் வரை மணா கிராமத்திற்குச் செல்ல சிறந்த நேரம்.

கடுமையான பனிப்பொழிவு காரணமாக, நவம்பர் முதல் ஏப்ரல் வரை இப்பகுதிக்கு செல்ல முடியாது.

Mana village will now be known as “First Indian Village”
இந்தியாவில் இப்படியும் இடங்கள் இருக்கா? டெல்லியில் மறைக்கப்பட்ட பகுதிகள் பற்றி தெரியுமா?

மணா கிராமத்தை எப்படி அடைவது?

விமானம்

டெஹ்ராடூனில் உள்ள ஜாலி கிராண்ட் விமான நிலையம் மணா கிராமத்திலிருந்து 222 கிமீ தொலைவில் உள்ளது. விமான நிலையத்திலிருந்து, நீங்கள் ஒரு டாக்ஸியை வாடகைக்கு எடுக்கலாம் அல்லது பேருந்து மூலம் கிராமத்தை அடையலாம்.

ரயில்

மணா கிராமத்திலிருந்து 202 கிமீ தொலைவில் ரிஷிகேஷ் ரயில் நிலையம் உள்ளது.

பேருந்து

ரிஷிகேஷ், ஹரித்வார் மற்றும் டேராடூன் போன்ற நகரங்களில் இருந்து சாமோலியை அடைய நீங்கள் பேருந்தில் செல்லலாம். சாமோலியில் இருந்து ஷேர் ஜீப்பில் மணா கிராமத்தை அடையலாம்.

Mana village will now be known as “First Indian Village”
டல்ஹவுசி: இந்தியாவின் இந்த underrated டூரிஸ்ட் ஸ்பாட் பற்றி தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com