Dhoni: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியிடம் என்னென்ன பைக்குகள் உள்ளன?

பைக்குகள் மீது கொண்ட மோகத்தால் தனக்கு வழங்கப்பட்ட பைக்குகளை தன்னிடமே பத்திரமாக வைத்திருக்கிறார் தோனி. தவிர இவர் சொந்தமாக தனக்கென்று பல விலையுயர்ந்த வாகனங்களையும் வைத்துள்ளார். அவை என்னென்ன பைக்குகள்? அதன் விலை என்ன?
Dhoni: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியிடம் என்னென பைக்குகள் உள்ளன?
Dhoni: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியிடம் என்னென பைக்குகள் உள்ளன? ட்விட்டர்
Published on

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி. கேப்டன் கூல் என்று பலராலும் அழைக்கப்படும் இவர் ஒரு மிகப் பெரிய பைக் பிரியர்.

பெரும்பாலும் ஒரு கிரிக்கெட் போட்டி முடிந்து பரிசாக வழங்கப்படும் பைக்குகளை விளையாட்டு வீரர்கள் சொந்தமாக பயன்படுத்துவதில்லை என்று தான் கேள்விப்பட்டிருப்போம்.

ஆனால், பைக்குகள் மீது கொண்ட மோகத்தால் தனக்கு வழங்கப்பட்ட பைக்குகளை தன்னிடமே பத்திரமாக வைத்திருக்கிறார் தோனி. தவிர இவர் சொந்தமாக தனக்கென்று பல விலையுயர்ந்த வாகனங்களையும் கலெக்ட் செய்துள்ளார்

அவை என்னென்ன பைக்குகள்? அதன் விலை என்ன?

பிஎஸ்ஏ கோல்ட் ஸ்டார்

தகவல்களின் அடிப்படையில் தோனி வின்ட்டேஜ் பைக்குகளை மிகவும் விரும்புபவர். ஆகையால் அவர் மிகவும் விரும்பி வாங்கிய வண்டிகளில் ஒன்று பி எஸ் ஏ கோல்ட் ஸ்டார். 1950களில் பிரபலமான மாடல்.

தனது சொந்த ஊரான ரான்சியில் பல முறை இந்த வன்டியில் பறக்கும் ராசாளியே என்று தோனி பறந்ததை மக்கள் பார்த்திருக்கின்றனர்.

பி எஸ் ஏ பைக்கின் விலை சுமார் 5 லட்சம் ரூபாய்

Dhoni: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியிடம் என்னென பைக்குகள் உள்ளன?
ராயல் என்ஃபீல்டு To அமுல் : வெளிநாடுகளில் மாஸ் செய்யும் 10 இந்திய பிராண்டுகள் - என்னென்ன?

கான்ஃபிடரேட் X132 ஹெல்கேட்

இது தோனியிடம் இருக்கும் இருச்சக்கர வாகனங்களில் மிகவும் ஸ்பெஷலான ஒன்று. அமெரிக்காவின் பிரபல இருச்சக்கர வாகனமான இதனை சொந்தமாக்கிய முதல் இந்தியர் தோனி தான்.

இந்தியாவில் இதன் விலை ரூ.35 லட்சம்!

கவாசாக்கி நிஞ்சா எச் 2

பல முறை ரான்சியின் வீதிகளில் பயிற்சிகாக தோனி இந்த வண்டியில் சென்றிருக்கிறார். அவரது ராட்சத பைக் கலெஷன்களில் இதுவும் ஒன்று .

இதன் விலையும் இந்திய மதிப்பில் சுமார் 35 லட்சம் ரூபாய்

கவாசாக்கி நிஞ்சா zx-14r

இதன் விலை 19 லட்சம். இது ஒரு மணி நேரத்திற்கு 335 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது. இந்த மாடல் பைக் இந்தியாவில் தற்போது விற்பனையில் இல்லை.

இதனை வைத்திருக்கும் சிலரில் தோனியும் ஒருவர்

Dhoni: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியிடம் என்னென பைக்குகள் உள்ளன?
Range Rover கார் டு கடற்கரை பங்களா: Virat - Anushka தம்பதியின் 11 விலை உயர்ந்த சொத்துகள்!

ஹார்லி டேவிசன் Fatboy

பைக் என்றாலே பிடிக்கும், அதிலும் ஹார்லி டேவிட்சன் பிடிக்காத பைக் பிரியர்கள் கிடையாது. தோனியும் விதிவிலக்கல்ல. தோனியிடம் ஹார்லி டேவிட்சன் fatboy மாடல் வாகனம் உள்ளது. இந்தியாவில் இதன் மதிப்பு 20 முதல் 22.5 லட்சம் வரை

டுகாட்டி 1098

இதுவும் கிட்ட தட்ட தோனியின் வின்ட்டேஜ் கலெஷன் தான். காரணம் 2007 முதல் 2008 வரை சில காலத்திற்கே இந்த மாடல் இந்தியாவில் விற்கப்பட்டது. இது தோனியின் ஃபேவரட் பைக்குகளில் ஒன்றாம்.

இதன் விலை 15 லட்சம் ரூபாய்

நார்டன் ஜுப்ளி

தோனியின் வின்டேஜ் பைக் கலெக்ஷனில் அடுத்தது இந்த நார்டன் ஜூப்ளி 250 பைக். 1958ல் நார்டன் என்பவரின் வைர விழாவின் அங்கமாக அறிமுகப்படுத்தப்பட்டது இந்த பைக். இதன் விலை சுமார் 20 லட்சம்

Dhoni: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியிடம் என்னென பைக்குகள் உள்ளன?
அடுத்த சீசனுக்கும் தோனி தான் சிஎஸ்கே கேப்டன்? சென்னை அணி குறித்த புதிய அப்டேட்

சுஸுகி ஹயாபுசா

உலகின் பிரபலமான பைக் மாடல்களில் இதுவும் ஒன்று. இதனையும் விட்டுவிடாமல் வாங்கி பத்திரப்படுத்தியிருக்கிறார் தோனி!

இந்த பைக்கின் விலை இந்தியாவில் 13 முதல் 16 லட்சங்கள் வரை

சுஸுகி ஷொகுன்

இதுவும் தோனியின் பர்சனல் ஃபேவரெட்களில் ஒரு பைக். அவர் ஆரம்பக்காலங்களில் கலெக்ட் செய்த பைக்குகளில் இதுவும் ஒன்று. இந்த பைக் விற்பனை நிறுத்தப்படுவதற்கு முன் இதன் விலை ரூ.18,000

Dhoni: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியிடம் என்னென பைக்குகள் உள்ளன?
தோனி முதல் கோலி வரை : உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்கள் யார் யார்?

இவற்றைத் தவிர தோனியிடம் இன்னும் சில பைக் மற்றும் விலையுயர்ந்த கார்களும் உள்ளன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com