Khonoma: ஆசியாவின் முதல் 'பசுமை கிராமம்' எப்படி உருவானது? இந்திய வேட்டையாடி மக்களின் கதை!

அடுத்த தலைமுறையினரும் ட்ரகோபன் பறவையை பார்க்க வேண்டும் என்றால் வேட்டையாடுதலை கைவிடுவதே ஒரே வழியாக இருந்தது. பாரம்பரியமாக பின்பற்றி வந்த வேட்டையாடும் கலாச்சாரத்தை விட்டுக்கொடுப்பது அங்கு வாழ்ந்த அங்கமி பழங்குடியினருக்கு எளிதாக இல்லை.
Khonoma: அசியாவின் முதல் 'பசுமை கிராமம்' எப்படி உருவானது? இந்திய வேட்டையாடி மக்களின் கதை!
Khonoma: அசியாவின் முதல் 'பசுமை கிராமம்' எப்படி உருவானது? இந்திய வேட்டையாடி மக்களின் கதை!Twitter

கோனோமா ஆசியாவின் முதல் பசுமை கிராமம் (Green Village) என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

நாகாலாந்து மாநிலத்தில் மியான்மர் எல்லையில் உள்ள இந்த கிராமத்துக்கு எளிதாக பசுமை கிராமம் என்ற அந்தஸ்து கிடைத்துவிடவில்லை.

வேட்டையாடுதலை வாழ்க்கைமுறையாகக் கொண்ட பழங்குடிமக்களின் வாழ்வில் நடைமுறைப்படுத்தப்பட்ட மாற்றங்கள் என்ன? அவை எப்படி கிராமத்தின் வளர்சிக்கு உதவியிருக்கிறது எனப் பார்க்கலாம்.

1998ம் ஆண்டு கோனோமா இயற்கை பாதுகாப்பு மற்றும் ட்ரகோபன் (Tragopan) சரணாலயம் தொடங்கப்பட்டது. ட்ரகோபன் என்பது அந்த பகுதியில் காணப்படும் அரியவகைப் பறவை.

இந்த பறவைகளை வேட்டையாட அந்த கிராமத்தில் தனித் திருவிழாவே நடத்தப்பட்டது. யார் அதிக பறவைகளை வேட்டையாடுகிறார் எனப் போட்டி நடத்திவந்தனர். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் பறவைகள் கொல்லப்படுவது வழக்கமாக இருந்தது.

இதனைத் தடுக்க கிராம நிர்வாகம், கிராமத்தை சுற்றி 20 கிலோமீட்டருக்கு வேட்டையாட தடை விதித்தனர். அடுத்த தலைமுறையினரும் ட்ரகோபன் பறவையை பார்க்க வேண்டும் என்றால் அதுவே ஒரே வழியாக இருந்தது.

பாரம்பரியமாக பின்பற்றி வந்த வேட்டையாடும் கலாச்சாரத்தை விட்டுக்கொடுப்பது அங்கு வாழ்ந்த அங்கமி பழங்குடியினருக்கு எளிதாக இல்லை.

Khonoma: அசியாவின் முதல் 'பசுமை கிராமம்' எப்படி உருவானது? இந்திய வேட்டையாடி மக்களின் கதை!
உலகிலேயே தூய்மையான காற்று இருக்கும் கிராமம் - Edge Of The World என அழைக்கப்படுவது ஏன்?

அங்கமி மக்களின் வாழ்க்கை பறவைகள், காடு, விலங்குகள் பற்றிய கதைகளால் நிரம்பியிருக்கிறது. ஆனாலும் வேட்டையாடுவதை தியாகம் செய்வதுதான் பறவைகளைக் காப்பதற்கான ஒரே வழி என்பதனால் இந்த முடிவினை எடுத்தனர்.

5 ஆண்டுகள் கிராம மக்களிடம் பறவைகளைக் காப்பதன் முக்கியத்துவத்தைப் படிப்படியாக எடுத்துக்கூறி வேட்டையை முற்றிலுமாக குறைத்தனர்.

வேட்டையாடுவதை முழு நேர தொழிலாக கொண்டிருந்த குடும்பங்கள் விவசாயம் செய்யத் தொடங்கினர். இப்போது இன்னும் பல மாற்றங்களை இந்த கிராமம் சந்தித்துள்ளது.

Khonoma: அசியாவின் முதல் 'பசுமை கிராமம்' எப்படி உருவானது? இந்திய வேட்டையாடி மக்களின் கதை!
இந்தியாவின் சிக்கலான கிராமம்: மகாராஷ்டிராவில் இருக்கும் கர்நாடக மக்களின் கதை!

இந்த கிராம இளைஞர்கள், மாணவர்கள் இணைந்து கிராமத்தை சுத்தமாக வைக்க உதவுகின்றனர். அங்காங்கே குப்பைத் தொட்டிகள் வைத்துள்ளனர்.

இங்கு சுத்தமான குடிநீர் தொட்டிகள் மற்றும் பொது கழிப்பறை உள்ளது. கோனோமாவில் இயற்கை விவசாயம் மட்டுமே செய்யப்படுகிறது.

நல்ல மாற்றத்தை விளைவிக்கும் முடிவுகளை உறுதியாக மேற்கொள்ளும் தலைமையும் பொறுப்புணர்வுடன் கூடிய மக்களும் சிறந்த நாட்டை உருவாக்க முடியும் என்பதற்கு இந்த கிராமம் ஒரு உதாரணம்!

Khonoma: அசியாவின் முதல் 'பசுமை கிராமம்' எப்படி உருவானது? இந்திய வேட்டையாடி மக்களின் கதை!
2022: உலகின் சிறந்த சுற்றுலா தலங்கள்- UNWTO குறிப்பிட்ட ஒரு இந்திய கிராமம் எது தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com