தாஜ்மஹாலை 3 முறை விற்ற வழக்கறிஞர் - நாடே துரோகியாக பார்க்கும் யார் இந்த நட்வர்லால்?

இந்த திருட்டு திறனை வைத்து பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டார். முன்னாள் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் முதல் திருபாய் அம்பானி போன்ற பல பிரபலங்களின் கையெழுத்தை போலியாக போட்டார்.
Natwarlal Who Sold Taj Mahal Thrice : who is he?
Natwarlal Who Sold Taj Mahal Thrice : who is he?Twitter
Published on

உலக அதிசயங்களில் ஒன்றாகவும், காதலின் நினைவுச்சின்னமாகவும் விளங்கும் தாஜ்மஹால் இந்தியாவின் சிறந்த கட்டிட கலைகளில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

அதைக் கட்டிய முகலாயப் பேரரசர் ஷாஜகான் தனது மனைவியான மும்தாஜை எவ்வளவு நேசித்தார் என்பதற்கு அளவே இல்லை என்று காட்டும் நினைவுச் சின்னம்தான் தாஜ்மஹால்.

தாஜ்மஹால்
தாஜ்மஹால்Twitter

உலகெங்கிலும் உள்ள மக்கள் தாஜ்மஹாலை காண இந்தியாவிற்கு சுற்று பயணம் மேற்கொள்கின்றனர்.

தற்போது அரசுடைமையாக இருக்கும் இந்த தாஜ்மஹாலை தனிநபர் ஒருவர் சொந்தம் கொண்டாடி முன்று முறை விற்றுள்ளார் என்ற தகவல் உங்களுக்கு தெரியுமா?

நட்வர்லால் என்பவரால் தான் தாஜ்மஹால் 3 முறை விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Natwarlal Who Sold Taj Mahal Thrice : who is he?
தாஜ்மஹால் : ஷாஜகான் மும்தாஜ் காதல் மற்றும் சோகத்தின் கதை - ஒரு வரலாற்று பயணம்

யார் இந்த நட்வர்லால்?

மிதிலேஷ் குமார் ஸ்ரீவஸ்தவா என்று அழைக்கப்படும் நட்வர்லால், 1912 இல் பீகாரில் இருக்கும் சிவான் எனும் மாவட்டத்தில் உள்ள பாங்ரா எனும் கிராமத்தில் பிறந்தவர். வழக்கறிஞர் பட்டம் பெற்றிருக்கிறார் இந்த நட்வர்லால்.

அவர் போலி காசோலைகள் மற்றும் பண நோட்டுகளை தயாரிப்பதில் மிகவும் திறமையானவராக இருந்துள்ளார். மேலும் மற்றவர்களின் கையெழுத்துகளை அச்சு அசலாக போடுவதும் அவருக்கு கைவந்த கலையாக இருந்துள்ளது.

தன்னுள் இருந்த தனித்தன்மை வாய்ந்த திறனை பயன்படுத்தி அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைத்து பிரபல மோசடி நபராக மாறினார்.

இந்தியாவின் மிக முக்கியமான துரோகிகளில் ஒருவராக அறியப்பட்ட நட்வர்லால் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்.

இந்த திருட்டு திறனை வைத்து பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டார். முன்னாள் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் முதல் திருபாய் அம்பானி போன்ற பல பிரபலங்களின் கையெழுத்தை போலியாக போட்டார்.

நட்வர்லால் தாஜ்மஹாலை மூன்று முறை விற்றதாகக் கூறப்படுகிறது. தன்னை ஒரு அதிகாரியாக காட்டிக்கொண்டு அரசு அலுவலகத்தின் அச்சுகள் தயாரித்து சுற்றுலாப் பயணிகளிடம் மூன்று முறை இந்தியாவின் புகழ்பெற்ற நினைவுச் சின்னமான தாஜ் மஹாலையே விற்றுள்ளார் நட்வர்லால்.

Natwarlal Who Sold Taj Mahal Thrice : who is he?
Taj Mahal : கருப்பு தாஜ்மஹால் கட்ட விரும்பினாரா ஷாஜகான்? - ஓர் இருண்ட வரலாறு
taj mahal
taj mahalTwitter

தாஜ் மஹாலை மட்டுமின்றி நாடாளுமன்றம், ரெட் ஃபோர்ட் என அனைத்தையும் விற்று பணம் பார்த்திருக்கிறார் இந்த கில்லாடி கிர்மினல்.

நட்வர்லால் செய்த குற்றங்களுக்காக 113 ஆண்டுகள் சிறைத்தண்டனை அவருக்கு வழங்கப்பட்டது. ஆனால், சிறையிலிருந்து வெளியேற பல தந்திரங்களை செய்து அவ்வபோது தப்பித்தும் விடுவாராம்.

இவர் மொத்தமாக 20 வருடங்கள் மட்டுமே சிறைவாசம் அனுபவித்தார்.

Natwarlal Who Sold Taj Mahal Thrice : who is he?
Bikini killer: சீரியல் கில்லர்; ஏகப்பட்ட காதலிகள்; தாலிபான்கள் தொடர்பு- ஒரு கொடூரனின் கதை

நட்வர்லால் ராபின் ஹூட் என்று பிரபலமாக அறியப்பட்டார். ஏனெனில் அவர் தனது கிராமத்தில் உள்ள ஏழை மக்களுக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார்.

நட்வர்லால் கதையை கொண்டு நிறைய இந்தி திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. 1979ஆம் ஆண்டு அமிதாப் பச்சன் நடித்த மிஸ்டர் நட்வர்லால் எனும் திரைப்படமும் நட்வர்லாலின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் தான்.

தனது இறப்பிலும் பித்தலாட்டம் செய்திருக்கிறார் நட்வர்லால். கடந்த 1996-ம் ஆண்டு தான் இறந்துவிட்டதாக தன் சகோதரன் மூலம் செய்திகள் பரப்பினர்.

ஆனால், கடந்த 2009ஆம் ஆண்டு வரை அதாவது 97 வயது வரை நட்வர்லால் நலமுடன் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com