சாவர்கர் : கோட்சேக்கு கொடுத்த 15,000 ரூபாய் - காந்தி கொலையில் இவருக்கு பங்கு உள்ளதா?

கோட்சேவுக்கும் அவருடன் காந்தியைக் கொல்ல இணைந்து செயல்பட்ட நாராயண் ஆப்தேவுக்கும் சாவர்கர் வெறும் வழிகாட்டி மட்டுமல்ல. கொலை செய்வதற்கு முந்தைய நாட்களில் கோட்சே சாவர்கரை சந்தித்துள்ளார். அவரிடம் ஆசி பெற்றே இது நடத்தப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
சாவர்கர் : கோட்சேக்கு கொடுத்த 15000 ரூபாய் - காந்தி கொலையில் இவருக்கு பங்கு உள்ளதா?
சாவர்கர் : கோட்சேக்கு கொடுத்த 15000 ரூபாய் - காந்தி கொலையில் இவருக்கு பங்கு உள்ளதா?Twitter

காந்தி மறைந்த நாளில் நம்மை அறியாமலேயே நினைவுக்கு வந்துவிடுகிறார். கோட்சே உடன் நாம் நினைவு கூற வேண்டிய இன்னும் சிலரும் இருக்கின்றனர். அவர்களில் முக்கியமானவர் சாவர்கர்.

இன்றைய மோடி அரசாங்கம் தங்களின் வழியாகாட்டியாக கைக்காட்டும் சாவர்கரின் கைகளில் காந்தியின் இரத்தக்கறை படிந்திருக்கலாம் என்கின்றனர் வரலாற்றறிஞர்கள்.

பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் ஆயுள் தண்டனையை ரத்து செய்ய மன்னிப்பு கடிதம் எழுதியது சாவர்கரை எதிர்ப்பவர்கள் அடிக்கடி முன்னிறுத்தும் குற்றச்சாட்டு.

ஆனால் சாவர்கர் இரண்டாம் உலகப் போரின் போது இந்துக்கள் பிரிட்டிஷ் இராணுவத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும் என கூறி வந்தது உங்களுக்குத் தெரியுமா? அந்த நாட்களில் காந்தி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நடத்தினார். சுபாஷ் சந்திர போஸ் அசாத் ஹிந்த் ஃபௌஸ் மூலம் காலனி ஆதிக்கத்தை எதிர்த்துவந்தார்.

முஸ்லீம் - எதிர்ப்பு தீவிரவாதத்தை ஏற்றிருந்த சாவர்கர் பழிவாங்கும் நடவடிக்கையாக முஸ்லீம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வதைக் கூட ஆதரித்ததாக கூறப்படுகிறது.

காந்தி கொலைவழக்கு விசாரணையில் சாவர்கர்
காந்தி கொலைவழக்கு விசாரணையில் சாவர்கர்

ஒரு இந்திய குடிமகனால் கூட மன்னிக்க முடியாத குற்றமான காந்தி கொலையில் சாவர்கருக்கு தொடர்பிருப்பது இது எல்லாவற்றுக்கும் மேலானது.

ஜனவரி 30, 1948 நம் தேசத்தந்தை நெஞ்சில் துப்பாக்கியால் சுட்டு சரித்த கோட்சேவுக்கு சாவர்கருக்கும் இருக்கும் நெருக்கமான தொடர்புகள் பற்றி பேசுகிறது இந்தக் கட்டுரை.

சாவர்கரின் கட்சிக்காரரான கோட்சேவுக்கும் அவருடன் காந்தியைக் கொல்ல இணைந்து செயல்பட்ட நாராயண் ஆப்தேவுக்கும் சாவர்கர் வெறும் வழிகாட்டி மட்டுமல்ல. கொலை செய்வதற்கு முந்தைய நாட்களில் கோட்சே சாவர்கரை சந்தித்துள்ளார். அவரிடம் ஆசி பெற்றே இது நடத்தப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

1. சாவர்கருக்கு எதிராக பலரும் பேசிவந்தனர். அவர்களுள் அப்போதைய பாதுகாப்பு அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலின் கருத்துகள் வலுவான ஒன்றாக பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 27, 1948 வல்லபாய் படேல் ஜவஹர்லால் நேருவுக்கு இவ்வாறு எழுதுகிறார்,

"ஆர்.எஸ்.எஸ் இதில் ஈடுபடவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. சாவர்கருக்கு கீழ் செயல்படும் வெறிபிடித்த பிரிவான இந்து மகாசபை சதிவேலையில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது"

2. சாவர்கர் 1944ம் ஆண்டு கோட்சேவுக்கு 15,000 முன்பணம் கொடுத்தார் (அந்த காலத்தில் மிகப் பெரிய தொகை). அது அக்ரனி என்ற செய்திதாளை தொடங்குவதற்காக கொடுக்கப்பட்டது. அந்த செய்திதாளின் ஆசிரியர் கோட்சே மற்றும் மேலாளர் நாராயன் ஆப்தே. சாவர்கரின் காந்தி எதிர்ப்பு கொள்கையை இந்த செய்திதாள் பரப்பியது.

3. பாஜக-வைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் மொரர்ஜி தேசாய் காந்தி கொல்லப்பட்ட காலத்தில் பம்பாய் மாகாண அரசாங்கத்தில் உள்துறை அமைச்சராக இருந்தவர். அப்போது அவரது நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்தவர்களிடம் "சாவர்கர் தான் இந்த சதிக்கு பின்னால் இருக்கிறார்" எனக் கூறியுள்ளார் என்கிறது என்.டி.டி.வி தளம்.

சாவர்கர் : கோட்சேக்கு கொடுத்த 15000 ரூபாய் - காந்தி கொலையில் இவருக்கு பங்கு உள்ளதா?
'சாவர்கர் பறவைகள் மீதேறி வந்தார்' - கர்நாடக பள்ளி பாடத்தால் சர்ச்சை

4. காந்தியைக் கொலை செய்வதற்கான முயற்சி முன்னரும் ஒருமுறை நடந்துள்ளது. 1948ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி மகாராஷ்டிராவில் வசித்த மேற்கு பஞ்சாபை சேர்ந்த மதன்லால் பஹ்கா, காந்தி பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்றிருந்த பிரில்லா ஹவுஸ் அருகே குண்டுவெடிப்பை நிகழ்த்தினார்.

அந்த இடத்தில் இருந்த கோட்சேவும், ஆப்தேவும் தப்பி ஓடினர். பஹ்வா காவல்துறையினரால் பிடிக்கப்பட்டார். அப்போது, "அவன் திரும்பி வருவான்" என்று கூறியிருக்கிறார் பஹ்வா. சொன்னது போலவே கோட்சே திரும்பி வந்தார். ஆனால் இரண்டு கொலை முயற்சிகளுக்கும் நடுவில் கோட்சே மும்பை சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் மும்பை சென்றது ஏன்?

சாவர்கர் : கோட்சேக்கு கொடுத்த 15000 ரூபாய் - காந்தி கொலையில் இவருக்கு பங்கு உள்ளதா?
சாவர்க்கர் அந்தமான் சிறை : நடுங்க வைக்கும் வதைக் கூடம் - எஃகு கோட்டையின் இருண்ட வரலாறு

5. காந்தி மரணம் குறித்து அவரது பேரனான துஷார் காந்தி எழுதிய 1000 பக்கம் புத்தகத்தின் படி, காந்தி கொலைத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்னர் ஜனவரி 17ம் தேதி கோட்சே சாவர்கரை சந்தித்திருக்கிறார்.

சாவர்கர் : கோட்சேக்கு கொடுத்த 15000 ரூபாய் - காந்தி கொலையில் இவருக்கு பங்கு உள்ளதா?
குஜராத் : 'மை ரோல் மாடல் நாதுராம் கோட்சே' தலைப்பில் பேச்சுப்போட்டி - அதிகாரி இடைநீக்கம்

6. காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த சாவர்கர், தான் ஒரு ஆண்டுக்கும் மேலாகவே கோட்சே மற்றும் ஆப்தேவைப் பார்க்கவில்லை என வாதாடியிருக்கிறார். ஆனால் அது உண்மையில்லை.

பத்திரிக்கையாளர் வைபவ் புரந்தரே எழுதிய, சாவர்கர் - இந்துத்துவ தந்தையின் உண்மை கதை புத்தகத்தில், ”மும்பை காவல்துறை ரெகார்ட்கள் படி, சாவர்கரின் உதவியாளர் கஜனன் தாம்லே மற்றும் மெய்காப்பாளர் அப்பா காசர், ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் சாவர்கர் கோட்சே மற்றும் ஆப்தே ஆகிய மூவரும் சந்தித்துக்கொண்டதாக கூறியுள்ளனர்.

மேலும் ஜனவரி 23 அல்லது 24ம் தேதி மீண்டும் சந்தித்து அரைமணி நேரம் உரையாடியதாகவும் தெரிவித்துள்ளனர்." இவ்வளவு வலிவான ஆதாரங்கள் இருந்தும் காந்தி கொலை வழக்கில் இருந்து கோட்சே விடுவிக்கப்பட்டது புதிரானதே.

சாவர்கர் : கோட்சேக்கு கொடுத்த 15000 ரூபாய் - காந்தி கொலையில் இவருக்கு பங்கு உள்ளதா?
மகாத்மா காந்தி முழுமையான வாழ்க்கை வரலாறு - எழுத்தாளர் அ முத்துக்கிருஷ்ணன்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com