நரசிம்மவர்மன் முதல் கலிங்கத்து காரவேலன் வரை - இந்தியாவை ஆண்ட இந்த மன்னர்களை தெரியுமா?

இந்திய வரலாற்றில் முக்கிய அங்கம் வகித்த இன்னும் சில மன்னர்களும் ராணிகளும் இருக்கின்றனர். இவர்கள் பரவலாக அறியப்படவில்லை. பேரரசர்களாகவும், நீண்ட காலத்திற்கும் இவர்கள் ஆட்சி புரிந்துள்ளனர். அவர்கள் யார், வரலாறு என்ன என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்
நரசிம்மவர்மன் முதல் கலிங்கத்து காரவேலன் வரை - இந்தியாவை ஆண்ட இந்த மன்னர்களை தெரியுமா?
நரசிம்மவர்மன் முதல் கலிங்கத்து காரவேலன் வரை - இந்தியாவை ஆண்ட இந்த மன்னர்களை தெரியுமா?canva
Published on

மாவீரன் சிவாஜி, சந்திரகுப்த மௌரியா, சாம்ராட் அசோகர், புலிகேசி, ராஜ ராஜ சோழன், திப்பு சுல்தான் என்று பல இந்திய அரசர்கள் அவர்களது ஆட்சிக்காலம் குறித்து நாம் வரலாற்று பதிவுகளை படித்திருக்கிறோம்.

பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக இவர்களில் சிலர் போராடியதும், இவர்களது காலத்தில் கலை, இலக்கியம், அரசியல் ஆகியவை எத்தகைய முக்கியத்துவம் பெற்றிருந்தது என்பதையும் நாம் அறிவோம்.

ஆனால், இந்திய வரலாற்றில் முக்கிய அங்கம் வகித்த இன்னும் சில மன்னர்களும் ராணிகளும் இருக்கின்றனர். இவர்கள் பரவலாக அறியப்படவில்லை. பேரரசர்களாகவும், நீண்ட காலத்திற்கும் இவர்கள் ஆட்சி புரிந்துள்ளனர். அவர்கள் யார், வரலாறு என்ன என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்

முதலாம் நரசிம்மவர்மன்:

பல்லவ மன்னனான முதலாம் நரசிம்மவர்மன் தமிழகத்தின் காஞ்சிபுரத்தை ஆட்சி செய்து வந்தார். இவர் கலைகளில் அதீத ஆர்வம் கொண்டவர். மிகவும் பலசாலியான நரசிம்மவர்மனை மல்லயுத்ததில் வீழ்த்த ஆள் இல்லை. இதனால், இவருக்கு இவரது தந்தை மாமல்லன் என்ற பட்டப்பெயரை வழங்கினார்.

நரசிம்மவர்மன் வாதாபியை ஆண்ட சாளுக்கிய மன்னன் புலிகேசியை வீழ்த்தினான். இன்றைய மகாபலிபுரத்தில் உள்ள சிலைகளை இவரது தந்தையின் காலத்தில் தொடங்கி, நரசிம்மவர்மனின் ஆட்சிக்காலத்தில் முடிக்கப்பட்டவை.

கல்கி எழுதிய சிவகாமியின் சபதம் நாவலில் நரசிம்மவர்மனின் வரலாற்று கதை கூறப்பட்டிருக்கும்.

முதலாம் நாகபட்டா மன்னர்

குர்ஜர ப்ரதிஹரா வம்சத்தை உருவாக்கியவர் அரசர் முதலாம் நாகபட்டா. இவர் அவந்தி என்ற இடத்தை ஆட்சிபுரிந்து வந்தார். இது இன்றைய மத்திய பிரதேசத்தில் அமைந்திருக்கிறது. தற்போதைய பாகிஸ்தான் மாகாணமான சிந்த் மீது அரபு அரசர்கள் படையெடுப்பை இவர் தடுத்ததாக வரலாறு சொல்கிறது.

நரசிம்மவர்மன் முதல் கலிங்கத்து காரவேலன் வரை - இந்தியாவை ஆண்ட இந்த மன்னர்களை தெரியுமா?
Pablo Escobar : உலகை மிரள வைத்த கடத்தல் மன்னன் பாப்லோ எஸ்கோபர் வரலாறு! | News Sense

ராணா ஹமீர் சிங்:

ராஜஸ்தானின் மேவார் பகுதியின் அரசரான ராணா, துக்லக் படைகளை எதிர்த்து போரிட்டு மன்னன் முகமது பின் துக்லக்கை சிறைப்பிடித்ததாக வரலாறு சொல்கிறது. துருக்கிய படையெடுப்பகளின் போது, எதிர்ப்பு தெரிவித்து அடிபணியாமல் இருந்த ஒரே ராஜ்ஜியம் மேவார் தான்.

ராணி அப்பாகா சௌதா:

கர்நாடகாவின் துளுநாடு என்ற இடத்தில் உள்ள உல்லால் பகுதியை ஆண்டு வந்தார் ராணி அப்பாகா சௌதா. கிட்ட தட்ட 40 ஆண்டுகள் ஆட்சி புரிந்த இவர், தனது ஆட்சிக் காலத்தில் பல முறை படையெடுத்து வந்த போர்த்துகீசிய படைகளை வீழ்த்தியிருக்கிறார்.

சாந்த் பிபி:

பஹாமனி சுல்தான் காலத்தில் பிஜாபூர் மற்றும் அகமதுநகரை ஆட்சி செய்தார் சாந்த் பிபி. 1595 ஆம் ஆண்டு முகலாய பேரரசன் அக்பர் படையெடுத்து வந்தபோது அகமதுநகரை பாதுகாத்ததற்காக இவர் பிரபலமானார்.

நரசிம்மவர்மன் முதல் கலிங்கத்து காரவேலன் வரை - இந்தியாவை ஆண்ட இந்த மன்னர்களை தெரியுமா?
கோஹினூர் : சபிக்கப்பட்ட வைர கல் அதிகாரத்தின் குறியீடு ஆனது எப்படி? - ஒரு சுவாரஸ்ய வரலாறு

பேரரசன் அமோகவர்ஷா:

ராஷ்டிரகூட மன்னர்களில் மிகவும் பிரபலமான அரசன் அமோகவர்ஷா. இவர் 64 ஆண்டுகள் மன்னராக திகழ்ந்தார். இந்திய வரலாற்றில், மிக நீண்ட ஆட்சிகளில் ஒன்றாக இது அறியப்படுகிறது. இவரது ஆட்சிக்காலத்தில் தான் ராஷ்டிரகூட மன்னர்வம்சம் மிக அதிக புகழை அடைந்தது. இவர் கன்னடத்தில் கவிராஜமார்கா என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இவரது மதக் கோட்பாடுகளுக்காக ’தென்னிந்தியாவின் அசோகன்’ என்று இவர் அறியப்பட்டார்.

மன்னன் லலிதாதித்யா முக்தபீடா:

காஷ்மீரின் கார்கோட்டா வம்சத்தின் ராஜாவான லலிதாதித்யா விந்திய மலை வரை படையெடுப்புகளை நடத்தி ராஜ்ஜியங்களை கைப்பற்றினார். காஷ்மீரிலுள்ள பிரபலமான மார்தண்ட் சூரிய கோவிலை இவர் தான் எழுப்பினார்.

கலிங்கத்து காரவேலன்

ஒரிசாவின் மகாமேகவாகன மன்னர் வம்சத்தை சேர்ந்த கார்வேல மன்னன், தெற்கில் பாண்டிய மன்னனை எதிர்த்து போரிட்டவர். பாண்டிய குலத்திற்கு சொந்தமான பகுதிகளை கைப்பற்றியதோடு அல்லாமல், இவர் பீகாரின் மகத மன்னர்களையும் வீழ்த்தினார்

நரசிம்மவர்மன் முதல் கலிங்கத்து காரவேலன் வரை - இந்தியாவை ஆண்ட இந்த மன்னர்களை தெரியுமா?
Travel: தாஜ் மஹால் டு காத்மண்டு - நிச்சயம் பார்க்கவேண்டிய UNESCO World Heritage Sites

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com