Twitter: 57,000 கணக்குகள் நீக்கம் - ஆபாச படங்களுக்கான தளமாகும் சமூக வலைத்தளம்?

தொடக்கத்தில் இருந்தே குழந்தைகள் தொடர்பான பாலியல் மற்றும் ஆபாசப் பட விவகாரத்தில் டெல்லி பெண்கள் ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது.
Twitter
TwitterCanva
Published on

குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்களை பரப்புவதாகக் கூறி 57,000 ட்விட்டர்கள் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் ஆபாசப் படங்கள் வேண்டுமா வேண்டாமா என்பதில் பலருக்கு மாற்றுக் கருத்துகள் இருக்கின்றன. ஒன்றிய அரசு பல ஆபாசப் படத் தளங்களுக்கு தடை விதித்திருக்கிறது. ஆனால் குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படம் பரவக் கூடாது என்பதில் இந்தியாவில் பலருக்கும் ஒருமித்த கருத்து நிலவுவதைப் பார்க்க முடிகிறது.

அப்படி சமீபத்தில் இந்தியாவில் குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்களைப் பரப்பியதாகக் கூறப்பட்ட அல்லது அதனோடு தொடர்புடைய சுமார் 57,000க்கும் மேற்பட்ட கணக்குகளை ட்விட்டர் முடக்கியுள்ளதாக கடந்த சனிக்கிழமை தகவல் வெளியானது.

இத்தனை ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட குழந்தைகள் ஆபாசப் படம் தவிர வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? எந்த காலகட்டத்தில் இத்தனை கணக்குகள் முடக்கப்பட்டன? வாருங்கள் பார்ப்போம்.

தொடக்கத்தில் இருந்தே குழந்தைகள் தொடர்பான பாலியல் மற்றும் ஆபாசப் பட விவகாரத்தில் டெல்லி பெண்கள் ஆணையம் தனி கவனம் செலுத்தி வருகிறது.

Twitter
Porn: ரயில் நிலைய இலவச wifi-ல் ஆபாச படங்களை ட்வுன்லோட் செய்யும் பயணிகள்- அதிர்ச்சி தகவல்

இந்த வாரத் தொடக்கத்தில், குழந்தைகள் ஆபாசப் படம் தொடர்பாக ட்விட்டர் நிறுவனத்தின் பதில் திருப்திகரமாக இல்லை என டெல்லி பெண்கள் ஆணையத்தின் தலைவர் சுவாதி மாலிவால் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

ட்விட்டரில் பரவி வரும் காணொளிகளில் குழந்தைகள் நிர்வாணமாக இருப்பதும், கடும் வன்புணர்வுக்கு ஆளாக்கபப்டுவதும், அவர்களுக்கு விருப்பமே இல்லாமல் உடலுறவு கொள்ள வைப்பது அல்லது பாலியல் செயல்பாடுகளில் ஈடுபட வைப்பது போன்றவைகளும் அடக்கம்.

குழந்தைகள் & பெண்கள் வன்புணரப்படும் காணொளிகள், குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்கள் ட்விட்டர் தளத்தில் பரவுவது தொடர்பாக கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி, ட்விட்டர் இந்தியா அலுவலகத்தின் கொள்கை தலைவர் & டெல்லி காவல்துறைக்கு டெல்லி பெண்கள் ஆணையம் அழைப்புவிடுத்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக யாரும் எந்த வித புகாரும் அளிக்காத போதும், தன்னிச்சையாக டெல்லி பெண்கள் ஆணையம் இதை கையில் எடுத்துக் கொண்டு விசாரித்தது.

ட்விட்டர் நிறுவனம் குழந்தைகள் ஆபாசப் படம் தொடர்பாக 41 வலைதளங்கள் (யூ ஆர் எல்) மீது நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், 76 புகார்களின் அடிப்படையில் பல ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட உள்ளதாகவும் கூறியது. இப்படி தங்களுக்கு வரும் புகார்களின் அடிப்படையில் எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறியது.

Twitter
விமான நிலையத்தில் ஒளிபரப்பான ஆபாச வீடியோ - பயணிகள் முகச்சுளிப்பு

ட்விட்டர் நிறுவனம் ஒருபோதும் குழந்தைகள் பாலியல் ரீதியில் சுரண்டப்படுவதை ஏற்றுக் கொள்ளாது. அது தனிப்பட்ட முறையில் செய்தி அனுப்பிக் கொள்வதாக இருக்கட்டும் அல்லது ட்விட்டர் தளத்தில் வேறு ஏதேனும் வழிமுறையாகவோ, இடமாக இருக்கலாம் என்றும் தன் தரப்பை தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும் கடந்த 2022 ஜூலை 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 25ஆம் தேதி வரையான காலகட்டத்தில் மட்டும் 57,643 ட்விட்டர் கணக்குகள், குழந்தைகள் தொடர்பான பாலியல் காட்சிகள், அவர்கள் அனுமதியின்றி எடுக்கப்பட்ட ஆபாசப் படங்களை பரப்பிய காரணத்துக்காக இந்தியாவில் முடக்கியுள்ளதாக கடந்த சனிக்கிழமை கூறியது.

கடந்த சில காலமாக, ட்விட்டர் தளத்தில் குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்கள் பரவி வருவதாகவும், சில பெரிய நிறுவனங்களின் விளம்பரங்களே குழந்தைகள் தொடர்பான பாலியல் பதிவுகளை ஒட்டி விளம்பரப்படுத்தப்படுவதாகவும் செய்திகள் வெளியாயின.

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் போன்ற நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் கூட ட்விட்டர் மீதான குற்றச்சாட்டுகள் கவலைக்குரியது என்று கூறி இருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

Twitter
"ஆபாசப் படங்களை சட்டவிரோதமென அறிவிக்க வேண்டும்" - முன்னாள் MILF நாயகி லானா ரோட்ஸ்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com