கோபம் இந்த விஷயத்தில் உங்களுக்கு உதவலாம் - அறிவியல் சொல்வதென்ன?

"கோபம் நாம் அடைய வேண்டிய இலக்கை நோக்கி உந்தித்தள்ளுகிறது என்பதை இந்த ஆய்வு நிரூபித்துள்ளது. இதனால் வெற்றி அடைவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன" என்கிறார் இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியர் டாக்டர் ஹெதர் லென்ச்.
கோபம் இந்த விஷயத்தில் உங்களுக்கு உதவலாம் - அறிவியல் சொல்வதென்ன?
கோபம் இந்த விஷயத்தில் உங்களுக்கு உதவலாம் - அறிவியல் சொல்வதென்ன?Twitter

"ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு" என சொல்வதைக் கேட்டிருப்போம். இதனை பொய்யாக்குகிறது புதிய ஆய்வு ஒன்று.

தந்திரமான சவாலை நாம் சமாளிக்க வேண்டிய நேரத்தில் கோவம் நமக்கு கைகொடுக்கும் என ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

உணர்ச்சிவசப்பட்டு நடக்காதவர்களை விட கோபப்படுபவர்கள் தந்திரமான சவால்களை எளிதாக வெல்ல முடியும் என இந்த ஆய்வு கூறுகிறது.

"கோபம் நாம் அடைய வேண்டிய இலக்கை நோக்கி உந்தித்தள்ளுகிறது என்பதை இந்த ஆய்வு நிரூபித்துள்ளது. இதனால் வெற்றி அடைவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன" என்கிறார் இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியர் டாக்டர் ஹெதர் லென்ச்.

Journal of Personality and Social Psychology என்ற இதழில் இந்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

Texas A&M பல்கலைக்கழக ஆய்வாளர்கள் எப்படி 1000க்கும் மேற்பட்ட நபர்களை வைத்து ஆய்வுகளை மேற்கொண்டனர் என்றும் 1400க்கும் மேற்பட்ட நபர்களிடம் கணக்கெடுத்து கிடைக்கப்பட்ட தகவல்கள் இந்த ஆய்வுக்கு எவ்வாறு உதவின என்றும் அந்த இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு ஆராய்ச்சியில், மாணவர்களுக்கு கோபம், ஆசை, கேளிக்கை, சோகம் போன்ற உணர்ச்சிகளை தூண்டக் கூடிய புகைப்படங்கள் அல்லது எந்த உணர்வையும் ஏற்படுத்தாத புகைப்படங்கள் காட்டப்பட்டன.

அதன் பிறகு அவர்கள் ஒரு வார்த்தைப் புதிரை கண்டுபிடிக்கக் கேட்டுக்கொள்ளப்பட்டனர். கடினமான வார்த்தைப் புதிர்களை மற்ற உணர்ச்சியில் இருந்தவர்களை விட கோவத்தில் இருந்தவர்கள் விரைவாக கண்டறிந்துள்ளனர்.

சுலபமான புதிர்களையும் விடுவிக்க கோபமே பயன்பட்டிருக்கிறது. கோபத்துக்கும் விடா முயற்சிக்கும் இடையில் தொடர்பு இருப்பதை ஆய்வாளர்கள் விளக்குகின்றனர். ஏனென்றால் ஆய்வில், கோபத்தில் இருந்தவர்கள் கடினமான வார்த்தைப் புதிர்களில் அதிகநேரம் செலவிட்டிருக்கின்றனர்.

கோபம் இந்த விஷயத்தில் உங்களுக்கு உதவலாம் - அறிவியல் சொல்வதென்ன?
காதல்,காமம், கொஞ்சம் உளவியல் : உடலுறவில் துணையுடன் ‘எட்ஜிங்’ டெக்னிக் செய்வது எப்படி? - 33

உடல் ரீதியிலான போட்டிகளிலும் கோபம், கேளிக்கை அல்லது ஆசை ஆகிய உணர்வுகளில் இருந்தவர்கள் சோகமாகவும் நடுநிலை உணர்வு கொண்டவர்களை விடவும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

கோபத்தில் இருந்தவர்கள் வீடியோ கேம்களையும் சிறப்பாக விளையாடிருக்கின்றனர்.

மற்ற உணர்ச்சிகளில் இருந்தவர்களை விட கோபம் அல்லது கேளிக்கையில் இருந்தவர்கள் விளையாட்டில் அதிகமாக ஏமாற்ற முயன்றுள்ளனர் என்றும் ஆய்வு கூறுகிறது.

கோபம் இந்த விஷயத்தில் உங்களுக்கு உதவலாம் - அறிவியல் சொல்வதென்ன?
உங்களுக்கு அடிக்கடி இந்த கனவு வருதா? அறிவியல் சொல்லும் அர்த்தம் என்ன?

மக்கள் பெரும்பாலும் நேர்மறையான உணர்ச்சிகளையே பயன்படுத்த விரும்புகின்றனர். எதிர்மறை உணர்ச்சிகளை மோசமானதாக கருதுகின்றனர்.

சில சூழ்நிலைகளில் நாம் எதிர்மறை உணர்வுகளைப் பயன்படுத்துவதும் நமக்கு பலனளிக்கும் எனக் கண்டறிந்துள்ளனர்.

மேலும் நம் நல்வாழ்வுக்கு நேர்மறை உணர்வுகளுடன் எதிர்மறை உணர்வுகளும் கலந்திருக்க வேண்டும் என்கிறது இந்த ஆய்வு.

கோபம் இந்த விஷயத்தில் உங்களுக்கு உதவலாம் - அறிவியல் சொல்வதென்ன?
4 ஆண்டுகள் காட்டுக்குள் மறைவு; சுகாதாரமற்ற வாழ்க்கை - முன்னாள் ஈழ போராளியின் அவலநிலை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com