காதல்,காமம், கொஞ்சம் உளவியல் : உடலுறவில் துணையுடன் ‘எட்ஜிங்’ டெக்னிக் செய்வது எப்படி? - 33
முந்தைய பதிவில் தனியாக எட்ஜிங் டெக்னிக் செய்வது எப்படி எனப் பார்த்தோம். தன் துணையுடன் எட்ஜிங் முயற்சி செய்வது எப்படி என இந்தப் பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : தாம்பத்யம் சிறக்க செய்யும் Edging Technique - 32
1) தரமான லூப்ரிகன்ட்டை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஜெல் அல்லது வாட்டர் பேஸ்டு நல்லது.
2) உங்கள் துணையை அவர்கள் விரும்பும் விதத்தில் உடல் ரீதியாக உற்சாகப்படுத்துங்கள். கிளிட்டோரல், ஜி-ஸ்பாட் தூண்டுதல், நிப்பிள் ப்ளே போன்றவற்றைத் தொட்டு ஃபோர்ப்ளே செய்யலாம். ஓரல் செக்ஸ் செய்ய முயற்சி செய்யலாம். பெண், தன் துணையின் ஆண்குறியில், அவர்கள் விரும்பும் வழியில் அவர்களைத் தொடவும். அவர்களை எட்ஜிங் நிலைக்குக் கொண்டு செல்லுங்கள். உங்கள் துணை கண் மூடி அவரின் சொந்த உடலில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் எவ்வளவு கட்டுப்பாட்டை எடுக்க முடியுமோ அவ்வளவு சிறந்தது.
3) துணையின் உச்சநிலையைக் கண்டறியவும். சிலர் இன்பத்தில் பேசுவார்கள், செக்ஸ் டாக் செய்வார்கள். அதைக் கவனிக்கலாம். இது முக்கியமானதாக இருக்கும். ஏனென்றால் தூண்டுதலை எப்போது குறைக்க வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு உங்களுக்கு இருக்க வேண்டும்.
4) உங்கள் துணை உச்சக்கட்ட உணர்வு வரப் போகிறேன் என்று கூறும்போது (அல்லது அவர்கள் நெருக்கமாக இருப்பதை அவர்கள் சிக்னலாக சொல்லும்போது), தூண்டுதலை முற்றிலுமாக நிறுத்துங்கள். அவர்களை ஓய்வு எடுக்கச் சொல்லுங்கள். சுவாசத்தையும் உடலையும் இயல்பு நிலைக்குத் திரும்ப அனுமதிக்கவும்.
5) 2-4 முறை இதே வழிகளை மீண்டும் மீண்டும் தூண்டுதல் செயல்முறையைச் செய்யவும்.
6) இறுதியாக இம்முறை உங்கள் துணையிடம் மீண்டும் செல்லுங்கள். இந்த முறை, அவர்கள் உச்சத்தை (peak) அடைந்தவுடன் உச்சக்கட்டத்தை (orgasm) அடைய அனுமதிக்கவும்.
7) இதைப் பற்றி உங்கள் துணை என்ன விரும்பினார்? அதில் உங்களுக்கு என்ன பிடித்தது? நீங்கள் இருவரும் எப்படி உணர்ந்தீர்கள்? எனப் பேசிக் கொள்ளலாம். இதன் மூலம் அடுத்த முறை நீங்கள் பயிற்சி செய்யும்போது, நீங்கள் இன்னும் சிறப்பாகச் செய்ய முடியும். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், இது பயிற்சி மட்டுமே, செக்ஸில் தேர்ச்சி பெற நேரம் எடுக்கும்.
எட்ஜிங் டிப்ஸ் 1: முன்விளையாட்டின் (ஃபோர்ப்ளே) வடிவமாக எட்ஜிங்கைப் பயன்படுத்தவும்.
உங்கள் துணை உங்களுடன் வாய்வழி உடலுறவு (ஓரல் செக்ஸ்) கொண்டாலோ அல்லது ஆண்குறி மூலம் உடலுறவு கொண்டாலோ, அவர்களின் விருப்பப்படி நிறுத்திவிட்டு தொடங்கச் சொல்லுங்கள். உங்கள் உச்சத்தைக் `கட்டுப்படுத்தும் சக்தியை உங்கள் துணைக்கு வழங்குவது அவர்களுக்கும் உங்களுக்கும் நம்பமுடியாத அளவிற்கு இன்பமானதாக இருக்கும்.
எட்ஜிங் டிப்ஸ் 2: அனல் ப்ளேக்கு (Anal Play என்பது ஆசனவாய் வழியாக தூண்டுதல் செய்வது) தயார் செய்ய எட்ஜிங்கைப் பயன்படுத்தவும்.
அனல் ப்ளே விளையாட்டில் நீங்கள் ஆர்வமாக இருந்தால், உங்களைத் தயார்படுத்துவதற்கு எட்ஜிங் முறை ஒரு சிறந்த வழியாகும். அனல் ப்ளே விளையாட்டு இன்பமாக இருக்க, நீங்கள் நிதானமாக இருக்க வேண்டும்; நீங்கள் உங்கள் ஆசனவாயை இறுக்கினால், எந்த வகையான ஊடுருவலும் வலியை ஏற்படுத்தும். வலி உணரத் தொடங்கினால் செக்ஸில் இன்பம் இருக்காது. யாரும் அதை விரும்புவதும் இல்லை.
"அனல் ப்ளே விளையாட்டின் மூலம் நீங்கள் பலமுறை உச்சக்கட்டத்தை நெருங்கலாம். இன்பமான உணர்வு கிடைக்கும் இடத்தில் அதிகத் தூண்டுதல் செய்யவும். இதனால் செக்ஸ் அனுபவம் வித்தியாசமாகவும் சிறப்பாகவும் இருக்கும்" என்று செக்ஸ் நிபுணர்கள் கூறுகிறார்கள். மேலும் "இந்தப் புதிய உணர்வை அதிக இன்பம் தரும் செக்ஸ் நிலைகளுடன் (Sex position) இணைக்க நீங்கள் கற்றுக்கொண்டால், உங்களின் செக்ஸ் வாழ்க்கை மிகவும் சிறப்பானதாக அமையும்." வலி இல்லாமல் இருக்க, எரிச்சல் இல்லாமல் இருக்கத் தேவையான லூப்பிரிகேஷன் பயன்படுத்த மறக்காதீர்கள்!
உங்கள் எட்ஜிங் (Edging Experience) அனுபவத்தை மேம்படுத்த செக்ஸ் டாய்ஸை எவ்வாறு பயன்படுத்துவது?
1) நீங்கள் பயன்படுத்த விரும்பும் செக்ஸ் டாய்ஸ்ஸை தேர்ந்தெடுக்கவும். பொதுவாக எந்த டாய்ஸ்களும் இதற்குச் சிறந்ததாகவே இருக்கும். உங்களிடம் செக்ஸ் டாய்ஸ் இல்லை என்றால் தற்போது மார்க்கெட்டில் நிறையக் கிடைக்கின்றன. வாங்கி கொள்ளலாம்.
2) தரமான லூபை எடுத்து உங்கள் டாய்ஸில் தடவவும். ஆணுறுப்பு/கிளிட்டோரிஸ்/வுல்வா மீது வைக்கவும். நீங்கள் வைத்திருப்பது சிலிக்கான் டாய்ஸ் என்றால் அதற்கு வாட்டர் பேஸ்டு லூப்ரிகன்ட்தான் பயன்படுத்த வேண்டும். சிலக்கான் பேஸ்டு லூப்ரிகன்ட் பயன்படுத்த கூடாது.
3) நீங்கள் இதற்கு முன்பு இந்த டாய்ஸைப் பயன்படுத்தவில்லை என்றால், எட்ஜிங் டெக்னிக்குக்கு செல்வதற்கு முன் அதைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். செக்ஸ் டாய்ஸ் முற்றிலும் புதிய வழியிலான இன்பத்தை உணரும் திறனை வழங்குகின்றன. நீங்கள் வெவ்வேறு இடங்களில் வைத்து, இன்ப உணர்வை பெறலாம்.
4) உங்கள் செக்ஸ் டாய்ஸ் உடனான தொடர்பை நீங்கள் சௌகரியமாக உணர்ந்தவுடன், எட்ஜிங் பயிற்சிக்குச் செல்லலாம். உச்சக்கட்டத்தை நெருங்கும் முன் நிறுத்துங்கள். ஓய்வு எடுங்கள். மீண்டும் டாய்ஸ் மூலம் தொடுதல் பயிற்சியில் ஈடுபடுங்கள். மீண்டும் உச்சக்கட்டம் நெருங்கியதும் நிறுத்துங்கள்.
5) அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம்.
6) 3-4 முறை நிறுத்தி, மீண்டும் செய்வது நல்லது
7) இறுதியாக உங்கள் உச்சநிலையை அனுபவிக்க விடுங்கள்.
விரைவில் விந்து வெளியேறும் பிரச்சனையுள்ளவருக்குச் சிறந்த பயிற்சி. இந்தப் பிரச்சனை இல்லாதவருக்கும் எட்ஜிங் சில பலன்களைத் தரும். இது உங்கள் சொந்த உடல், ஆசைகள் பற்றி நீங்கள் அதிகம் தெரிந்துகொள்ள உதவுகிறது. மேலும் இது உங்கள் துணையுடன் சேர்ந்து செய்ய செக்ஸ் வாழ்க்கை இன்பமாக அமையும்.
"கணவன் மனைவியிடம் ஒரு இணைப்பை உருவாக்குவதில் சிறந்தது, இந்த எட்ஜிங் முறை. இந்தக் காலத்தில் தம்பதிகள் அதிகம் செய்யாத முறைதான் இது" என்கிறார் செக்ஸ் நிபுணர். மேலும் அவர், "எட்ஜிங் என்பது நாங்கள் எங்களிடம் வருகின்ற பேஷன்ட்ஸுக்கு செய்யச் சொல்லி பரிந்துரைக்கிறோம். உங்கள் துணையின் அனுபவத்தையும் இன்பத்தையும் கட்டுப்படுத்துவது உற்சாகமான ஒரு விஷயம். செக்ஸ் வாழ்க்கை சிறப்பாக இருந்தால் உங்களின் சொந்த வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்” என்கிறார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust