Play Store: பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்படும் 30% செயலிகள் - காரணம் என்ன?

சுமார் ஐந்து வருடங்களுக்கும் மேலாக அப்டேட் செய்யப்படாமல் இருக்கும் ஏறக்குறைய 314,000 செயலிகள் கைவிடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இவற்றால் பாதுகாப்பு பிரச்னை ஏற்படலாம்!
Apps
AppsTwitter

இந்த ஆண்டின் தொடக்கத்தில் கூகிள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தன. குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அப்டேட் செய்யப்படாத செயலிகள் தங்களுடைய பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்படும் என்பது தான் அது. தற்போது அந்த அறிவிப்பின் படி சுமார் 30% செயலிகள் நீக்கப்படும் அபாயத்தைச் சந்தித்திருக்கின்றன.

அதிகாரப்பூர்வமான தகவலின்படி, சுமார் 1.5 மில்லியன் செயலிகள் ஆப்பிள் மற்றும் கூகிள் பிளே ஸ்டோரில் கைவிடப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது. இவற்றில் இரண்டு வருடங்களாக அப்டேட் செய்யப்படாமல் இருப்பவை மட்டும் இவ்வளவு என்று சொல்லப்படுகிறது. அவற்றில் பெரும்பாலும் Education, Games, References உள்ளிட்ட குழந்தைகள் பயன்பாட்டில் இருக்கிற செயலிகளே அதிகம்.

சுமார் ஐந்து வருடங்களுக்கும் மேலாக அப்டேட் செய்யப்படாமல் இருக்கும் ஏறக்குறைய 314,000 செயலிகள் கைவிடப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள். அவற்றில் கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து 42% (134 K) செயலிகளும், ஆப்பிள் பிளே ஸ்டோரில் இருந்து சுமார் 58% (184K) செயலிகளும் அடக்கம்.

கூகிள் மற்றும் ஆப்பிளின் இந்த எச்சரிக்கைக்குச் செவிசாய்த்து சுமார் 1.3 மில்லியன் செயலிகளை அப்டேட் செய்துள்ளனர் அதன் டெவெலப்பர்கள். இது கடந்த 6 மாதங்களில் மட்டும் நடைபெற்றிருக்கிறது.

ஆப்பிள் தரப்பிலிருந்து கூறுகையில், “ஏற்கனவே தரவிறக்கம் செய்து பயன்படுத்தி வரும் பயனாளர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது” எனத் தெரிவித்திருக்கிறது.

ஆப்பிளின் செயலிகள் மேம்பாட்டுப் பக்கத்தில், “தற்போதைக்கு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது செயலிகளின் மதிப்பீடு மற்றும் செயலிகள் நீக்கும் நடவடிக்கையானது நீண்டகால நோக்கம் கொண்டதல்ல. எனவே தற்போது இருக்கும் அறிவுரைகளைத் தொடர வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் கூகிளும் இதே போன்ற நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.|

Apps
Twitter : இனி ட்விட்களுக்கு பணம் கொடுக்கணுமா? - Elon Musk கொடுத்த பகீர் யோசனை

ஏன் கைவிடப்பட்ட செயலிகள் நீக்கப்பட வேண்டும்?

இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. கைவிடப்பட்ட செயலிகளினால் பாதுகாப்பு பிரச்சனைகள் வாய்ப்பு அதிகம். அப்டேட் செய்யப்படாத செயலிகளில் தேவையற்ற குப்பைகள் தேங்குவதோடு, அது பாதுகாப்பு பிரச்சனைகளுக்கு இட்டுச் செல்கிறது. ஒரு டெவலெப்பர் விளம்பரதாரர்களிடம் இருந்து வருமானம் பெற்று வருபவராக இருப்பின் தொடர்ச்சியாக அப்டேட் செய்வது முக்கியமானதாகிறது.

Apps
Elon Musk : ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தம் - என்ன காரணம்?

எப்போது இந்த செயலிகள் நீக்கப்படும்?

ஆப்பிள் தரப்பிலிருந்து டெவலப்பர்களுக்கு அனுப்பப்பட்ட மெயிலில் இது குறித்த தெளிவான அறிவிப்பு எதுவும் இல்லை. ஆனால் 30 நாட்கள் கால அவகாசத்திற்குள் அனைத்து செயலிகளும் அப்டேட் செய்யப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதே சமயம் கூகுள் இது பற்றித் தெளிவான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. நவம்பர் 1, 2022 அன்று முதல் இந்த நடவடிக்கை தொடங்கும் எனத் தெரிவித்திருக்கிறது.

Apps
Alien : மனிதக்குலத்தை வேற்றுகிரகவாசிகள் ஏன் பார்வையிடவில்லை?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com