பேய் இறால் முதல் கடல் தேவதை வரை : ஒளி ஊடுருவக் கூடிய 10 உயிர்கள் - ஆச்சரிய தகவல்கள்!

கடலில் நாம் ஆராய்ந்து பார்க்காத பல உயிரினங்கள் உள்ளன. உதாரணமாக கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் தான் வெளிப்படையான தலையை உடைய பேரிலி மீன் கண்டறியப்பட்டது.
பேய் இறால் முதல் கடல் தேவதை வரை : ஒளி ஊடுருவக் கூடிய 10 உயிர்கள் - ஆச்சரிய தகவல்கள்!
பேய் இறால் முதல் கடல் தேவதை வரை : ஒளி ஊடுருவக் கூடிய 10 உயிர்கள் - ஆச்சரிய தகவல்கள்!Twitter

உடலில் உள்ள உள் உறுப்புகள் தெரியும் படி அல்லது உடலுக்கு மறுபக்கம் உள்ள பொருட்கள் தெளிவாக தெரியும்படி ஒளிபுகும் உடல்களைக் கொண்டுள்ள கடல்வாழ் உயிரினங்களைப் பற்றி தான் நாம் பார்க்கப் போகிறோம்.

கடலில் நாம் ஆராய்ந்து பார்க்காத பல உயிரினங்கள் உள்ளன. உதாரணமாக கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் தான் வெளிப்படையான தலையை உடைய பேரிலி மீன் கண்டறியப்பட்டது.

உடனடியாக உங்களுக்கு ஜெல்லி மீன்கள் நினைவுக்கு வரலாம். ஆனால் அவற்றை விட நம்மை மலைக்கவைக்கக் கூடிய பல உயிரினங்கள் கடலில் இருக்கின்றன.

Ghost Shrimp - பேய் இறால் மீன்

பல இறால் மீன்களின் ஓடு ஒளி ஊடுருவக் கூடிய தன்மையைப் பெற்றிருக்கும். ஆனால் இதன் உடலும் ஒளி ஊடுருவக் கூடியது. உப்புத்தண்ணீரில் மட்டுமே வசிக்கும்.

இது குப்பை மற்றும் அழுக்குகளைத் தின்று வாழ்ந்தாலும் சுத்தான உடலைப் பெற்றிருக்கிறது!

Barreleye Fish - பேரிலி மீன்

முன்பு குறிப்பிட்டது போல இதன் தலை மட்டும் ஒளி ஊடுருவக்கூடியது. போர் விமானத்தில் காக்பிட் மட்டும் கண்ணாடியால் ஆனது போல இருக்கும்.

இதன் கண்கள் போல சிறியதாக இருக்கும் இரண்டு உறுப்புகள் வாசனையைக் கண்டறிய உதவுகின்றன.

இதன் கண்கள் தெளிவாக தெரியும்படி தலைக்கு உள்ளே இருக்கின்றன. இவை அதிக ஒளிஉணர்திறன் கொண்டவை எனக் கூறப்படுகிறது.

இதன் உள் உறுப்புகள் ஆழ்கடலின் இருட்டில் ஒளிரக் கூடியவை. இதன் உடலில் இருக்கும் ஒளிர்-உயிர் பாக்டீரியாக்களால் இவ்வாறு மினுங்குகிறது எனக் கூறப்படுகிறது.

இவை கடலின் அதியாழத்தில் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Crocodile Icefish - முதலை ஐஸ்மீன்

பார்க்க பேய்களின் பெட் அனிமல் போல இருக்கும் இந்த மீன் அண்டார்டிகாவில் காணப்படுகிறது.

இதற்கு நிறமற்ற இரத்தம் இருக்கிறது. அதாவது இதன் இரத்தத்தில் ஹீமோகுளோபின் இருக்காது.

இதன் உள்ளுறுப்புகள் சிலவற்றை நாம் பார்க்கலாம், எலும்புகள் கொஞ்சம் தின்னமாக இருக்கும். மற்றபடி, முழு உடலும் ஒளி ஊடுருவக்கூடியதே,

Sea Salp கடல் சல்ப்

ஒல்லியாக ஒளிஊடுருவும் தன்மைக் கொண்ட இந்த மீன்கள் இதன் விசித்திரமான வாழ்க்கைச்சுழற்சிக்காக அறியப்படுகின்றன.

4 அங்குலம் நீளமான இவை தனியாகவும் சில நேரங்களில் கூட்டு உயிரினமாகவும் இருக்கும்.

இவை கூட்டாக இருக்கும் போது 15 நீளமான சங்கிலியை உருவாக்குமாம்.

பேய் இறால் முதல் கடல் தேவதை வரை : ஒளி ஊடுருவக் கூடிய 10 உயிர்கள் - ஆச்சரிய தகவல்கள்!
கும்மிருட்டு, உறையவைக்கும் குளிர் - ஆழ்கடல் எப்படி இருக்கும்?

Transparent Sea Cucumber - ஒளிபுகும் கடல் வெள்ளரி

பார்பதற்கு ஏலியன் போல இருக்கும் இது கடலில் 2750 மீட்டர் ஆழத்தில் கடலடி தரையில் வசிக்கிறது.

இது தரையில் மெதுவாக ஊர்ந்து செல்கிறது. பல கால்கள் போன்ற உறுப்பால் மெதுவாக கடல் வண்டலில் நடக்கிறது.

எவ்வளவு மெதுவாக என்றால் ஒரு நிமிடத்துக்கு 2 செ.மீ தான் முன்னேறும். இப்படி நடக்கும் போது மண்ணில் உள்ள பொருட்களை உறிஞ்சிக்கொள்ளும்.

Glass Squid - கண்ணாடி மீன்

கண்ணாடி மீன்களில் மொத்தம் 60 வகை இருக்கின்றன. இவை கிரான்சிடே என்ற குடும்பத்தைச் சேர்ந்தவை.

இவை வெளிப்படையான தோல்வழியாக செரிமான சுரப்பிகளை மட்டும் பார்க்கமுடியும்.

இவற்றில் சிலவகை மீன்களின் கண்களுக்கு அடிப்பகுதி ஒளிரக் கூடியதாக இருக்கிறது.

பேய் இறால் முதல் கடல் தேவதை வரை : ஒளி ஊடுருவக் கூடிய 10 உயிர்கள் - ஆச்சரிய தகவல்கள்!
மரணமே இல்லாத உயிர்கள் 1: வயதாவதால் இறப்பது உறுதியா?- மரணத்தை கடந்து வாழும் ஜெல்லி மீன்கள்!

Cyanogaster - சயனோகாஸ்டர்

இந்த மீன் சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் கண்டறியப்பட்டது. நீல வயிறு இருக்கும். இது சில மில்லி மீட்டர்கள் தான் நீளமானது.

அமேசானின் துணைநதியான ரியோ நிக்ரோ நதியில் இந்த மீன் வாழ்கிறது. இதனை இரவில் மட்டுமே ஆய்வாளர்கள் பார்த்துள்ளனர்.

Sea Angel - கடல் தேவதை

ஒளி ஊடுருவக்கூடிய நத்தை வகையைச் சேர்ந்த இந்த உயிரினங்கள் ஆர்டிக் கடலின் குளிர்ந்த நீரில் வாழ்கின்றன.

போக்கேமானில் வரும் பியோன் மற்றும் மானாபி போன்ற பாத்திரங்கள் இந்த உயிரினத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானவையே.

பேய் இறால் முதல் கடல் தேவதை வரை : ஒளி ஊடுருவக் கூடிய 10 உயிர்கள் - ஆச்சரிய தகவல்கள்!
மரணமே இல்லாத உயிர்கள் 2: சிரஞ்சீவி 'ஹைட்ரா' - வெட்டிப் போட்டாலும் வளரும் உயிரினம்!

Warty Comb Jelly or Sea Walnut - வார்டி காம்ப் ஜெல்லி அல்லது கடல் வால்நட்

நெமியோப்சிஸ் (Mnemiopsis) என்றும் அழைக்கப்படும் இந்த உயிரினங்கள் அட்லாண்டிக் பகுதியைச் சேர்ந்தவை. ஆனால் ஐயோப்பா மற்றும் மேற்கு ஆசியப்பகுதிகளிலும் காணப்படுகின்றன.

இதில் வானவில் நிற நிறமிகள் வெளிப்புறத்தில் ஒளிருகின்றன. இவை 7-12 செ.மீ நீளமும் 2.5 செ.மீ விட்டமும் கொண்டிருக்கும்.

Glass Octopus - கண்ணாடி ஆக்டோபஸ்

வெப்பமண்டல கடல் பகுதியின் ஆழத்தில் இவைக் காணப்படுகின்றன.

பார்க்க விசித்திரமாகவும் திகிலாகவும் இருக்கும் இதனை பிடிப்பதோ, படமெடுப்பதோ மிக மிக கடினமான காரியம்.

இதற்கு எப்போதும் மேல் நோக்கி பார்த்துக்கொண்டிருக்கும் ஒளி ஊடுருவாத கண்கள் இருக்கின்றது.

இதனை விட்ரெலெடோனெல்லா ரிச்சார்டி (Vitreledonella richardi) என்றும் அழைக்கின்றனர்.

பேய் இறால் முதல் கடல் தேவதை வரை : ஒளி ஊடுருவக் கூடிய 10 உயிர்கள் - ஆச்சரிய தகவல்கள்!
மரணமே இல்லாத உயிர்கள் 3: இளமை மாறாத இறால்களை தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com