குருபெயர்ச்சி பலன்கள் 2022 - 2023 : மகர ராசி முதல் மீனம் வரை

சொந்த வீட்டில் பிரவேசிக்கும் இந்த குருபகவானால் பல நன்மைகள் ஏற்படும். பெரும்பாலும் மற்றவர்கள் பற்றிப் பேசாமலும் யாராவது பேசினால் அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிடுவதும் நல்லது.
குருபெயர்ச்சி
குருபெயர்ச்சி Twitter
Published on

மகரம் : உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் வரை

மகர ராசி நேயர்களுக்கு மூன்றாம் இடத்து குரு அற்புதமான பலன்களை வழங்க இருக்கிறார். ஆனால் கொஞ்சம் போராட்டம் நிறைந்ததாக இருக்கும் போராட்டம் நிறைந்தாலும், அதில் வெற்றி பெற முடியும் என்பதால், கவலைப்படாம வேண்டாம். நல்ல வேலை கிடைக்கும் நேரம் வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டு. பலருக்கு பழைய வண்டியை விற்க நேரிடும். புது வாகனம் வரும். பிள்ளைகளுடைய திருமணம் கல்வி சம்பந்தப்பட்ட உயர்வு கிடைத்துக்கொண்டே இருக்கும். உங்களுக்கு மிகச் சிறந்த வழிகாட்டியாக இருப்பவர்களை பிடித்துக் கொள்ளுங்கள். தொட்டது துலங்கும் தொழில் முன்னேற்றம் ஏற்படும். நினைத்த நேரத்தில் நினைத்த காரியங்களை செய்து முடிக்க, இறைவழிபாடும் குரு வழிபாடும் மிகவும் முக்கியம். கூடவே தானதர்மங்கள் செய்வதும் இருக்க உதவுவதும் நல்ல பலன்கள் வந்து சேரும். வங்கியில் சேமிப்புக் அஞ்சலக சேமிப்பு ஆகியவை இதுவரை தொடங்கப்படாமல் இருந்தால் வீட்டில் உள்ள அனைவருக்கும் ஏதாவது பொருள் சேமிப்பு ஆரம்பிக்க பழக்கப்படுத்திக் கொள்வது நல்லது.

அலர்ட் டைம் = வக்கிர காலம்

ஜூலை முதல் நவம்பர் வரையிலான, கால நேரத்தில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் கொடுக்கல் வாங்கலில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஜாமீன் கையெழுத்துப் போடுவது போன்ற விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டும். மூன்றாவது நபர்களை அவ்வளவு எளிதில் நம்பிவிட வேண்டாம். ஏற்கனவே நீங்கள் சுதாரிப்பாக இருக்கக்கூடிய எச்சரிக்கையாக இருக்கக் கூடிய நபர் என்றாலும், இந்த முறை கொஞ்சம் கூடுதல் கவனமாக இருப்பது நல்லது. பணவரவில் கொஞ்சம் முன்பின்னால் இருக்கலாம். அதே நேரத்தில் கோபப்பட்டு விட வேண்டாம். சில சொந்தங்கள் உங்களுக்கு முன்னால் ஒன்றும் பின்னால் ஒன்றும் பேசக் கூடியவர்களாக இருப்பார்கள். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. குரு வழிபாடும் சிவன் வழிபாடும் என்ற நல்ல பலன்களைத் தரும்

கும்ப ராசி
கும்ப ராசிTwitter

கும்ப ராசி நேயர்களே..


பேசியே காரியத்தைச் சாதித்துக் கொள்ளக்கூடிய நபர்களாக இருந்தால் உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி அமோகமாக இருக்கும். பேச்சுத்திறமையைப் பல நல்ல பலன்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள். அல்லது ரத்தின சுருக்கமாகப் பேசுபவர்கள் கூட சரியான நேரத்தில் சரியான இடத்தில் எதைப் பேச வேண்டுமோ அதைப் பேசி தன்னுடைய காரியத்தைச் சாதித்துக் கொள்வதற்காக நேரம். இந்த குருப் பெயர்ச்சி ஆகும் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விரையச் சனி நடப்பதால் சின்ன சின்ன விசயங்களில் நடக்கும் திடீர் விரயங்கள் உருவாகும். வாகனத்தில் பழுது பார்ப்பது வீட்டில் பழுது பார்ப்பது போன்ற சின்னசின்ன இடர்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதே நேரத்தில் நல்ல பலன்களாக புதிய திருப்பங்கள் ஏற்படும் புதிய தொழிலில் முன்னேற்றம், வண்டி வாகன சேர்க்கை, ஆடை ஆபரண சேர்க்கை போன்றவற்றை நீங்கள் கண்கூடாகப் பார்த்து மதிப்பு மகிழ்வீர்கள். நல்ல சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெற்றுக் கொண்டிருப்பதைப் பார்த்து ஆச்சரியப்படுவீர்கள், வெளிநாட்டிலேயே ரொம்ப நாட்களாக இருப்பவர்கள் மீண்டும் தாய் நாடு திரும்பலாம். அதேபோன்று இங்கு இருப்பவர்களில் வெளிநாடுகளுக்கும் செல்வதற்கான வெளிமாநிலங்களுக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் வந்தால், அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவும். பதவி உயர்வு வந்துசேரும். தொழில் புரிபவர்கள் புதிதாக இன்னொரு கடையைத் திறப்பதற்காக அல்லது சொந்த தொழில் செய்வதற்காக முயலலாம். அதுமட்டுமல்லாமல் இன்னொருவரிடம் அடிமையாக வேலை பார்த்த நிலை இப்போது மாறும். நீங்களாகவே சொந்த தொழில் செய்வது அல்லது புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சிTwitter

சின்ன சின்ன உடல் உபாதைகள் வந்து சேரலாம் அதைக் கவனமுடன் பார்த்துக் கொள்வது நல்லது ஆரம்பக் காலத்திலேயே அதைக் கண்டுபிடித்து அதற்கான தீர்வைக் கண்டு அதைச் சரி செய்து விட்டால் பெரிய பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கலாம் உயரதிகாரிகள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பார்கள். அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. கடன் உதவி உங்களுக்குக் கிடைக்கும். அதே போன்று நீண்ட நாட்களாகக் கொடுக்காமல் அடைக்காமல் வைத்திருந்த பணத்தை அடைப்பீர்கள். நீண்ட நாட்களாக உங்களுக்கு வராமலிருந்த பணம் வந்துசேரும் ஆனால் அதை ஞாபகம் வைத்துக்கொண்டு அமைதியான முறையில் கேட்டு வாங்க, நிச்சயம் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுக்குக் கீழ் பல பேர் பணிபுரிவார்கள். உயர் வாய்ப்புகள் உள்ளன. தெரியாத விஷயங்களில் மூக்கை நுழைத்து மாட்டிக் கொள்ளாதீர்கள். எல்லாம் தெரிந்தது போல உங்களைக் காட்டிக் கொள்வதன் மூலம் பெரிய பிரச்சினைகள் ஏற்பட வழிவகுக்கும். அதனால் தெரியாத தொழில் தெரியாத விஷயங்களில் தலையிடாமல், ஆமாம் எனக்குத் தெரியாது அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அமைதியாக ஒதுங்கிச் செல்வது பின்னால் வரக்கூடிய பிரச்சினைகளை முற்றிலுமாக தவிர்ப்பதற்கு வழிகாட்டியாக இருக்கும். சிலருக்கு திடீரென்று புதிய நம்பிக்கைத் துரோகிகள் அல்லது உடன் பணி புரிவோர் பணி செய்பவர்களால் தொல்லையோ ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அப்படி இருந்தால் அவர்கள் உங்கள் மீது வீண்பழி அவமானங்களிலிருந்து விடுபடுவதற்குக் கூட வாய்ப்பு உண்டு. அமைதியான முறையில் அதைக் கையாளுவது மிகவும் நன்மை பயக்கும். அதே நேரத்தில் இப்பொழுது விரய சனியும் நடைபெறுவதால் அதனால் ஏற்படக்கூடிய ஒரு கர்ம வினை என்று நினைத்துக்கொள்ளுங்கள். தானதர்மங்கள் செய்வதும் அன்னதானம் செய்வதன் மூலமும், தண்ணீர் பாட்டில் துணி போன்றவற்றை தானம் போன்றவற்றைச் செய்வதன் மூலம், உங்களுடைய கர்ம வினை பலன்களை வெகுவாக குறைக்கலாம். லக்ஷ்மி வழிபாடு முருகன் வழிபாடு வழிபாடு போன்றவற்றை அபரிமிதமான பலன்கள்.

மீன ராசி
மீன ராசிTwitter

மீன ராசி நேயர்களே

விட்டுக்கொடுக்கும் தன்மையும் அமைதியும் பொறுமையும் கொண்ட மீன ராசி நேயர்களுக்கு, இந்த குருப்பெயர்ச்சி மிகவும் சிறப்பானதாக இருக்கும். உங்களின் விட்டுக்கொடுக்கும் தன்மையைப் பலர் புரிந்து கொள்ளக்கூடிய காலகட்டமிது. பிரிந்திருந்த மனைவிகள் ஒன்று சேர்வார்கள்.. வீட்டில் சகோதர சகோதரிகளிடையே இருந்த பிரச்சினைகள் வாக்கு வாதங்கள் எல்லாம் முற்றிலும் தீர்ந்து உங்களைப் புரிந்து கொள்ளக்கூடிய காலகட்டமிது உயரதிகாரிகள் உங்களுக்குச் சிறப்பான வழிகளைச் செய்து கொடுப்பார்கள். தொழில் போட்டியாளர்கள் தானாகவே விலகி விடுவார்கள். படிப்படியாக உங்களுடைய முன்னேற்றங்களையும் வளர்ச்சிகளையும் காணக்கூடிய நேரம். பல முயற்சிகள் செய்து முடியாத காரியங்கள் ஒவ்வொன்றாக இனி நடந்தேறும். அதனால் மிகவும் உற்சாகமாக அடுத்தடுத்த முயற்சிகளில் களமிறங்க ஆரம்பிப்பீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடைபெறும். குழந்தை இல்லாதவர்கள் குழந்தைப்பேறு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகிறது. வருமானத்திற்கு ஏற்ற சேமிப்பை ஆரம்பித்தீர்கள் என்றால் நல்லது.உங்கள் வீட்டில் இருக்கும் அனைவரும் ஒன்று சேர்ந்து சீட்டுப் போடுவது அல்லது ஜாயிண்ட் அக்கவுண்ட் ஆரம்பிப்பது என்ற வகையில் சின்ன சின்ன முதலீடுகளிலிருந்து சின்ன சின்ன சேமிப்புகள் பெரிய பலன் தரும். வெளிநாட்டுக்குச் சென்று வேலை பார்க்கலாமா என்ற ஆர்வம் ஏற்படும். அதற்கான சூழ்நிலைகளும் வாய்ப்புகள் இருந்தால் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவும். நிறையச் செலவுகள் வந்து உங்களை அலைக்கழித்த நேரம் இப்பொழுது மாறி, வருமானம் வரக்கூடிய காலமாக அமையும். ஊதிய உயர்வு பதவி உயர்வு போன்றவை உங்களுக்கு ஏற்படும் தொழிலில் முன்னேற்றமும் ஏற்படும். வியாபாரிகள் புதிய விஷயங்களை மேற்கொள்ள ஆரம்பிப்பார்கள். எந்த வேலைக்குப் போவது என்ற குழப்பங்கள் வரக்கூடிய காலகட்டம் இது. அதே நேரத்தில் உங்களுக்கான சிறப்பான வேலை இதுதான் என்பது எங்கள் இனம் கண்டு கொள்வீர்கள். அதிலிருந்து பிடித்துக் கொண்டு உங்களுடைய முன்னேற்றங்கள் இனி தொடங்கும்.

குருபெயர்ச்சி
குருபெயர்ச்சி பலன்கள் 2022 - 2023 : துலாம் முதல் தனுசு வரை

சொந்த வீட்டில் குரு இருப்பதால் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக நடைபெறும். அதற்கான செலவுகளும் இருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். உங்கள் தலைமையில் சுபகாரியங்களும் நடப்பதற்கான சூழலும் சிலருக்கு அமையலாம். வெளியூர் வெளிநாடு சென்று வருவதற்கான வாய்ப்புகள் அமையும். அல்லது குடும்பத்தினருடன் ஒன்றாகச் சேர்ந்து ஆன்மிக பயணங்கள் வரலாற்றுப் பயணங்கள் அல்லது சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய பதவிகள் சிலருக்குக் கிடைக்கக் கூடிய காலகட்டம் இது. அதனால் நாம் முன்கூட்டியே யாரை எப்படி வேலை வாங்குவது எப்படிச் சமாளிப்பது அவர்களின் குணம் என்ன என்பதை முன்கூட்டியே கணித்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய திறமைகளையும் பட்டியலிட்டுக் கொள்ளுங்கள். செய்வது சரிதானா என்பதை அடிக்கடி சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். நீங்கள் பேசும் வார்த்தைகளால், கொடுத்த வாக்கால் பல வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று இருக்கிறீர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். அதுமட்டுமல்லாமல் வண்டி வாகன சேர்க்கை சிலருக்கு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

குருபெயர்ச்சி
குருபெயர்ச்சி பலன்கள் 2022 - 2023 : மேஷம் முதல் ரிஷபம் வரை

வக்கிக காலம் = அலர்ட் டைம்

ஜூலை முதல் நவம்பர் வரை குரு வக்ர காலமான நேரத்தில் அலைச்சல்கள் ஏற்படும். உங்களை அலைக்கழிப்பதற்காகவே பல விஷயங்கள் நடைபெறும். அதை நீங்கள் புரிந்து கொண்டீர்கள் என்றால் சமாளித்து விடலாம். ஒரு விஷயம் நடைபெறுவதற்காக அலையும் நேரங்களில், மற்ற விஷயங்களிலும் அதையெல்லாம் சாதித்துக் கொண்டு வந்துவிடலாம். உதாரணமாக வெளியூர் சென்று அவர் காரியத்தை முடிக்கவேண்டும் என்று தேவையில்லாமல் உளைச்சலை ஏற்படுத்தி இருந்தால், அந்த ஊருக்குச் சென்று சில நல்ல விஷயங்களை முடித்துவிட்டு வருவதோடு, பொன் பொருளை வாங்கிக் கொண்டு வருவதோ உறவினர்களைப் பார்த்து வருவது போன்று உங்களுக்கு வருகின்ற அலைச்சலையும் சந்தோஷமாக மாற்றிக் கொண்டால் பிரச்சனை இருக்காது. ஏற்கனவே இது நான் எதிர்பார்த்தது தான் அதை எப்படிச் சமாளிக்கிறேன் பார் என்று விதியை நீங்கள் கையாள ஆரம்பித்தீர்கள் என்றால் நலமே. உடல்நலக் குறைபாடு ஏற்படலாம் சிறு குறைபாடுகள் வரும் பொழுதே அதற்கான அறிகுறிகள் தெரியும் போதே முன்னேற்பாடாக அதைச் சரி செய்து கொள்ளுவது நன்மை பயக்கும். பெரிய பிரச்சினைகளிலிருந்து விடுபட உதவியாக இருக்கும். மொத்தத்தில் சொந்த வீட்டில் பிரவேசிக்கும் இந்த குருபகவானால் பல நன்மைகள் ஏற்படும். பெரும்பாலும் மற்றவர்கள் பற்றிப் பேசாமலும் யாராவது பேசினால் அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிடுவதும் நல்லது.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com