நடந்துவரும் உலகக்கோப்பை தொடரில் இந்தியா தோல்வியே சந்திக்காத அணியாக லீக் போட்டிகளைக் கடந்துவந்துள்ளது. அணியில் இருக்கும் ஒரே தமிழக வீரர் அஸ்வின் மட்டுமே, அவரும் பிளேயிங் 11ல் இல்லாதது வருத்தத்துக்குரியதாக உள்ளது.
நாக்-அவுட் மேட்ச்களில் அஸ்வினுக்கான கதவுகள் திறக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.
2019 உலகக்கோப்பை அரை இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வியைத் தழுவி வெளியேறியது இந்தியா. இந்த முறையும் அதே நியூசிலாந்தை எதிர்கொள்ள இருக்கிறது.
வரலாற்றை மாற்றி எழுத அணியில் சிறிய மாற்றம் தேவைப்படலாம்!
இந்திய அணி எல்லா போட்டிகளையும் அநாசியமாக வென்று வருவதற்கு பௌலர்கள் முக்கிய காரணமாக இருக்கின்றனர். குறிப்பாக ஷமி, சிராஜ், பும்ரா ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட் எடுப்பதில் வல்லவர்களாக இருக்கின்றனர்.
எதிரணி பேட்ஸ்மேன்களை சுழலில் மயக்கும் வித்தையில் பி.ஹெச்.டி படித்ததைப் போல வீசி வருகின்றனர் குல்தீப் யாதவும் ஜடேஜாவும். ஆனாலும் 6வது பௌளர் இல்லாதது அணிக்கு குறையாகவே உள்ளது.
நாக்-அவுட் போட்டிகளில் எதாவது ஒரு பௌளருக்கு காயம் ஏற்பட்டால் செய்வதற்காக எந்த ஒரு மாற்று ஏற்பாடும் இந்திய அணிக்கு கிடையாது.
கடந்த நெதர்லாந்துக்கு எதிரான போட்டியின் போது இந்திய அணி 9 பௌலர்களைப் பயன்படுத்தி விளையாடியது. இது 6 வது பௌலருக்கான தேடல் என்றே கிரிக்கெட் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
விராட் கோலி நெட் பிராக்டிசில் பௌலிங் செய்யவும் பழகி வருவதாகக் கூறப்படுகிறது. நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் விராட் 3 ஓவர்கள் வீசி 1 விக்கெட் எடுத்தார். 48வது ஓவரை வீசிய கேப்டன் ரோஹித் சர்மாவும் ஒரு விக்கெட் எடுத்தார்.
விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் தவிர மற்ற அனைவருமே பந்துவீசினர். இவர்களது பந்துவீச்சு நியூசிலாந்து அணிக்கு எதிராக செயல்படுமா என்பது பெரிய கேள்விக்குறியே.
எல்லா போட்டிகளையும் வென்றுவிட்டாலும் உள்ளுக்குள், நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா வெளியேறிய பிறகு அந்த இடத்தை நிரப்ப முடியாமல் தவித்து வருகிறது இந்திய அணி.
கடந்த போட்டியில் சிராஜ் கேட்ச் பிடிக்க முயன்று கழுத்தில் காயம் ஏற்பட்ட தருணம் 6வது பந்துவீச்சாளருக்கான தேவையை தீவிரமாக உணர்த்தியது.
மறுபக்கம் இளம் வீரர் சூர்யகுமார் யாதவ் உலகக்கோப்பையில் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. அவருக்கு டி 20 மட்டும் தான் விளையாட வரும் போல என ரசிகர் எண்ணும் நிலை வந்துள்ளது.
இதனால் சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அஸ்வின் களமிறக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
அஸ்வின் வந்தால் இந்தியாவின் சுழல் பந்துவீச்சு எதிரணியை நிலைகுலைய வைக்கும். ஆனால் பேட்ஸ்மேன்கள் விக்கெட் இழப்பது குறித்து அதிக கவலையுடன் விளையாட நேரிடும்.
பொருத்திருந்து பார்ப்போம் இந்திய அணி எத்தகைய திட்டத்துடன் கருப்புச்சட்டைக்காரர்களை துரத்துகிறது என!
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust