RCB vs RR : 59 ரன்களில் ராஜஸ்தானை சுருட்டிய பெங்களூரு - களத்தில் நடந்த மாயம் என்ன?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 25 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்தது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஓபனிங் பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் பூஜ்ஜிய ரன்களில் விக்கெட்டை இழந்தது குறிப்பிடத்தக்கது. கேப்டன் சஞ்சு சாம்சனும் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.
RCB vs RR : 59 ரன்களில் ராஜஸ்தானை சுருட்டிய பெங்களூரு - களத்தில் நடந்த மாயம் என்ன?
RCB vs RR : 59 ரன்களில் ராஜஸ்தானை சுருட்டிய பெங்களூரு - களத்தில் நடந்த மாயம் என்ன?Twitter

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளனர். இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் 5வது இடத்தைப் பிடித்துள்ளனர்.

பிளே-ஆஃப் செல்வதற்கான வாய்ப்புகள் ஆர்.சி.பிக்கு அதிகமாகவும் ஆர்.ஆர் அணிக்கு குறைவாகவும் மாறியிருக்கிறது. 

டாஸ் வென்ற ஆர்.சி.பி அணி பேட்டிங் தேர்வு செய்தது. விராட் கோலி மற்றும் ஃபாஃப் டூபிளஸ்சி நல்ல தொடகத்தைக் கொடுத்தாலும் விராட் சொற்ப ரன்களில் சந்தீப் சர்மா பந்தில் ஆட்டமிழந்தார்.

கூட்டணி அமைத்த  டூபிளஸ்சி மற்றும் மேக்ஸ்வெல் சிறப்பாக விளையாடினர். இருவரும் தலா அரைசதம் அடித்திருக்கின்றனர். எனினும் யாரும் குறிப்பிடத்தக்க ஸ்ட்ரைக் ரேட் கொண்டிருக்கவில்லை.

இறுதி ஓவர்களில் அனுஜ் ராவத் 11 பந்துகளில் 29 ரன்கள் அடித்ததன் விளைவாக 171 ரன்கள் சேர்த்தது ஆர்.சி.பி.

இரண்டாவது இன்னிங்ஸ் ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் கைகளில் இருந்தது.  ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்ஸ்மேன்களிடம் மாய வித்தைகள் செய்து 10.3 ஓவர்களில் 59 ரன்களுடன் ஆல் அவுட் செய்தனர்.

ஆர்.ஆர் அணியின் இரண்டாவது குறைந்த பட்ச ஸ்கோர் இது. 2009ம் ஆண்டு இதே ஆர்.சி.பி அணிக்கு எதிராக 58 ரன்களில் சுருண்டது ஆர்.ஆர்.

ஆர்.சி.பி பௌலரான வைன் பர்னெல் 3 ஓவர்கள் வீசி 3 விக்கெட் எடுத்ததுடன் வெறும் 10 ரன்கள் மட்டுமே கொடுத்து நல்ல எகானமியும் மெயிண்டன் செய்தார்.

அவருக்கு மேன் ஆஃப் தி மேட்ச் விருதும் கொடுக்கப்பட்டது. மிச்செல் ப்ராஸ்வெல் மற்றும் கரண் சர்மா தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர். முகமது சிராஜ் மற்றும் மேக்ஸ்வெல் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 25 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்தது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஓபனிங் பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் பூஜ்ஜிய ரன்களில் விக்கெட்டை இழந்தது குறிப்பிடத்தக்கது. கேப்டன் சஞ்சு சாம்சனும் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.

RCB vs RR : 59 ரன்களில் ராஜஸ்தானை சுருட்டிய பெங்களூரு - களத்தில் நடந்த மாயம் என்ன?
IPL 2023: அதிவேக அரைசதம், ஐபிஎல்லில் அதிக விக்கெட்!சாதனை படைத்த Jaiswal, Chahal-சரிந்த KKR

ராஜஸ்தான் பேட்ஸ் மேன் ஹெட்மேயர் மட்டும் 19 பந்துகளுக்கு 35 ரன்கள் அடித்தார். அதிரடியாக கரண் சர்மா ஓவரில் 3 சிக்ஸர்கள் விளாசினார். 

தினேஷ் கார்த்திக்குக்கு பதிலாக விக்கெட் கீப்பிங் செய்த அனுஜ் ராவத் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒரு கேட்ச் பிடித்ததுடன் அஷ்வின் ரன் அவுட்டை எடுக்கவும் உதவினார்.

RCB vs RR : 59 ரன்களில் ராஜஸ்தானை சுருட்டிய பெங்களூரு - களத்தில் நடந்த மாயம் என்ன?
Yashasvi Jaiswal: பானி பூரி வியாபாரி டு IPL நாயகன்! இந்தியா கொண்டாடும் இந்த இளைஞன் யார்?

பேட்டிங்கிலும் தினேஷ் கார்த்திக் டக் அவுட்  ஆனார். அவருக்கு பதிலாக ஃபீல்டிங்கில் சபாஸ் அகமது களமிறக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

10.3 ஓவர்களில் 59 ரன் கொடுத்து ஆர்.ஆர் அணியை வீழ்த்த ஆர்சிபி 5 பௌலர்களை உபயோகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

RCB vs RR : 59 ரன்களில் ராஜஸ்தானை சுருட்டிய பெங்களூரு - களத்தில் நடந்த மாயம் என்ன?
Virat Kohli: "எவ்வளவு சாதித்தாலும், இன்னும் பசியுடன் இருக்கிறார்"- சிராஜ் பேசியது என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com