IPL 2022 : இந்த ஆட்டம் போதுமா கொழந்த; சாகும் வரை சண்டை செய்யும் KKR

ஐபிஎல் சீசனில் செகன்ட் ஆஃபில் இவ்வளவு கேவலமாக விளையாடி பிளே ஆஃப் வாய்ப்பை சிக்கலாக்கிக் கொண்ட அணி வேறு ஏதும் கிடையாது.
KKR
KKR Twitter

ஐபிஎல் 2022 சீசனில் பிளே ஆஃப் சுற்று நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் எப்படியாவது எல்லைக் கோட்டை தாண்டி ரேஸில் அப்பாலே போய் விழுந்துவிட வேண்டும் என எட்டு அணிகள் துடித்துக் கொண்டிருக்கின்றன.

ஐபிஎல்லில் அதிக முறை கோப்பையை வென்ற மும்பை மற்றும் சென்னையை அணிகள் இந்த சீசன்ல எங்களுக்கு ரெஸ்டுபா என்பது போல எப்ப சார் லீக் ரவுண்ட் முடிப்பீங்க என மண்டையைச் சொரிந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் மீதமுள்ள எட்டு அணிகளும் விடுவதாய் இல்லை. குஜராத் மட்டும் ஏற்கனவே பிளே ஆஃப் சென்றுவிட்டது. மற்ற மூன்று இடத்துக்குத் தான் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் நேற்றைய ஆட்டத்தின் முடிவில் கிட்டதட்ட பாயின்டஸ் டேபிள் ஒரு மாதத்திற்கு முன்பு எப்படி இருந்ததோ அதே நிலைக்கு வந்துவிட்டது.

sunrises Hyderabad
sunrises HyderabadTwitter

முதல் இரண்டு போட்டிகளில் தோற்று கடைசி மூன்று இடங்களில் சென்னை, மும்பை அணிகளுடன் ஜாலியாக இருந்த ஹைதராபாத் அணி, அதன் பிறகு அடுத்தடுத்து ஐந்து போட்டிகளில் வென்று ஃபர்ஸ்ட் பென்ச் பையன்போல விறுவிறுவென முன்னேறியது. இந்த வேகத்தை பார்த்தால் ஐபிஎல் லீக் சுற்றின் செகண்ட் ஆஃபில் பாதியிலேயே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி பாயின்டஸ் டேபிளில் முதலிரண்டு இடத்தை பிடித்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் விறுவிறுவென ஏறிய வேகத்தில் ஏணியில் இருந்து சரிந்திருக்கிறது ஹைதராபாத். ஆம், ஐந்து போட்டிகளில் தொடர்ச்சியாக கெத்து காட்டிய கேன் வில்லியம்சன் அணி தற்போது அடுத்தடுத்து ஐந்து போட்டிகளில் தோல்வியை தழுவியிருக்கிறது. இனிமேல் பிளே ஆஃப் வாய்ப்பை பெறுவது கிட்டத்தட்ட சாத்தியமற்ற ஒன்று தான்.

ஐபிஎல் சீசனில் செகன்ட் ஆஃபில் இவ்வளவு கேவலமாக விளையாடி பிளே ஆஃப் வாய்ப்பை சிக்கலாக்கிக் கொண்ட அணி வேறு ஏதும் கிடையாது.

Russel
RusselTwitter

நேற்றைய ஆட்டத்தில் 54 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றதன் மூலம் பிளே ஆஃப் வாய்ப்பை இன்னும் தக்கவைத்திருக்கிறது கேகேஆர். சாகும் வரை சண்டை செய்வோம் என கோட்பாட்டில் சில நாட்களுக்கு முன்பு ஒன்பதாவது இடத்தில் இருந்த கொல்கத்தா தற்போது ஆறாமிடத்தில் நீடிக்கிறது. கடைசி போட்டியை வென்று கொஞ்சம் அதிர்ஷ்டமும் அந்த அணிக்கு பக்கபலமாக அமைந்தால் கேகேஆர் பிளே ஆஃப் செல்லக்கூடும்.

நேற்றைய போட்டியில் சுருக்கமாக சொல்லவேண்டுமெனில் டாஸ் வென்ற கொல்கத்தா முதல் நான்கு ஓவர்களில் அடக்கி வாசித்தது. அப்போது ஐந்தாவது ஓவரை வீச நடராஜன் வந்தார். அவரை வச்சு செய்த நிதிஷ் ராணா இரண்டு சிக்ஸர்கள், ஒரு பௌண்டரி என 18 ரன்கள் எடுத்தார். அந்த ஓவரில் இருந்து ஆட்டம் மாறத் தொடங்கியது.

எனினும் உம்ரான் மாலிக் தனது அபாரமான பந்துவீச்சால் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்ற 10 ஓவர்கள் முடிவில் 84 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தது கொல்கத்தா.

KKR
IPL 2022: 'மாரியாத்தா உனக்கு இரக்கமே இல்லையா' விராட் கோலிக்கு தொடரும் துரதிருஷ்டம்
Russel
RusselTwitter

அந்த மொமென்டத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள தவறினர் மற்ற பௌலர்கள். குறிப்பாக பேட்டிங்கில் ரஸ்ஸல் வேட்டைக்கு காத்திருக்க, அவருக்கு பந்து வீச வாஷிங்டன் சுந்தரை அனுப்பினார் கேன் வில்லியம்சன். அவரோ லாவகமாக ரஸ்ஸலுக்கு வீச, மூன்று சிக்ஸர்கள் வைத்து கடைசி ஓவரில் மட்டும் 20 ரன்கள் எடுத்தார் ரஸ்ஸல்.

28 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் ரஸ்ஸல். அவரது அதிரடியால் கொல்கத்தா 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது.

KKR
Moon : நிலவின் மண்ணில் செடி வளர்த்து வரலாற்று சாதனை; விஞ்ஞானிகளுக்கு குவியும் பாராட்டு

ஹைதராபாத் சேஸிங்கில் சொதப்பலாகவே ஆரம்பத்தில் இருந்து விளையாடியது. தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா மட்டும் 28 பந்துகளில் ரன்கள் விளாசினார். மற்ற பேட்ஸ்மேன்கள் எல்லாரும் 20 ஓவர் வரை விளையாட வேண்டும் என்ற நோக்கத்தில் ஆட, கடைசியில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 123 ரன்கள் மட்டுமே எடுத்தது ஹைதரபாத்.

பந்துவீச்சிலும் அசத்திய ரஸ்ஸல் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவருக்கே ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

KKR
Badminton : தாமஸ் கோப்பை - இறுதிக்கு சென்றது இந்திய அணி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com