IPL 2022: துவம்சம் செய்த லக்நௌ; பஞ்சாபும் 'அவுட்' பிளே ஆஃப் வாய்ப்பு இனி யாருக்கு?

பாயின்டஸ் டேபிளில் தற்போது முதல் இரு இடங்களில் உள்ள அணிகள் குஜராத் மற்றும் ராஜஸ்தான் பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பு மிக அதிகம். மீதமுள்ள இரு இடங்களுக்கு நான்கு அணிகள் போட்டி போடுகின்றன.
LSG
LSGIPL
Published on

ஐபிஎல் 2022 சீசன் லீக் போட்டிகள் மே 22-ம் தேதிதான் முடிவடைகின்றது. ஆனால் அதற்குள் பிளே ஆஃப் செல்ல வாய்ப்புள்ள அணிகள் எவை என்பது குறித்து யூகிக்கும் வகையில் முடிவுகள் வெளிவந்து வந்துகொண்டிருக்கின்றன.

ஏற்கனவே மும்பை அணி அதிகார்பூர்வமாக பிளே ஆஃப் ரேஸில் இருந்து வெளியேறிவிட்டது. சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் இனி தான் விளையாடும் அத்தனை போட்டிகளையும் வென்றே ஆக வேண்டும். ஆனால் அது மட்டும் பத்தாது, வேறு சில அணிகள் எப்படி விளையாடுகின்றன என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அத்துடன் ரன்ரேட் முக்கியம்.

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது இந்த இரு அணிகளுக்கும் மிக மிக அரிதான வாய்ப்பே காத்திருக்கிறது. அந்த வரிசையில் நேற்றைய தினம் லக்நௌ அணியிடம் பஞ்சாப் கிங்ஸ் தோல்வியை தழுவியதால் அதன் பிளே ஆஃப் வாய்ப்பும் சிக்கலாகி இருக்கிறது.

அந்த அணி 9 போட்டிகளில் விளையாடி எட்டு புள்ளிகள் எடுத்திருக்கிறது. இனி மீதமுள்ள ஐந்து போட்டிகளையும் அந்த அணி வென்றே ஆகவேண்டிய சூழலில் இருக்கிறது.

PBKS
PBKSIPL

தனது அடுத்த ஐந்து போட்டிகளில் தன்னை விட புள்ளிப்பட்டியலில் மேலே இருக்கும் குஜராத், ராஜஸ்தான், பெங்களூரு, டெல்லி, ஹைதரபாத் ஆகிய அணிகளுடன் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

டெல்லி அணியை பொறுத்தவரையில் எட்டு போட்டிகளில் விளையாடி எட்டு புள்ளிகளுடன் உள்ளது. அந்த அணி மீதமுள்ள அனைத்துப் போட்டிகளையும் வென்றால் கவலையின்றி பிளே ஆஃப் செல்லலாம். ஒருவேளை ஒரு போட்டியில் தோற்றாலும் நல்ல ரன்ரேட் இருந்தால் வாய்ப்பு கிடைக்கக்கூடும். ஆனால் அதற்கு மேல் தோற்றால் சிக்கல் தான்.

இந்த சீசனில் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த பெங்களூரு கடைசி இரண்டு போட்டிகளில் அதிமோசமாய் தோற்றது. இதனால் அந்த அணியின் பிளே வாய்ப்பு சிக்கலாகி உள்ளது. அந்த அணி தற்போது மோசமான ரன்ரேட்டில் இருக்கிறது. எனவே மீதமுள்ள ஐந்து போட்டிகளையும் வென்றால் மட்டுமே பிளே ஆஃப் சாத்தியப்படும் சூழல் உள்ளது

GT
GTIPL

ஹைதரபாத் அணி தற்போது புள்ளிப்பட்டியலில் நான்காமிடத்தில் உள்ளது. இப்போதைய சூழலில் எட்டு போட்டிகளில் விளையாடி 10 புள்ளிகள் வைத்திருக்கிறது. கூடவே நல்ல ரன்ரேட் உள்ளது. எனவே மீதமுள்ள ஆறு போட்டிகளில் ஐந்தில் வென்றால் எந்த கவலையும் இன்றி பிளே ஆஃப் நுழைந்துவிடும். ஒருவேளை நான்கில் மட்டும் வென்றால் கூட ரன்ரேட் நல்லபடியாக இருந்தால் 18 புள்ளிகளுடன் அந்த அணிக்கு பிளே ஆஃப் செல்ல ஒரு வாய்ப்பு கிடைக்கக்கூடும்.

லக்நௌ 9 போட்டிகளில் 12 புள்ளிகள் எடுத்திருக்கிறது. அந்த அணி மீதமுள்ள ஐந்து போட்டிகளில் நான்கில் வென்றால் தெம்புடன் பிளே ஆஃப் சென்றுவிடும். ராஜஸ்தான் அணி 8 போட்டிகளில் ஆறு வெற்றியுடன் பாயின்டஸ் டேபிளில் தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அந்த அணி மீதமுள்ள ஆறு போட்டிகளில் நான்கில் வென்றால் பிளே ஆஃப் வாய்ப்பு உறுதி ஆகிவிடும்.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு மிகப்பிரகாசமாக உள்ளது. அந்த அணி தான் விளையாடவுள்ள ஆறு போட்டிகளில் மூன்றில் வென்றாலே பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிப்படுத்திவிடும்.

PBKS
PBKSIPL
LSG
IPL 2022 - MI vs LSG : அப்போ சாம்பியன்; இப்போ அடிவாங்காத இடமே இல்லை - மும்பை முடிந்த கதை

சரி நேற்றைய ஆட்டத்தில் நடந்தது என்ன?

டாஸ் என்ற பஞ்சாப் அணி நேற்றைய ஆட்டத்தில் சேஸிங்கை தேர்ந்தெடுத்தது. முதலில் பேட்டிங் செய்த லக்நௌ எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டீ காக் 37 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் பௌலர் ரபடா நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து சேஸிங்கில் களமிறங்கிய பஞ்சாப் அணியில் எந்த வீரரும் நிலைத்து நின்று விளையாடாததால் 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை மட்டுமே எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

LSG
IPL 2022 : CSk vs PBKS - அத்தனையும் போச்சே கோபால்! கடைசி ஓவர்களில் CSK-வை கதறவிட்ட பஞ்சாப்

பாயின்டஸ் டேபிளில் தற்போது முதல் இரு இடங்களில் உள்ள அணிகள் குஜராத் மற்றும் ராஜஸ்தான் பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பு மிக அதிகம். மீதமுள்ள இரு இடங்களுக்கு நான்கு அணிகள் போட்டி போடுகின்றன.

இதில் கொல்கத்தா, சென்னை அணிகள் வேறு கொல்லைப்புறத்தில் ஏதேனும் வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கிக் கொண்டிருக்கின்றன. இனிமேல் ஒவ்வொரு ஆட்டமும் ஐபிஎல்லில் எதாவது திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடும்.

LSG
IPL 2022 : கொல்கத்தாவை தட்டித் தூக்கிய டெல்லி; MI தொடர்ந்து KKR 5 மேட்சில் காலி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com