குஜராத் டைட்டன்ஸ் அணியை மூன்று விக்கெட் வித்தியாசத்தில், நான்கு பந்துகள் மீதமிருக்க வீழ்த்தியது ராஜஸ்தான் அணி. கடைசி வரை திரில்லிங்காக சென்ற இப்போட்டியில் வென்று முதலிடத்தில் கெத்தாக அமர்ந்துள்ளது சஞ்சு சாம்சனின் படை.
வெற்றிப்பெற்ற பின்னர், ஆர் ஆர் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேசுகையில், தரமான எதிரணியோடு, தரமான பிட்சில் விளையாடும்போது, இதுபோன்ற போட்டிகள் நமக்கு கிடைக்கும் என தெரிவித்திருந்தார்.
ஐபிஎல் 2023ன் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பௌலிங்கை தேர்வு செய்தது. களமிறங்கிய குஜராத் அணிக்கு சுப்மன் கில் நம்பிக்கை அளித்தார். ஒரு பக்கம் ரன்கள் குவிய மறுபக்கம் விக்கெட்களும் விழுந்தன.
அதிகபட்சமாக டேவிட் மில்லர் 46 ரன்கள் எடுத்திருக்க, குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 177 ரன் எடுத்திருந்தது.
178 என்ற எளிய இலக்கை துரத்தி தான் ராஜஸ்தான் களமிறங்கினாலும், தொடக்க வீரர் பட்லரை ஷமி வந்தவேகத்தில் பெவிலியனுக்கு திருப்பி அனுப்பினார். ஒட்டு மொத்த ஐபிஎல் ககரியரில் பட்லர் இரண்டாவது முறையாக பூஜ்ஜியத்தில் அவுட் ஆனார். கடந்த 7 ஆண்டுகளாக அவர் டக் அவுட் ஆகவில்லை என்பதுக் குறிப்பிடத்தக்கது.
இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் முதல் ஓவரிலேயே விக்கெட்டை பறிக்கொடுத்தார்.
இறங்கிய படிக்கல், கேப்டன் சாம்சன் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சஞ்சு சாம்சன் 60 ரன்கள் எடுத்திருக்க விக்கெட்டை இழந்தார். தடுமாறிய ராஜஸ்தான் அணிக்கு வழக்கம்போல வலு சேர்த்தார் ஷிம்ரான் ஹெட்மெயர்.
பரபரப்பாக சென்ற ஆட்டத்தில், கடைசி வரை விளையாடி அணியை வெற்றிக்கு இட்டுச்சென்றார் ஹெட்மெயர்.
19.2 ஓவர்களில் 179 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வென்றது ராஜஸ்தான் அணி, 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.
போட்டி முடிந்து பேசிய ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன்.
“இப்படியொரு போட்டியில் விளையாடி முதலிடத்தை பிடித்ததில் மகிழ்ச்சி. தரமான விக்கெட்டில், தரமான எதிரணியோடு விளையாடும்போது இத்தகையை தரமான போட்டிகள் நடக்கும்.
எங்களது பௌலர்கள் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர், அதனை மதிக்க வேண்டும், அவர்களை சரியான முறையில் ரொடேட் செய்வது முக்கியம்.
ஒட்டுமொத்த அணியும் இன்று சிறப்பாக விளையாடியது.” என்றவர், அணியின் சுழற்பந்துவீச்சு மற்றும் ஹெட்மெயரின் பங்களிப்பையும் பாராட்டினார்.
இன்றைய போட்டியில் சென்னை அணியை தங்களது ஹோம் கிரவுண்டில் எதிர்கொள்கிறது பெங்களூரு அணி
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust