அதிமுக vs பாஜக : அண்ணாமலை ராஜினாமா? 'மேலிடம்' எடுக்கப்போகும் முடிவு என்ன?

அதிமுக திராவிட இயக்கத்தின் வழிவந்ததால் வலதுசாரி சிந்தனையுடைய பாஜகவுடன் இணைந்து செயல்படுவதில் சிக்கல் ஏற்படுவது இயல்புதான் என்றாலும் இந்த மோதலுக்கு பின்னால் பல அரசியல் கணக்குகளும் இருக்கிறது.
அதிமுக vs பாஜக : அண்ணாமலை ராஜினாமா? 'மேலிடம்' எடுக்கப்போகும் முடிவு என்ன?
அதிமுக vs பாஜக : அண்ணாமலை ராஜினாமா? 'மேலிடம்' எடுக்கப்போகும் முடிவு என்ன?Twitter

"அதிமுக உடன் கூட்டணி வைத்தால் தலைவர் பதவியில் இருந்து என்னை மாற்றிக்கொள்ளுங்கள்" என அண்ணாமலை கட்சி மேலிடத்துக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.

அதிமுக - பாஜக கூட்டணி மிகவும் மோசமான நிலையில் இருப்பதை நாம் அறிவோம். கட்சி தலைவர்கள் எங்களது உறவு சுமுகமாக இருக்கிறது என்று கூறுவதையும் நாம் ஏற்றுக்கொள்ள முடியும். ஏனெனில் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையில் எந்த பிளவும் இல்லை. மாறாக அதிமுகவுக்கும் அண்ணாமலைக்கும் இடையில்தான் பிரளயம் வெடித்திருக்கிறது.

அண்ணாமலைக்கு முன்னர் எல்.முருகன் தலைவராக இருந்த காலத்திலேயே அதிமுக-பாஜக இடையில் மோதல் வந்திருக்கிறது. அதிமுக திராவிட இயக்கத்தின் வழிவந்ததால் வலதுசாரி சிந்தனையுடைய பாஜகவுடன் இணைந்து செயல்படுவதில் சிக்கல் ஏற்படுவது இயல்புதான் என்றாலும் இந்த மோதலுக்கு பின்னால் பல அரசியல் கணக்குகளும் இருக்கிறது.

அண்ணாமலையைப் பொருத்தவரையில் பலமுறை வெளிப்படையாக "அதிமுக வெற்றி பெறுவதை விட பாஜகவை வளர்பதே எனது கடமை" என்பதைக் கூறியுள்ளார். ஆனால் இதற்காக அதிமுக அமைச்சர்கள் ஊழல்வாதிகள், இரண்டு திராவிட கட்சிகளும் தமிழ்நாட்டைக் கெடுத்துவைத்துள்ளன போன்ற கருத்துக்களை தெரிவிக்கிறார்.

அதிமுக அமைச்சர்கள் இந்த கருத்துகளுக்கு பதிலடி கொடுத்தாலும் கூட்டணி உள்ளிட்ட முக்கிய விஷயங்களை டெல்லியில் டீல் செய்வதனால் சில நாட்களிலேயே மாற்றிப்பேச்சத் தொடங்கிவிடுகின்றனர்.

முன்னரே ஒரு முறை, "அண்ணாமலை இருக்கும் வரை கூட்டணி கிடையாது" என எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். அப்போது அண்ணாமலையும் கூட்டணி இல்லை என்றார்.

அத்துடன் விட்டுவிடாமல் "ஜெயலலிதா தமிழகத்தில் மோசமான முதல்வர். 1991-96 ஆண்டுகள் தான் லஞ்ச ஊழல் ஆட்சி நடந்தது" என்று விமர்சனம் செய்தார். இந்த கருத்து அதிமுகவினரைக் கொதிப்படையச் செய்தது.

இறுதியில் அமித்ஷா அதிமுக தலைவர்களை டெல்லிக்கு அழைத்து சமாதானம் செய்ய, கூட்டணி தொடர்கிறது என அறிவித்துவிட்டனர். இந்த நிகழ்வுகளை பாஜக மேலிடத்தின் நிலையில் இருந்து பார்க்கும் போது, டெல்லி பாஜகவை எப்போதும் எடப்பாடி விட்டுக்கொடுக்கப்போவதில்லை என்பதனால் ஒரே கட்சிக்குள் நடக்கும் கோஷ்டிபூசல்கள் போலவே தமிழகத்தில் நடக்கும் சண்டைகளை பார்க்கும் சூழல் இருக்கிறது.

அதிமுக vs பாஜக : அண்ணாமலை ராஜினாமா? 'மேலிடம்' எடுக்கப்போகும் முடிவு என்ன?
"இந்தியாவுக்கு திரும்பி செல்லுங்கள்" - கனடா இந்துக்களை அச்சுறுத்தும் காலிஸ்தான் தீவிரவாதி!

இப்போது அண்ணாமலை மதுரையில் பேசியதையும் அதைத் தொடர்ந்து அதிமுக தலைவர் ஜெயக்குமார் கூட்டணி இல்லை எனக் கூறியிருப்பதையும் இப்படியாகத்தான் பார்க்கவேண்டியிருக்கிறது.

இந்த முறை இரண்டு விஷயங்கள் முக்கியமாக பார்க்கபடுகின்றன. முதலாவது 2024 நாடாளுமன்ற தேர்தலில் அமித்ஷா 20 சீட்டுகள் கேட்டதாக வெளியான தகவல்கள். இது அதிமுக கவலைகொள்ள வேண்டிய விஷயம். ஏனென்றால் பாஜக ஒபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருடனும் இணைந்து செயல்பட விரும்புகிறது.

அதிமுகவின் பிற அணிகள் என அழைக்கப்படுபவர்களுடன் ஒட்டுறவு வைத்துக்கொள்ளக் கூடாது என்பதில் எடப்பாடி உறுதியாக இருக்கிறார்.

இரண்டாவது அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கை. இதுகுறித்து ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிர்வாகியும் பாஜக மாநில அமைப்பு செயலாளருமான கேசவ விநாயகம் அண்ணாமலையை சந்தித்துள்ளார்.

அண்ணாமலையும் தான் ராஜினாமா செய்துகொள்வதாகவும் அதிமுகவுக்கு ஏற்ற தலைவரை அமர்த்தி தேர்தலை சந்தித்துக்கொள்ளுமாறும் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை அண்ணாமலை கடிதமாகவே மேலிடத்துக்கு அனுப்பியுள்ளார் எனவும் கூறப்படுகிறது.

அதிமுக vs பாஜக : அண்ணாமலை ராஜினாமா? 'மேலிடம்' எடுக்கப்போகும் முடிவு என்ன?
பாரத் என்ற பெயர் மாற்றத்தை முன்பு எதிர்த்ததா பாஜக? விரிவான தகவல்

பாஜக மேலிடம் இறுதியாக அமித்ஷா, எடப்பாடி என இந்த விவாகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து பேசியிருக்கிறது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடியும் வரை இரண்டு தரப்பும் அமைதியாக இருக்க வேண்டும் எனக் கூறியதுடன், கூட்டத்தொடர் முடிந்த பிறகு இதுகுறித்து முடிவு எடுக்கலாம் என முடித்து வைத்துள்ளனர்.

அதிமுக vs பாஜக : அண்ணாமலை ராஜினாமா? 'மேலிடம்' எடுக்கப்போகும் முடிவு என்ன?
அதிமுக உடன் கூட்டணி வைத்தால் பதவியை ராஜினாமா செய்வேன் - அண்ணாமலை ஆவேசம்

அண்ணமலையின் கோரிக்கையை ஏற்று அதிமுகவுடன் பாஜக உறவை முறித்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவுதான் என்கின்றனர். மாநிலத்தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை கழட்டிவிடுவதற்கான வாய்ப்புகளை பாஜக ஆராயும் என்ற கருத்துகள் நீண்டநாட்களாக இருந்துவருகின்றன. இருவரையும் கண்டித்து தேர்தல் வேலைகளில் கவனம் செலுத்த சொல்வதுதான் பாஜ்கவின் எண்ணமாகவும் இருக்கலாம். என்ன நடக்கப்போகிறது என்பதைப் பொருத்திருந்து பார்க்கலாம்.

அதிமுக vs பாஜக : அண்ணாமலை ராஜினாமா? 'மேலிடம்' எடுக்கப்போகும் முடிவு என்ன?
அதிமுக, பாஜக: உஷாரான எடப்பாடி, சிக்கிய அண்ணாமலை - கூட்டணி முறிவுக்கு உண்மையான காரணம் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com