அண்ணாதுரை : ஜனநாயகம், இந்தி எதிர்ப்பு - நாடாளுமன்றத்தை தெறிக்கவிட்ட அண்ணா

மாநிலங்களவையில் அண்ணா ஆற்றிய இரண்டு உரைகள் மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது.இரண்டு உரையின் சுருக்கத்தையும் அவர் பிறந்தநாளான இன்று இங்கே வழங்குகிறோம்.
அண்ணா
அண்ணாNS
Published on

மாநிலங்களவையில் அண்ணா ஆற்றிய இரண்டு உரைகள் மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. ஒன்று 'இந்தி அச்சுறுத்தலை எதிர்ப்போம்' எனும் பொருளை மையப்படுத்தி மாநிலங்களவையில் அவர் ஆற்றிய உரை இரண்டாவது மாநிலங்களவையில் 1962-ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதி அவர் ஆற்றிய முதல் உரை.

இரண்டு உரையின் சுருக்கத்தையும் அவர் நினைவுநாளான இன்று இங்கே வழங்குகிறோம்.

'இந்தி அச்சுறுத்தலை எதிர்ப்போம்' எனும் பொருளை மையப்படுத்தி மாநிலங்களவையில் தமிழக முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரை ஆற்றிய உரையின் சுருக்கம்.

இந்திய அரசமைப்புச் சட்ட ஏற்பாட்டின்படி இந்திய நாட்டின் ஆட்சி மொழியாக இந்தியை உயர்த்தி ஆங்கிலத்துக்கு விடைகொடுக்க இந்திய அரசு முடிவெடுத்த சூழலில் 1963 மே மாதம் அண்ணா ஆற்றிய உரை இது.

சி.என்.அண்ணாதுரை

சி.என்.அண்ணாதுரை

Twitter

‘ஜனநாயகம் என்பது'

ஜனநாயகம் என்பது பெரும்பான்மை எண்ணிக்கை அடிப்படையிலான ஆட்சி மட்டும் அல்ல; சிறுபான்மை மக்களின் உரிமைகள், உணர்ச்சிகள் ஆகியவையும் புனிதம் என்று கருதி, அவற்றைக் காப்பதற்குப் பெயர்தான் ஜனநாயகம்.

இந்தி ஆட்சி மொழியாவதை எதிர்த்து உணர்ச்சிப்பூர்வமாக தெரிவிக்கப்படும் எதிர்ப்பை இந்த மசோதா கணக்கிலேயே எடுத்துக்கொள்ளவில்லை. இந்த எதிர்ப்பு இந்தியாவின் ஏதோ ஒரு சிறு பகுதியிலிருந்து வரவில்லை. தென்னிந்திய மாநிலங்கள் அனைத்திலிருந்தும் வருகிறது

என்னுடைய நண்பர் பூபேஷ் குப்தா (கம்யூனிஸ்ட் கட்சி) இன்றைக்கு என்று பார்த்து ஆங்கிலத்தை விரட்டியடித்தே தீர வேண்டுமென்று முடிவெடுத்துவிட்டார். எனவே, ஆங்கிலத்துக்கு எதிராகக் கடுமையாக ஆங்கிலத்திலேயே பேசிவிட்டார்.

அண்ணா
UFO வரலாறு : உண்மையில் வேற்று கிரகவாசிகள் இருக்கிறார்களா ?

'இந்தியா ஒற்றை நாடல்ல'

(தமிழக முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரை, மாநிலங்களவையில் 1962-ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதி தமது முதலாவது உரையை ஆற்றினார். அப்போது நடந்த குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது அண்ணாதுரை பேசிய உரையின் ஒரு பகுதி.)

இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவாக ஒரு மொழி வேண்டும் என்று பலரும் பல விதங்களில் வாதாடினர். அது ஏற்கப்பட்டால் இந்தியாவில் பேசப்படும் மொழிகளில் ஒன்றைத்தான் பொதுமொழியாக ஏற்க வேண்டும். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.

இந்தியா 'ஒற்றை நாடு' என்று ஏற்றுக்கொள்வோமானால், இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், இந்தியா 'கூட்டாட்சி நாடு' இந்தியச் சமூகம் பன்மைத்துவம் கொண்டது. ஆகையால் ஒரே ஒரு மொழியைப் பொதுமொழியாக ஏற்பது ஏனைய மொழி பேசுவோருக்கெல்லாம் அநீதி இழைப்பது போன்றதாகிவிடும். அது மட்டுமல்ல சமூகத்தின் பெரும் பகுதி மக்களால் அம்மொழியைப் படிக்க முடியாமல் குறைகள் ஏற்படும்.

சி.என்.அண்ணாதுரை, கருணாநிதியுடன்

சி.என்.அண்ணாதுரை, கருணாநிதியுடன்

Facebook

இந்தியா ஒரே நாடல்ல. இந்தியா பல்வேறு இனக் குழுக்களையும் மொழிக் குடும்பங்களையும் கொண்ட நாடு. இதனாலேயே இந்தியாவை 'துணை கண்டம்' என்று அழைக்கிறோம். இதனால்தான், ஒரே மொழியை இந்தியாவின் ஆட்சிமொழியாக நம்மால் ஏற்க முடியவில்லை.

தேசிய கீதமான 'ஜனகண மன' பாடலும், தேசத் தாய் வாழ்த்தாக பாடப்படும் 'வந்தே மாதரம்' பாடலும் இந்தியில் இயற்றப்பட்டவை அல்ல.

தவறான அடிப்படையில், குரோத மனப்பான்மையால் நாங்கள் பிரிவினையைக் கோரவில்லை. பிரிவினை என்றவுடன் வட பகுதியில் வாழ்வோரின் எண்ணத்தில், பாகிஸ்தான் பிரிவினைபோது நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வரும். பிரிவினையால் ஏற்பட்ட கொடும் விளைவுகளை நான் அறிவேன். அவர்களுக்கு என் அனுதாபம் உண்டு. ஆனால் நாங்கள் கோரும் பிரிவினை, பாகிஸ்தான் பிரிவினையில் இருந்து மாறுபட்டது.

அண்ணா
TATA குழுமம் வரலாறு : அறிவியல் நிறுவனம் தொடங்க போராடிய ஜாம்செட்ஜி டாடா | பகுதி 5

எங்கள் லட்சியம் பரிசீலனை செய்யப்பட்டால், அனுதாபத்தோடு அது கவனிக்கப்பட்டால் நம்மிடையே குரோத உணர்ச்சி ஏற்பட அவசியம் இருக்காது. அப்போது பின் விளைவுகள் ஏதும் இருக்காது.

அதிர்ஷ்டவசமாக, தென்னகம் ஒரு தனி பூகோள பகுதியைக் கொண்டுள்ளது. அதை நாம் தக்காண பீடபூமி என்றும், தக்காண தீபகற்பம் என்றும் அழைக்கிறோம். எனவே, பிரிவினையால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மக்கள் குடிபெயர மாட்டார்கள்.

எனவே, அகதிகள் பிரச்சனை இருக்காது. எனவே அமைதியாக ஆழ்ந்து, அனுதாபத்தோடு இந்தப் பிரச்சினைகளை பாருங்கள்.

பெரியாருடன், சி.என்.அண்ணாதுரை

பெரியாருடன், சி.என்.அண்ணாதுரை

Facebook

ஜோஸப் மேத்தன் (கேரளா): தென்னகத்தின் மொழி என்னவாக இருக்கும்?

சி.என். அண்ணாதுரை: மொழி மற்றும் இதர விபரங்கள் அரசியல் நிர்ணய சபையில் தீர்மானிக்கப்படும். என்னதான் இங்கு இருக்கும் நிலையை எடுத்துரைத்தாலும், எங்களுக்கு அது கிடைக்காமல் போனாலும் இந்திய அரசின் மீதுதான் எங்கள் மக்கள் குற்றம்சாட்டுவார்கள்.

புதிய தொழிற்சாலைகள் உடனே ஏற்படுத்த முடியாததற்கு சில இயற்கையான காரணங்கள் இருக்கலாம். ஆனால் எந்த விநாடி, இரும்பாலை சேலத்தில் வைக்க மறுக்கப்படுகிறதோ எந்த விநாடி புதிய ரயில்பாதை போட மறுக்கப்படுகிறதோ எந்த விநாடி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை வைக்க மறுக்கப்படுகிறதோ எந்த விநாடி புதியரயில் பாதை போட மறுக்கப்படுகிறதோ அந்த விநாடியே தென்னகத்து வீதியோர மனிதன் உடனே எழுந்து கூறுகிறான்.

இதுதான் டெல்லியின் போக்கு, வடக்கு ஏகாதிபத்தியத்தின் போக்கு. அந்த ஏகாதிபத்தியத்தில் இருந்து வெளியேறாதவரை உங்கள் நாட்டை நீங்கள் பாதுகாப்பாக செழிப்பாக முன்னேற்றமாக வைத்திருக்க முடியாது.

எனவே நான் இந்த அவையில் நான் பிரிவினை பற்றிப் பேசுகிறேன் என்றால் விழிப்புணர்வு மிக்கவர்களின் சார்பில் பேசுகிறேன் என்று பொருள்.

மீராபென் சில நாட்களுக்கு முன்பு கூறியதுபோல், பிரிட்டிஷாரை எதிர்த்தபோது உருவாகிய இயற்கை ஒற்றுமை நிலையானது என்று நினைக்கக்கூடாது.

கூறவேண்டுமென்றால் சுயநிர்யண உரிமை, உலகப்புகழ் பெற்ற தலைவர்களால் ஏன் இந்த துணை கண்டத்தின் நமது பிரதமராலேயே ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.

என் நினைவு சரியாக இருக்குமானால் காபுர்தாலா மைதானத்தில் நேரு அதிகாரப் பூர்வமாக இவ்வாறு கூறினார்.

பெரியார் , சி.என்.அண்ணாதுரை, கி.வீரமணி

பெரியார் , சி.என்.அண்ணாதுரை, கி.வீரமணி

Twitter

ஒரு நிறுவனம் என்ற முறையில் காங்கிரஸ் இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் இந்திய யூனியனில் இருக்கவேண்டும் என்றே முயற்சி செய்யும். ஆனால் ஏதாவது ஒருபகுதி பிரிந்துபோக வேண்டுமென்றால் அதற்கு காங்கிரஸ் சம்மதம் தெரிவிக்கும் என்று அவர் பேசினார்.

எனவே சுயநிர்ணய உரிமையை காங்கிரஸும் ஒப்புக்கொண்டிருக்கிறது.

நாட்டின் பிரதமர் ஆன பிறகும் தாராள சிந்தனையும், ஜனநாயக உணர்வும் நேருவின் நெஞ்சில் இன்னும் கனன்று விட்டு எரிந்து கொண்டிருப்பதாக நினைத்து இந்தத் துணிச்சலான வேண்டுகோளை விடுக்கிறேன்.

பிரிவினையால் இந்தியா பீடிக்கப்பட்டு விடக் கூடாது என்று உறுதியுடன் இருக்கும்போது ஏன் தீபகற்பத்துக்கு சுயநிர்ணய உரிமையை அளிக்கக் கூடாது? அப்படி முடிவெடுப்பது இந்தியாவின் தரத்தை மேம்படுத்துவதாக அமையும்.

அண்ணா
உலகை உலுக்கிய மிக மோசமான 11 விமான விபத்துகள் | பாகம் 1

"இந்தியா ஒன்று" என எண்ணுவோருக்கு, அது இங்கும் அங்கும் குழப்பம் மிகுந்த கதம்பப் பகுதிகளாக இருப்பதை விட, நேசம் வாய்ந்த பல நாடுகளாக இருப்பது நல்லது தானே?

இங்கு உறுப்பினர்கள் எழுந்து அந்தத் திட்டம் வேண்டும். இந்தத் திட்டம் வேண்டும் என்று பிரித்து வாதிடும்போது, "இந்தியா ஒன்று" என்பதையும் அது பிரிக்க முடியாதது என்பதையும் அவர்கள் மறந்து விடவில்லையா?

மராட்டிய நண்பர்கள் மராட்டிய மாநிலம் கோரியது போல, இந்தியா ஒன்று என்பதை மறந்துவிடவில்லையா? பெருபாரியை பிரித்து பாகிஸ்தானுக்கு வழங்கும்போது வங்காளிகள் கொதிப்படையவில்லையா?

ஒரிசாவின் கோரிக்கையால் பீஹார் கொதிப்படையவில்லையா? அஸ்ஸாம் மற்றும் வங்கம் ஆகிய இரு பகுதிகளுக்கு இடையே, மொழித் தகராறால் வெறுப்பு ஏற்படவில்லையா?

இவை எல்லாம் பிராந்திய நோக்கு என்று முற்றாக மறுப்பது இதையெல்லாம் பூசி மெழுகவே ஆகும்.

அணைத்து தலைவர்கள் உள்ள ஒரு அறிய புகைப்படம்

அணைத்து தலைவர்கள் உள்ள ஒரு அறிய புகைப்படம்

Twitter

எனவே இந்த பிரச்னையைத் தெளிவாகப் பார்க்கவேண்டும் என்று அவையை கேட்டுக் கொள்கிறேன். நான் எங்கிருந்து வந்தேனோ, அந்த திராவிட பூமிக்கு சுயநிர்ணய உரிமை தாருங்கள்.

என்.எம்.லிங்கம்: உங்கள் தத்துவப்படி சுய நிர்ணய உரிமை தருவதானால், இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களுக்கும் சுய நிர்ணய உரிமை கேட்பதுதானே? அது பொருத்தமாக இருக்கும்.

சி.என். அண்ணாதுரை: நீங்கள் அதற்கும் ஆதரவாகப் பேசலாம். ஆனால் நான், எனது திராவிட நாட்டுக்கு உரிமை கேட்கிறேன். அப்படிக் கேட்பது ஏதோ குரோதத்தால் அல்ல. அப்படி நாடு பிரிக்கப்பட்டால் சிறிய, ஒன்றுபட்ட, ஒரே மாதிரியான மக்கள் வாழும் நாடாக மாறும். எல்லா பகுதியும் கலந்து பழகி, வளர்ச்சிப் பூர்வமாக ஒன்றுபடுவார்கள். அப்போது பொருளாதார முன்னேற்றத்தையும், சமுதாய முன்னேற்றத்தையும் மிக நல்ல முறையில் எட்டலாம்.

டெல்லிக்கு நான் வந்து 10 நாட்களாகின்றன. எல்லா இடங்களிலும் நான் சுற்றித் திரியவில்லை ஆனாலும், நான் மரம் அடர்ந்த சாலைகளுக்கு, புதிய வீதிகளுக்கு, பூங்காக்களுக்கு சென்றேன். இங்கே ஒரு வீதிக்காவது தென்னாட்டைச் சேர்ந்தவரின் பெயரை வைக்க வேண்டுமென்ற எண்ணமே இந்திய அரசுக்கு தோன்றாதது ஏன்?

இந்த மனப்பான்மை, தென்னாட்டு மக்களை இரண்டாந்தர மக்களாக நீங்கள் கருதுவதைக் காட்டவில்லையா?

லட்சுமி மேனன் (வெளியுறவு இணை அமைச்சர்): தியாகராஜா மார்க் என்ற ஒரு சாலை இருக்கிறது. இதை வைத்து தென்னகத்தவர்களை இரண்டாம் தரமானவர்கள் என்று அர்த்தம் கொள்வதா?

டெல்லிக்கு நான் வந்து 10 நாட்களாகின்றன. எல்லா இடங்களிலும் நான் சுற்றித் திரியவில்லை ஆனாலும், நான் மரம் அடர்ந்த சாலைகளுக்கு, புதிய வீதிகளுக்கு, பூங்காக்களுக்கு சென்றேன். இங்கே ஒரு வீதிக்காவது தென்னாட்டைச் சேர்ந்தவரின் பெயரை வைக்க வேண்டுமென்ற எண்ணமே இந்திய அரசுக்கு தோன்றாதது ஏன்?

இந்த மனப்பான்மை, தென்னாட்டு மக்களை இரண்டாந்தர மக்களாக நீங்கள் கருதுவதைக் காட்டவில்லையா?

லட்சுமி மேனன் (வெளியுறவு இணை அமைச்சர்): தியாகராஜா மார்க் என்ற ஒரு சாலை இருக்கிறது. இதை வைத்து தென்னகத்தவர்களை இரண்டாம் தரமானவர்கள் என்று அர்த்தம் கொள்வதா?

சி.என்.அண்ணாதுரை

சி.என்.அண்ணாதுரை

Twitter

ராமரெட்டி: சங்கீத வித்வான் தியாகராஜாவின் பெயரில் ஒரு சாலை இருக்கிறதே?

ஒரு உறுப்பினர்: இதைவிட உங்களுக்கு இன்னும் என்ன வேண்டும்?

(மேலும் பல குறுக்கீடுகள்)

சி.என். அண்ணாதுரை: லிங்கம் அவர்களின் வாதத்தை கண்டு வியக்கிறேன். ஒரு தியாகராயா வீதியால் அது சர் தியாகராயர் பெயரில் அமைந்ததோ அல்லது கீர்த்தனை புகழ் தியாகராயர் பெயரால் அமைந்ததோ எனத் தெரியவில்லை அவர் திருப்தி அடைவாரேயானால் நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன், அதுமட்டும் தென்னகத்துக்குப் போதாது.

தெற்கே வாருங்கள், மோதிலால் நேரு சோலையில் உலவலாம். நேரு வாசக சாலையில் நுழையலாம், கமலா நேரு மருத்துவமனைக்குப் போகலாம்.

ராமாரெட்டி: இது ஒருமைப்பாட்டைக் காட்டுகிறது.

மாநிலங்களவைத் தலைவர்: ஆர்டர், ஆர்டர் அவர் தொடர்ந்து பேசட்டும்.

சி.என்.அண்ணாதுரை

சி.என்.அண்ணாதுரை

Facebook

என்னுடைய பெருமைக்குரிய நாட்டுக்கு சுயநிர்யண உரிமை கோருகிறேன். அதன்மூலம், அந்த நாடு உலகுக்கு தனது பங்களிப்பை செலுத்தும். அய்யா எங்களுக்கென்று ஒரு தனிக் கலாசாரம் உண்டு.

திராவிட நாட்டிலில் இருக்கும் கலாசாரத்துக்கும் பிற பகுதிகளிலுள்ள கலாசாரத்திற்கும் மேலேழுந்தவாரியாக ஒற்றுமை நிலவலாம்.

இமய மலை முதல் கன்னியாகுமரி வரை ராமனும், கிருஷ்ணனும் வழிபடப்படுகிறார்கள். அதனால் இந்தியா ஒற்றுமைப்பட்டுள்ளது என்று தாங்கள் முன்பு ஒருமுறை பேசிய பாண்டித்யம் மிகுந்த வாசகங்கள் என் நினைவுக்கு வருகின்றன. அதேபோல உலகம் முழுவதும் மரியாதையுடன் பயத்துடனும் ஏசுநாதர் பிரார்த்தனை செய்யப்படுகிறார்.

இருந்தாலும் ஐரோப்பாவில் பலப்பல தேசிய நாடுகள் உள்ளன. புதிய, புதிய தேசிய நாடுகள் உலகில் உருவாக்கிக் கொண்டே இருக்கின்றன.

அண்ணா
டாடா குழுமம் வரலாறு : ஆழம் தெரியாமல் காலைவிட்டு மாட்டிய டாடா | பகுதி 8

ஆகையால், தென்னகத்தில் கொதித்தெழும் புதிய தேசிய இனம் பற்றி குடியரசு தலைவர் எதுவும் குறிப்பிடாதது பற்றி நான் மிகவும் வருந்துகிறேன்.

ஜனநாயகம், சோஷலிசம், தேசியம் ஆகிய இந்த மூன்றில் - ஜனநாயகம் உருக்குலைக்கப்பட்டிருக்கிறது, சோஷலிசம் காரமற்றதாக்கப்பட்டிருக்கிறது, தேசியம் தவறான பொருளுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்.

வரும் ஆண்டுகளில் புதிய எண்ண ஓட்டத்தின் விளைவாக தென்னகத்தின் தேவையும் தத்துவமும் புரிந்து கொள்ளப்பட்டு, நான் சார்ந்திருக்கும் திராவிட நாட்டுக்கு சுயநிர்ணய உரிமை வழங்கப்படும் என்ற நம்பிக்கையுடன் உரையை நிறைவு செய்கிறேன்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com