செந்தில் பாலாஜி பதவி நீக்கம்: எழும் கண்டனங்கள்; மாறிய உத்தரவு - ஆளுநரின் அதிகாரம் என்ன?

இச்செய்தி அரசியல் களத்தில் பெரும் புயலை கிளப்பியது. இந்த அறிவிப்பு குறித்து கொதித்தெழுந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின், ஆளுநருக்கு அமைச்சரை பதவிநீக்கம் செய்யும் அதிகாராம் இல்லை என்றார்.
செந்தில் பாலாஜி பதவி நீக்கம்: எழும் கண்டனங்கள்; மாறிய உத்தரவு - ஆளுநரின் அதிகாரம் என்ன?
செந்தில் பாலாஜி பதவி நீக்கம்: எழும் கண்டனங்கள்; மாறிய உத்தரவு - ஆளுநரின் அதிகாரம் என்ன?twitter

தமிழ்நாடு அரசின் முன்னாள் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சமயத்தில் பண மோசடியில் ஈடுப்பட்டதாக அமலாக்க துறை கடந்த ஜூன் 13ஆம் தேதி இரவோடு இரவாக கைது செய்தது.

பல ஆர்பாட்டங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி இருதய பிரச்சினைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி அவரது பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது இலாகா இல்லாத அமைச்சராக இருக்கிறார்.

இந்நிலையில் நேற்று தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்வதாக அறிவித்தார். அதன் பிறகு சர்ச்சைகள் எழவே, இந்த நிர்ணயத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக மாற்றி அறிவித்தார்.

Senthil Balaji: 1996ல் திமுக தொண்டன், இன்று 3 துறைகளுக்கு அமைச்சர்- விறுவிறு அரசியல் பயணம்
Senthil Balaji: 1996ல் திமுக தொண்டன், இன்று 3 துறைகளுக்கு அமைச்சர்- விறுவிறு அரசியல் பயணம்Twitter

கடந்த 2011 முதல் 2015ஆம் ஆண்டு வரை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான ஆதிமுக ஆட்சியின் போது, போக்குவரத்து துறை அமைச்சராக பதவியில் இருந்தார் செந்தில் பாலாஜி.

அப்போது 2014ல் ஓட்டுநர், நடத்துனர், இஞ்சினியர்கள் பணி நியமனத்தில் பண மோசடியில் செந்தில் பாலாஜி ஈடுபட்டதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.

சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. ஆனால் செந்தில் பாலாஜி தன் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும் வாங்கிய பணத்தை கொடுத்துவிட்டதாக செந்தில் பாலாஜி தானே முன்வந்து ஒப்புக்கொண்டார்.

எனினும், வழக்கு விசாரணைக்கு வருமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

இந்த வழக்கு பற்றிய முழு விவரங்கள் அறிய...

செந்தில் பாலாஜி: எந்த வழக்கில் கைது செய்யப்பட்டார்? அரசியல் பின்னணி என்ன? முழு விவரம்

தொடரப்பட்ட வழக்குகளுக்கு கடந்த மே 16ஆம் தேதி தீர்ப்பளித்த உயர்நீதி மன்றம் 2 மாதங்களுக்குள் வழக்கு விசாரணையை முடித்து அறிக்கை சமர்பிக்க தமிழ்நாட்டின் மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு உத்தரவிட்டது.

தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்களிலும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராகவே உத்தரவுகள் வெளியானதால் அமலாக்கத்துறை நடவடிக்கையில் ஈடுபட்டது.

திமுகவின் மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக செயல்பட அரசு விருப்பம் தெரிவித்தது.

இதற்கு ஆளுநர் ரவி எதிர்ப்பு தெரிவித்தார். எனினும் அரசு அவரை இலாகா இல்லாத அமைச்சராகவே தக்கவைத்திருந்தது.

செந்தில் பாலாஜி பதவி நீக்கம்: எழும் கண்டனங்கள்; மாறிய உத்தரவு - ஆளுநரின் அதிகாரம் என்ன?
செந்தில் பாலாஜி : ஐ.டி ரெய்டுக்கு வந்த அதிகாரிகளின் கார் கண்ணாடியை உடைத்த ஆதரவாளர்கள்!

இந்நிலையில், கடந்த வியாழனன்று இரவு 7 மணியளவில் ஆளுநர் ஆர் என் ரவி தான் அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியிலிருந்து நீக்குவதாக தெரிவித்தார்.

இச்செய்தி அரசியல் களத்தில் பெரும் புயலை கிளப்பியது. இந்த அறிவிப்பு குறித்து கொதித்தெழுந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின், ஆளுநருக்கு அமைச்சரை பதவிநீக்கம் செய்யும் அதிகாராம் இல்லை என்றார்.

இது குறித்து உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே டி தாமஸ் கூறுகையில், “அரசியலமைப்பு சட்டத்தின்படி, முதலமைச்சராக தகுதியானவரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் மட்டுமே ஆளுநருக்கு இருக்கிறது. அமைச்சரவை ஆலோசனை இல்லாமல் இப்படி ஒரு முடிவை அவர் எடுக்க முடியாது, மேலும் முதலமைச்சரின் ஆலோசனையின்படியே அமைச்சர்களை ஆளுநர் தேர்ந்தெடுக்கிறார். பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை” என தெரிவித்ததாக ஏபிபி தளத்தின் அறிக்கை கூறுகிறது.

மேலும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 164(1)இன்படி, முதலமைச்சரின் ஆலோசனையின் பேரிலேயே ஆளுநர் செயல்பட வேண்டும் என்பதையும் சட்ட வல்லுநரும் முன்னாள் மக்களவை செயலாளருமான பி.டி.டி. ஆச்சாரி மேற்கோள்காட்டினார்.

செந்தில் பாலாஜி பதவி நீக்கம்: எழும் கண்டனங்கள்; மாறிய உத்தரவு - ஆளுநரின் அதிகாரம் என்ன?
தமிழ்நாடு: ‘தமிழகம்’ என குறிப்பிட்டது ஏன்? சர்ச்சை குறித்து ஆளுநர் ரவியின் விளக்கம் என்ன?

முதலமைச்சர் மு க ஸ்டாலினும், ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து, இதனை நாங்கள் சட்ட ரீதியாக கையாளுவோம் என தெரிவித்தார்.

ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் என பல கட்சியின் உறுப்பினர்களும் ஆளுநரின் இந்த நடவடிக்கை கண்டனத்திற்குறியது என்றும், ஆர்டிகில் 164ஐ மேற்கோள்காட்டினர். இரவோடு இரவாக “அமைச்சர் ஆளுநர் ரவிக்கு ஒரு கேள்வி?” என போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

அந்த போஸ்டர்களில், “'கொலை, கொள்ளை, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்தல் உள்ளிட்ட கடும் குற்ற வழக்குகளை சந்தித்து வரும் 34 ஒன்றிய அமைச்சர்களை பதிவியிலிருந்து விலக்கச் சொல்லி டெல்லிக்கு கடிதம் எழுதுவீங்களா கிண்டி?” என்று இருந்தது. மேலும் வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள அமைச்சர்களின் புகைப்படங்களும், வழக்கு எண்ணிக்கைகளையும் குறிப்பிட்டிருந்தனர்.

இவ்வளவு சச்சரவுகளை சந்தித்த பிறகு ஆளுநர் ஆர் என் ரவி, வெளியிட்ட அறிக்கையை மாற்றி கூறினார். அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யும் முடிவை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஏற்கனவே எரிந்துகொண்டிருக்கும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக இச்செய்தி வந்தமைந்ததில், ட்விட்டரிலும், Get out RN Ravi என்கிற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

செந்தில் பாலாஜி பதவி நீக்கம்: எழும் கண்டனங்கள்; மாறிய உத்தரவு - ஆளுநரின் அதிகாரம் என்ன?
ஆர் என் ரவி : இதற்கு முன் ஆளுநர்கள் மாநில அரசின் உரைகளை வாசிக்காமல் இருந்திருக்கிறார்களா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com