பாம்பன் தீவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள புயலால் அழிந்த நகரம் தான் இந்த தனுஷ்கோடி. இங்கு வங்கக் கடலும், இந்தியப் பெருங்கடலும் கூடுமிடம் புகழ் பெற்றது.
இங்கு குளித்தால்தான் காசி யாத்திரை முடிவுறுவதாக இந்துக்கள் நம்புகின்றனர்.
54 ஆண்டுகளுக்கு தாக்கப்பட்ட ஒரு இயற்கை சீற்றதால் இந்த இடத்திற்கு பேய் நகரம் என்று பெயரிட்டுள்ளனர்.
இந்திய நிலப்பரப்பின் விளிம்பில் அமர்ந்திருக்கும் விசித்திரமான சிறிய கிராமத்தை பேய் நகரம் என்று அழைக்கின்றனர். ஏன்? தனுஷ்கோடி குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு காணலாம்.
1964 ஆம் ஆண்டு டிசம்பர் 23ல் மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையை கடந்த போது ராட்சத அலைகள் எழுந்து ஊருக்குள் புகுந்தது. தனுஷ்கோடி நகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்டது.
தனுஷ்கோடியையும், பாம்பனையும் இணைத்த இருப்புப்பாதை வீசிய கடும் புயலில் அடித்து செல்லப்பட்டது. இந்த கோர தாண்டவத்தில் மொத்தம் 2000 பேர் வரை உயிரிழந்தனர்.
புயல் வந்து புரட்டிப் போட்டதன் அடையாளமாக இன்றும் தனுஷ்கோடியில் சிதிலமடைந்த தேவாலயமும், இடிந்த நிலையில் சில கட்டிடங்களும் உள்ளன. இதனால் அதனை பேய் நகரம் என்றழைக்கின்றனர்.
இருப்பினும் தனுஷ்கோடியில் இன்றும் சில மீனவ குடும்பங்கள் வசிக்கின்றனர். மீன் சுட்டுத் தருவது, சிப்பி, முத்துக்களால் ஆன மணி மாலைகளால் உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர்.
அவர்கள், தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
ராமேஸ்வரம் தீவையும் இந்தியாவையும் இணைக்கும் பாம்பன் பாலம் இந்தியாவின் ஒரு அதிசயமாக இருக்கிறது.
மும்பையில் முடிக்கப்பட்ட பாந்த்ரா-வோர்லி கடல் இணைப்புக்குப் பிறகு, இது இந்தியாவின் இரண்டாவது மிக நீண்ட கடல் பாலமாக பாம்பன் உள்ளது.
சூறாவளியில் சேதமடைந்த இந்த பாலம் 48 நாட்களுக்குள் மறுகட்டமைக்கப்பட்டது ஒரு சாதனை என்று கருதப்படுகிறது.
வில்லைப் போன்று வளைந்த கடற்கரையைக் கொண்டிருப்பதால் இதனைத் தனுஷ்கோடி என்றனர். வில் என்பது தனுஷ், கோடி என்பது முனை.
அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டம் தனுஷ்கோடி செல்வதற்கு சிறந்த நேரமாகும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust