Aurthur Urso
Aurthur UrsoTwitter

அட்டவணைப் போட்டு உடலுறவு வைத்துக்கொள்ள முடியுமா? - 9 மனைவிகளுடன் வசிப்பவரின் அனுபவம் என்ன?

தற்போது ஆர்தர் தனது 8 மனைவிகளுக்கு சம அளவு உடலறவில் நேரம் கொடுக்க கஷ்ட்டப்படுவதாக கூறுகிறார். அதற்காக ஒரு அட்டவணையை பின்பற்றியது மிக மன அழுத்தம் தரக்கூடியதாக இருந்தது என்றும் அவர் தெரிவிக்கிறார்.
Published on

ஆர்தர் உர்ஸோ பிரேசில் நாட்டை சேர்ந்தவர். மாடலிங் துறையில் இயங்கிவரும் இவருக்கு மொத்தம் 9 மனைவிகள் இருந்தனர். 9 மனைவிகளுடனும் அமைதியான ஆனந்தமான வாழ்க்கையை நடத்தி வந்தார் ஆர்தர்.

ஆர்தர் தனது மண வாழ்வை லூயானா கஸாகி என்ற பெண்ணுடனே தொடங்கினார். ஆர்தர், லூயானா இருவரும் பல தார மண வாழ்வில் நாட்டம் கொண்டிருந்திருந்ததால் அவரின் அடுத்தடுத்த திருமணங்களுக்குச் சம்மதித்தார் லூயானா. காதல் சுதந்திரமான உணர்வு அதனை ஒருதார மண வாழ்வில் அடக்கிவிட முடியாது என்பதை வெளிக்காட்டவும், பல தார மணவாழ்வு தவறானதில்லை என்பதை உரைக்கவும் 2021ல் அடுத்தடுத்து 8 திருமணங்கள் செய்து கொண்டார் ஆர்தர். இதன் மூலம் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்தார் ஆர்தர். பிரேசிலில் பல தார மணமுறை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாததால் இந்த திருமணங்கள் பதிவு செய்யப்படவில்லை.

Aurthur Urso
ஒரே வீட்டில் 9 மனைவியுடன் வாழ்ந்து வந்த நபருக்கு ஏற்பட்ட சோகம்!
Arthur Urso
Arthur UrsoTwitter

தனது மனைவிகள் அனைவருடனும் சம அளவில் உடலுறவு கொள்ள வேன்டும் என்பதற்காக பாலுறவு அட்டவனை ஒன்றை செய்தது குறித்து பகிர்ந்துள்ளார் ஆர்தர்.

சமீபத்தில் இவரது மனைவிகளில் ஒருவர் “ஒரு தார மண முறையில் ஈடுபட போகிறேன், பல தார முறையில் இனி நாட்டமில்லை” எனக் கூறி விவாகரத்து கோரியிருந்தது குறிப்பிடதக்கது.

தற்போது ஆர்தர் தனது 8 மனைவிகளுக்கு சம அளவு உடலறவில் நேரம் கொடுக்க கஷ்ட்டப்படுவதாக கூறுகிறார். அதற்காக ஒரு அட்டவணையை பின்பற்றியது மிக மன அழுத்தம் தரக்கூடியதாக இருந்தது என்றும் அவர் தெரிவிக்கிறார்.

அந்த நேரத்தில் பல பிரச்சனைகள் எழுந்ததாக கூறும் ஆர்தர், பல நேரங்களில் அட்டவணை காரணமாகவே உடலுறவில் ஈடுபட வேன்டியிருக்கும். இதனால் மகிழ்ச்சி கிடைக்காது. இன்னும் சில நேரங்களில் ஒரு மனைவியிடம் அன்பு இருக்கும் போது அட்டவணை காரணமாக மற்றொரு மனைவியுடன் இருக்கும் சூழல் ஏற்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

Aurthur Urso
Bermuda Triangle : உண்மையில் இங்கு கப்பல்கள் காணாமல் போகிறதா? - விலகும் மர்மம்

இந்த அட்டவணை நடவடிக்கை சலிப்பூட்டுவதாகவும் பிரச்சனைக்குரியதாகவும் இருந்ததை அடுத்து ஆர்தர் இயல்பு நிலைக்கே மீண்டும் திரும்பியிருக்கிறார்.

தற்போது மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறும் ஆர்தர், “என் மனைவிகள் ஒவ்வொருவரும் படுக்கையில் வித்தியாசமானவர்கள். ஒவ்வொன்றும் புது அனுபவம்” எனக் கூறியுள்ளார்.

ஆனால் தற்போதும் விலையுயர்ந்த பரிசுப் பொருள் ஒன்றை ஒரு மனைவிக்கு அளிக்கும் போது மற்றவர்கள் பொறாமை கொள்வதை தன்னால் தடுக்க முடியவில்லை எனக் கூறியுள்ளார் ஆர்தர்.

Aurthur Urso
ட்விட்டரை பாக்கெட்டில் போட்ட எலான் மஸ்க்: ட்விட்டர் கணக்கு மட்டுமல்ல ட்விட்டரே என்னது தான்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

logo
Newssense
newssense.vikatan.com