துவாரகா முதல் ஹம்பி வரை: தொலைந்து போன உலகின் 10 நகரங்கள் - கண்டிபிடிக்கப்பட்டது எப்படி?

பூகம்பம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை சீற்றங்களால் அழிந்து மண்ணுக்குள்ளோ அல்லது கடலுக்குள்ளோ புதைந்து போன பல நகரங்களின் இடிபாடுகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து வருகின்றனர்.
Ancient Lost City
Ancient Lost City Twitter
Published on

இந்த உலகம் பல்வேறு மர்மங்களால் சூழப்பட்டுள்ளது. பாரம்பரிய கலாச்சாரங்கள் நிறைந்த பல நகரங்கள் தொலைந்து அல்லது அழிந்து போய்விட்டன. இந்த நகரங்களை விஞ்ஞானிகள் கண்டெடுத்து வருகின்றனர்.

அழிந்து போன நகரங்களின் சில இடங்கள் கிடைக்காமல் அப்படியே மறைந்தும் போய் விட்டதாக கூறப்படுகிறது.

பூகம்பம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை சீற்றங்களால் அழிந்து மண்ணுக்குள்ளோ அல்லது கடலுக்குள்ளோ புதைந்து போன பல நகரங்களின் இடிபாடுகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து வருகின்றனர்.

உலகின் தொலைந்து போன நகரங்களின் பட்டியலுக்கு முடிவே இல்லை. உலகில் தொலைந்து போன நகரங்களில் கண்டுபிடிக்கப்பட்ட சிலவற்றை இங்கு பார்க்கலாம்

1. காளிபங்கான் - ராஜஸ்தான்

உலகின் தொலைந்து போன நகரங்களில் காளிபங்கான் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

காளிபங்கான் அதன் தனித்தன்மையான பலிபீடங்களாலும், உலகின் முதன்மையான, சான்றளிக்கப்பட்ட உழவு நிலங்களாலும் தனித்துவமாக திகழ்கிறது.

34 ஆண்டு கால அகழாய்விற்குப் பின், காளிபங்கான் குறித்த முழு அறிக்கையை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் 2003ல் வெளியிட்டது.

காளிபங்கான் 1 என்ற பகுதி முந்தைய ஹரப்பா பண்பாட்டு காலத்தியது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2. லோத்தல் - குஜராத்

சிந்துவெளி நாகரிகக் கால நகரங்களில் ஒன்றானது இந்த லோத்தல். ஹரப்பா பண்பாட்டின் தொடர்ச்சியான லோத்தல் நகரத்தின் இடிபாடுகள் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ளது.

இதன் தோற்றத்தின் காலம் கி.மு 3700 எனக் கணிக்கப்பட்டுள்ளது. 1954 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இவ்விடத்தில், அதே ஆண்டு முதல் 1963ஆம் ஆண்டு வரை அகழ்வாய்வுகள் நடத்தப்பட்டது.

Ancient Lost City
Coober Pedy: பாலைவன பூமிக்குள் பளபளக்கும் வினோத நகரம்- சுரங்கங்களில் வாழும் மக்களின் கதை!
துவாரகா
துவாரகாNews Sense

3. துவாரகா - குஜராத்

துவாரகா இந்தியாவில் உள்ள புனித தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மகாபாரத கதைப்படி கிருஷ்ணர் இறந்தவுடன் துவாரகா நகரம் கடலுக்குள் மூழ்கியதாக நம்பப்படுகிறது.

தற்போது இருக்கும் துவாரகா 7 வது நகரம் என்றும் மற்ற ஆறும் அரபிக்கடலின் கரையோரத்தில் மூழ்கியதாக கூறப்படுகிறது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கிமு 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இடிபாடுகளை மீட்டெடுப்பதில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.

4. சாஞ்சி - மத்திய பிரதேசம்

சாஞ்சி இந்தியாவின் மிகவும் பிரபலமான வரலாற்று இடமாகும். இது கிரேக்க-பௌத்த பாணியிலான சாஞ்சி ஸ்தூபிகள் மற்றும் பேரரசர் அசோகர் காலத்தில் அமைக்கப்பட்ட அசோக தூண் ஆகியவற்றிற்கு பிரபலமானது.

பண்டைய உலகின் தொலைந்து போன நகரங்களில் ஒன்றான இது, பின்னர் 19 ஆம் நூற்றாண்டில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது.

5. விஜயநகர் - ஹம்பி

கர்நாடக மாநிலத்தின் பெல்லாரி மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் பாரம்பரிய இடம் தான் இந்த ஹம்பி.

விஜயநகரப் பேரரசின் தலைநகரமாக விளங்கியதால் இதன் பெயர் விஜயநகரம் என்று அறியப்படுகிறது.

2014 ஆம் ஆண்டுக் கணக்கீட்டின்படி அதிகப்படியாக கூகுளில் தேடப்பட்ட கர்நாடக வரலாற்றுச் சிறப்புடைய இடங்களுள் முதலாவதாக ஹம்பி உள்ளது.

6. மொஹஞ்சதாரோ - சிந்து

உலகின் பழங்கால, தொலைந்து போன நகரங்களில் பட்டியலிடப்பட்ட மொஹென்ஜோதாரோ 1922 இல் கண்டுபிடிக்கப்பட்டது. அகழ்வாராய்ச்சியில் இது சிந்து சமவெளி நாகரிகத்தின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்று என்று கண்டறியப்பட்டது.

பாகிஸ்தானின் மொஹஞ்சதாரோவில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடிபாடுகளில் கிரேட் பாத் மிகவும் பிரபலமான கட்டிடங்களில் ஒன்றாக அறியப்படுகிறது.

7. தக்ஸிலா - ராவல்பிண்டி

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ளது இந்த ராவல்பிண்டி.

ராமாயண இதிகாசத்தின் படி, தக்ஸிலா ராமரின் சகோதரரான பரத மன்னரால் நிறுவப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், அகழ்வாராய்ச்சியால் கிமு 600க்கு முந்தைய எதனுடனும் அதன் தொடர்பை நிரூபிக்க முடியவில்லை.

8. ஹெராக்லியன் - அலெக்ஸாண்ட்ரியா

எகிப்தில் உள்ள ஹெராக்லியன் நகரம் அபுகீர் விரிகுடாவின் பகுதியைச் சுற்றி பல ஆண்டுகளாக தேடப்பட்டது.

பிரெஞ்சு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஃபிராங்க் காடியோ, தனது ஆராய்ச்சியின் போது இந்த நகரம் அலெக்ஸாண்டிரியாவின் கடற்கரையிலிருந்து 6.5 கிமீ தொலைவில் மூழ்கியதை கண்டுபிடித்தார்.

Ancient Lost City
செளதி அரேபியா: பாலைவனத்தில் உருவாக்கப்படும் ஒரு பசுமை நகரம் - என்ன நடக்கிறது அங்கே ?

9. லெப்டிஸ் மேக்னா - கோம்ஸ்

ரோமானிய நகரமான லெப்டிஸ் மேக்னா மத்திய தரைக் கடலில் சிறந்த பாதுகாக்கப்பட்ட ரோமானிய இடிபாடுகளில் ஒன்றாக அறியப்படுகிறது.

அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடத்தில் அரங்கம், சந்தை இடம் என பல விஷயங்களின் எச்சங்கள் கண்டிபிடிக்கப்பட்டன.

10. பாம்பீ - காம்பானியா

ரோமானியப் பேரரசின் பண்டைய தொலைந்த நகரங்களில் பாம்பீயும் ஒன்று. எரிமலை வெடிப்புகள் காரணமாக இந்த நகரம் பேரழிவிற்கு உட்பட்டது.

1700 ஆம் ஆண்டில் தோண்டப்படும் வரை இந்த நகரம் பல ஆண்டுகளாக சாம்பலால் மூடப்பட்டிருந்தது.

Ancient Lost City
அமேசான் : காடுகளுக்கு அடியில் புதைந்த நகரம் - வியக்க வைக்கும் உண்மைகள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com