Winston Churchill: இவரின் இனவெறியால் 43 லட்சம் இந்தியர்கள் இறந்தனர்- நடுங்கவைக்கும் வரலாறு

"ஆங்கிலேயர்கள் திரையரங்கில் படம் பார்த்துவிட்டு திரும்பும் போது வங்காளிகளின் உடல்களை காகங்களும் நாய்களும் சாப்பிடுவதைப் பார்த்துவிட்டு கடந்து சென்றனர்." இங்கிலாந்து மக்களுக்கு ஹீரோவாக இருக்கும் அவர் இந்தியர்களுக்கு வில்லனாக இருக்க பல காராணங்கள் உள்ளன.
Winston Churchill: இவரின் இனவெரியால் 43 லட்சம் இந்தியர்கள் இறந்தனர்- நடுங்கவைக்கும் வரலாறு
Winston Churchill: இவரின் இனவெரியால் 43 லட்சம் இந்தியர்கள் இறந்தனர்- நடுங்கவைக்கும் வரலாறுTwitter
Published on

வின்ஸ்டன் சர்சில் 1940ம் ஆண்டு முதல் 1945ம் ஆண்டு வரையும் 1951 முதல் 1955 வரையும் பிரிட்னின் பிரதமராக இருந்தார்.

ஹிட்லரின் மரணம் மற்றும் இரண்டாம் உலகப் போர் வெற்றியால் மிகவும் பிரபலமான வரலாற்று நாயகனாக இங்கிலாந்து மக்கள் இவரை மதிக்கின்றனர்.

அவரது முதல் ஆட்சிக்காலத்தில் உள்நாட்டு விவகாரங்களையும் போர் நடவடிக்கையையும் கவனித்து வந்த அவர்மீது பிரிட்டிஷ் மக்களுக்கு மிகுந்த மதிப்பு இருந்தது உண்மைதான்.

நாட்டுப்பற்று மிக்க அந்த பிரதமர் இங்கிலாந்து மக்களின் ஹீரோ ஆனால் இந்தியாவில் வில்லன்.

பெரும்பாலான காலனி ஆட்சிக்கால தலைவர்களின் கதை இது தான் என்றாலும் சர்ச்சில் மன்னிக்க முடியாதபடி 43 லட்சம் இந்தியர்களின் மரணத்துக்கு காரணமாக இருந்தார்.

வங்காளப் பஞ்சம்

1943ம் ஆண்டு ஏற்பட்ட தானிய பற்றாக்குறை பஞ்சத்தை ஏற்படுத்தியது. உணவு கிடைக்காது எனத் தெரிந்துகொண்ட மக்கள் கிராமங்களில் இருந்து புறப்பட்டு நகரங்களுக்கு வந்து சேர்ந்தனர்.

நகரங்களின் கால்வாய் ஓரத்தில் அவர்களது உடல்கள் மடிந்து கிடக்கும் நிலைதான் அவர்களுக்கு ஏற்பட்டது.1943ம் ஆண்டின் நடுப்பகுதியில் கிட்டத்தட்ட மாதம் 2000 உடல்களை கொல்கத்தாவில் இருந்து அப்புறப்படுத்தினர்.

இதனை, "ஆங்கிலேயர்கள் திரையரங்கில் படம் பார்த்துவிட்டு திரும்பும் போது வங்காளிகளின் உடல்களை காகங்களும் நாய்களும் சாப்பிடுவதைப் பார்த்துவிட்டு கடந்து சென்றனர்" என கிறிஸ்டோபர் பெய்லி மற்றும் டிம் ஹார்பர் ஆகியோர் பதிவு செய்துள்ளனர்.

1943 பஞ்சம் என்பது இயற்கையாக உருவானதல்ல. இனவெறியால் உருவானது. சர்ச்சிலின் கொள்கைகள் தான் இந்த பஞ்சத்துக்கு முக்கிய காரணம் என்பதை புவி இயற்பியல் ஆராய்ச்சி கடிதங்கள் ( Geophysical Research Letters ) இதழில் வெளியான ஆய்வு எடுத்துரைக்கின்றது. இந்த ஆய்வை, காந்திநகர் ஐஐடி, கலிபோர்னியா பல்கலைக்கழகம் லாஸ் ஏஞ்சல்ஸ் (அமெரிக்கா), மற்றும் இந்திய வானிலை ஆய்வுத் துறை சேர்ந்து நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சில் அரிசி மற்றும் கோதுமையை இந்தியாவிலிருந்து, உலக போர் நடைபெற்ற இலங்கை மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பினார்.

Winston Churchill: இவரின் இனவெரியால் 43 லட்சம் இந்தியர்கள் இறந்தனர்- நடுங்கவைக்கும் வரலாறு
டார்ஜிலிங் டூ ஊட்டி : ஆங்கிலேயர்களால் புகழ்பெற்ற இந்த அழகிய மலைப்பிரதேசங்கள் - ஒரு பார்வை

ஊடகங்கள் ஏன் பேசவில்லை

இந்த பஞ்சம் பற்றிய தகவல்கள் சர்ச்சிலை சென்றடைந்த போது அவர் எடுத்த எதிர் நடவடிக்கை என்ன தெரியுமா? இவற்றைக் குறித்த செய்திகள் எந்த ஊடகத்திலும் வெளியாகாமல் தவிர்த்தது தான்.

'ஹங்ரி பெங்கால்' என்ற பெயரில் சித்தபிரசாத் பட்டாச்சார்யா என்பவர் எழுதிய புத்தகத்தின் 5000 பிரதிகளை அழிக்க உத்தரவிட்டது சர்ச்சில் அரசாங்கம்.

1943 மார்ச் முதல் அக்டோபர் வரை வறட்சி மற்றும் பஞ்சம் குறித்து செய்திகளை வெளியிட தடை விதித்தது பிரிட்டிஷ். முதன் முதலாக இயன் ஸ்டீபன்ஸ் என்ற ஆங்கிலேயர் ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகையில் பஞ்சம் குறித்த புகைப்படங்களை வெளியிட்டார்.

அதன்பிறகு 6 மாதம் தாமதமாக பிரிட்டிஷ் அரசு பஞ்சத்தை ஒப்புக்கொண்டது.

இவற்றையும் வாசியுங்கள்

ஆப்ரிக்காவின் சேகுவேரா: சதியால் கொல்லப்பட்ட தலைவர் இளைஞர்களின் ஹீரோவான வரலாறு

பிரிட்டன்: "உங்களை யார் தேர்ந்தெடுத்தது?"- வலுக்கும் அரச குடும்பத்துக்கு எதிரான குரல்கள்!

நவ்ரூ : வளமான நாடு கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்ட கதை - இருண்ட வரலாறு

சர்ச்சில் என்ன செய்தார்?

1943ம் ஆண்டு இந்தியாவின் வாங்காளத்தில் பல லட்சம் மக்கள் பட்டினியால் மடிந்துபோக வின்ஸ்டன் சர்ச்சில் எடுத்த முடிவுகள் காரணமாக இருந்தது.

ஒருபக்கம் பிரிட்டிசார் சுகபோகமான வாழ்வு வாழ்ந்த போது கொல்கத்தா தெருக்களில் கொத்துகொத்தாக பட்டினியால் மக்கள் செத்து விழுவதை அவரால் சகித்துக்கொள்ள முடிந்தது.

ஹிட்லரை வென்றதுக்காக போற்றப்படும் அந்த வரலாற்றுத் தலைவர் அவருக்கு இணையான ஒரு இனப்படுகொலையை பஞ்சத்தின் போது நிகழ்த்தினார் என்றால் மிகையாகாது.

இதனை ஒரு "அமைதியான படுகொலை" என்று கூறுகிறார் ஹாவர்ட் பல்கலைகழகத்தின் வரலாற்று பேராசிரியர் சுகதா போஸ்.

இந்திய வளங்களின் மீதான பிரிட்டிசாரின் சுரண்டல் இந்தியர்களின் அடிப்படை வாழ்வுரிமையைக் கூட கேள்விக்குறியாக்கி அவர்களை கொன்றது.

இதற்கு சுரண்டலை நிகழ்த்திய ஆட்சியாளரின் மனநிலை மிக முக்கிய காரணம். ஏனெனில் சர்ச்சில் இந்த பஞ்சத்தினால் மடியும் மக்களைப் பற்றி எல்லாம் தெரிந்திருந்தும் அவற்றில் கவனம் செலுத்த மறுத்துவிட்டார்.

Winston Churchill: இவரின் இனவெரியால் 43 லட்சம் இந்தியர்கள் இறந்தனர்- நடுங்கவைக்கும் வரலாறு
Malik Ambar: இந்தியாவில் தலைவன் ஆகிய ஆப்ரிக்க கறுப்பின அடிமை - ஒரு வீரப்பயணம்

இனவெறி

சர்ச்சில் இந்தியர்கள் மிகவும் தாழ்ந்தவர்கள், இன்னும் முழுமையாக வளர்ச்சி அடையாதவர்கள் என்று கருதினார். இதனால் தான் அவரால் எளிதாக இந்தியர்களின் மரணங்களைப் புறக்கணிக்க முடிந்தது.

சர்ச்சிலின் ஆலோசகர்களும் பழமைவாதிகளாகவும் இனவெறி கொண்டவர்களாகவும் இருந்தனர்.

இந்தியாவில் இருக்கும் உபரி தானியத்தைக் கூட வங்காளத்துக்கு அல்லாமல் போரில் பங்கேற்கும் இங்கிலாந்து வீரர்களுக்கு அனுப்பி வைத்தார் சர்ச்சில்.

Winston Churchill: இவரின் இனவெரியால் 43 லட்சம் இந்தியர்கள் இறந்தனர்- நடுங்கவைக்கும் வரலாறு
India - Pakistan 1971 war : இந்தியாவுக்கு உதவிய ரஷ்யா - என்ன நடந்தது?

அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு உதவ முன்வந்த போது அதனையும் மறுத்துவிட்டு இந்திய மக்கள் செத்துப்போக அனுமதித்தார்.

இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் இறப்பது குறித்து அதிகாரிகள் சர்ச்சிலிடம் தெரிவித்த போது, "காந்தி ஏன் இன்னும் இறக்கவில்லை" என்று கேட்டாராம் சர்ச்சில்.

இங்கிலாந்து மக்களுக்கு அவர் ஹீரோவாக இருக்கலாம். இந்தியாவைப் பொருத்தவரை அதிகார உச்சியில் அமர்ந்து இனப்படுகொலை நடத்திய ஹிட்லரின் நகல் தான் அவர்.

Winston Churchill: இவரின் இனவெரியால் 43 லட்சம் இந்தியர்கள் இறந்தனர்- நடுங்கவைக்கும் வரலாறு
Avatar : இனவெறி, கலாச்சார திருட்டு - அமெரிக்க பூர்வகுடிகள் இந்த படத்தை எதிர்ப்பது ஏன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com