நிழலுலக தாதாவான தாவூத் இப்ராஹிமை பாகிஸ்தானில் விஷம் வைத்து கொல்ல முயற்சி நடைபெற்றதாகவும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
டிசம்பர் 17ம் தேதி முதல் இது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக இருந்து வந்த நிலையில் நம்பகத்தன்மை வாய்ந்த உளவுத்துறை தகவல்கள் இந்த புரளிகளை ஏற்கவில்லை எனக் கூறியிருக்கிறது இந்தியா டுடே வலைத்தளம்.
ஆதாரங்கள் இல்லாத சமூக வலைத்தள தகவல்கள் அடிப்படையில் பாகிஸ்தானைச் சேர்ந்த யூடியூபர் ஒருவர் வெளியிட்ட வீடியோவுக்கு பிறகே இந்த தகவல்கள் பரவின.
பாகிஸ்தானில் திடீரென இணையதள சேவை முடக்கப்பட்டதை தாவூத் இப்ராஹிம்முடன் இணைத்துப் பேசியிருக்கிறார் அந்த நபர்.
ஆனால் அதிகாரப்பூர்வ தகவல்கள் பாகிஸ்தானில் எதிர்கட்சியான பாகிஸ்தான்-தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI)-ன் இணையவழி மெய்நிகர் சந்திப்பு (virtual meeting) தான் இணைய சேவை கோளாறுக்கு காரணம் எனக் கூறுகின்றன.
உலகம் முழுவதும் இணைய சுதந்திரத்தை ஆய்வு செய்யும் நெட்பிளாக்ஸ் என்ற நிறுவனம், பாகிஸ்தானில் இணைய பாதிப்பு ஏற்பட்ட நேரமும் எதிர்கட்சியின் மீட்டிங் நடந்த நேரமும் பொருந்துவதாகக் கூறியிருக்கிறது.
தாவூத் இப்ராஹிம் இந்தியாவில் மட்டுமல்லாமல் ஐநாவிலும் தப்பியோடிய குற்றவாளியாக அறியப்படுகிறார். எந்த பாதுகாப்பு அமைப்பிடமும் சிக்காத அவர் பாகிஸ்தானில் சௌகரியமாக வாழ்வதாக தகவல்கள் கூறுகின்றன.
சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத ஆயுத வர்த்தகம், ரியல் எஸ்டேட், பணமோசடி மற்றும் பயங்கரவாதத்தில் ஈடுபட்டுவந்த தாவூத் இப்ராஹிம் இப்போது 67 வயது மதிக்கத்தக்க நபர்.
பாகிஸ்தானில் குடும்பத்துடன் தங்கியிருக்கும் அவருக்கு சிறந்த விருந்தோம்பல் அளிக்கப்படுவதாக கூறும் இந்தியா டுடே அறிக்கை, அவருக்கும் அவரது நண்பருக்கும் நடந்த உரையாடல் குறித்தும் தெரிவிக்கிறது.
அந்த உரையாடலின்படி தாவுத் இப்ராஹிம் லூயிஸ் விட்டன் காலணிகளை அவரது நண்பர் ஃபரூக்கிடம் வாங்கிக்கேட்கிறார். இதனை வைத்து அவர் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாக கருதுகிறது இந்தியா டுடே அறிக்கை.
எனவே தாவூத் இப்ராஹிம் மரணம், விஷம் வைத்ததாக வெளியாகும் தகவல் அனைத்தும் வதந்தி எனக் கூறப்படுகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust