கடல் மட்ட அதிகரிப்பு : டெல்டா பகுதிகளில் வாழ முடியாமல் போகுமா? - அதிர்ச்சி தரும் அறிக்கை

இந்த பாதிப்புகளால் சங்கிலித் தொடர் போல அடுத்தடுத்த விஷயங்கள் பாதிக்கப்படும். உடல்நலக் குறைபாடுகள், உணவுப் பற்றாக்குறை, இருப்பிடம் பறிபோதல் மற்றும் கலாச்சாரங்கள் மறக்கப்படுதல் என அடுக்கிக்கொண்டு போகலாம்.
கடல் மட்ட அதிகரிப்பு : டெல்டா பகுதிகளில் வாழ முடியாமல் போகுமா? - அதிர்ச்சி தரும் அறிக்கை
கடல் மட்ட அதிகரிப்பு : டெல்டா பகுதிகளில் வாழ முடியாமல் போகுமா? - அதிர்ச்சி தரும் அறிக்கைTwitter
Published on

உலக வானிலை அமைப்பு வெளியிட்டுள்ள "புவி கடல்மட்ட அதிகரிப்பு மற்றும் விளைவுகள்" அறிக்கை நாடுகளின் மீது இருக்கும் அச்சுறுத்தல் குறித்து திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின் படி, இந்தியா, சீனா, வங்காள தேசம் மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகள் கடுமையான பாதிப்புகளைச் சந்திக்க வாய்ப்புகள் உள்ளது.

இந்த நாடுகள் மட்டுமின்றி பிற நாடுகாளிலும் குறிப்பிட்ட பகுதிகள் பாதிக்கப்படுகின்றன.

ஷாங்காய், தாகா, பாங்காங், ஜகர்தா, மும்பை, மபுடு (Maputo), லாகோஸ், சைரோ (Cairo), லண்டன், காம்பெஹன், நியூ யார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், பெனோஸ் அய்ர்ஸ் மற்றும் சாண்டியாகோ நகரங்கள் அதிக நேரடித் தாக்கங்களை எதிர்கொள்ளும் என அந்த அறிக்கை எச்சரிக்கிறது.

என்ன சொல்கிறது அறிக்கை?

2013 முதல் 2022 வரை உலகம் முழுவதும் ஆண்டுக்கு 4.5 மி.மி கடல் மட்ட உயர்வு நடந்திருக்கிறது.

இந்த கடல் மட்ட உயர்வுக்கு மனிதச் செயல்பாடுகளே முக்கியக் காரணமாக இருக்கிறது.

1901 முதல் 2018 வரை பூமியில் கடல்மட்ட உயர்வு 0.20 மீட்டராக இருக்கிறது. இதில் 1901 முதல் 1971 வரை ஆண்டுக்கு கடல்மட்ட அதிகரிப்பு 1.3 மி.மி ஆகத்தான் இருந்தது.

1971 முதல் 2006க்கு இடையில் ஆண்டுதோறும் கடல் மட்டம் 3.7மி.மி அதிகரித்திருக்கிறது.

புவி வெப்பமயமாதல் 1.5 டிகிரி செல்சியஸ் வரை கட்டுப்படுத்தப்பட்டாலும் கடல்மட்டத்தில் கணிசமான அதிகரிப்பு இருக்கும் என்று கூறுகின்றனர். மாறாக வெப்பநிலை அதிகரித்தால் கடல்மட்ட அதிகரிப்பு இரு மடங்காக அதிகரிக்கும்.

1971 - 2018 ஆண்டுகளுக்கு இடையில் 50% கடல்மட்ட உயர்வு புவி வெப்பமயமாதலினால் நிகழ்ந்துள்ளது. 22% பனிப்பாறைகள் உடைவினாலும், 20% பனிக்கட்டிகள் உருகவதாலும் 8% நிலத்தில் நீர் சேமிப்பதில் ஏற்படும் மாற்றங்களாலும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

1992 முதல் 1999க்கு இடையில் பனிக்கட்டி உருகுவது 4 மடங்கு அதிகரித்தது. பனிக்கட்டி உருகுவதும், பனிப்பாறை உடைதலும் 2006 - 2018க்கு இடையில் கடல் மட்டம் உயர முக்கிய காரணிகளாக இருந்துள்ளது.

கடல் மட்ட அதிகரிப்பு : டெல்டா பகுதிகளில் வாழ முடியாமல் போகுமா? - அதிர்ச்சி தரும் அறிக்கை
காலநிலை மாற்றத்தால் காணாமல் போகும் இந்த உணவுகள் குறித்து தெரியுமா?

இதன் விளைவுகள் என்ன?

2,3 டிகிரி தொடர்ந்து புவி வெப்பமயமாதல் அதிகரிப்பதனால் கிரீன்லாந்து மற்றும் மேற்கு அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகள் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மீள முடியாத பாதிப்பைச் சந்திக்க நேரிடலாம்.

கடல் நீர் அதிகரிப்பு கடலோர உள்கட்டமைப்பையும், கடலோர சுற்றுசூழல் அமைப்பையும் முழுமையாக சிதைக்கும்.

நிலத்தடிநீரில் உப்பு கலப்பது கட்டுப்படுத்த முடியாமல் போகும், வெள்ளம் ஏற்படும் இன்னும் பல.

இந்த பாதிப்புகளால் சங்கிலித் தொடர் போல அடுத்தடுத்த விஷயங்கள் பாதிக்கப்படும்.

உடல்நலக் குறைபாடுகள், உணவுப் பற்றாக்குறை, இருப்பிடம் பறிபோதல் மற்றும் கலாச்சாரங்கள் மறக்கப்படுதல் என அடுக்கிக்கொண்டு போகலாம். இவற்றில் சில உடனடி பாதிப்புகளாகவும் சில நீண்ட நாள் பாதிப்புகளாவும் ஏற்படும்.

இந்த பாதிப்புகளில் இருந்து தப்ப காலநிலை மாற்றம் குறித்த புரிதலை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டியது அசியமாகும்.

கடல் மட்ட அதிகரிப்பு : டெல்டா பகுதிகளில் வாழ முடியாமல் போகுமா? - அதிர்ச்சி தரும் அறிக்கை
பெருங்கடல் அதிசயங்கள்: கடலுக்கு அடியில் இருக்கும் நகரம் டு ஒளிரும் அலைகள் - பின்னணி என்ன?

இந்தியப் பெருங்கடலில் அதிகரிக்கும் வெப்பம்

20ம் நூற்றாண்டில் ஒவ்வொரு ஆண்டும் 1.7 மி.மி இந்தியக் கடற்கரைகளில் கடல் மட்ட அதிகரிப்பு நடந்திருப்பதாக புவி அறிவியல் அமைச்சகம் கூறியுள்ளது.

கடல் மட்டம் 3 செ.மீ அதிகரித்தால் நிலத்தில் 17 மீட்டர்கள் வரை கடல் ஊடுருவும்.

எதிர்காலத்தில் ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் 5 செ.மீ கடல் மட்ட உயர்வு ஏற்பட்டால் அடுத்த நூற்றாண்டில் 300 மீட்டர் வரை கடல் நிலத்தில் ஊடுருவும்.

கடல் மட்ட அதிகரிப்பு : டெல்டா பகுதிகளில் வாழ முடியாமல் போகுமா? - அதிர்ச்சி தரும் அறிக்கை
காலநிலை மாற்றம்: போர் இல்லாமல் இந்த புவி வாழ்க்கை அழியப் போகிறதா ?

இந்திய பெருங்கடல் வெப்பமடைவதனால் நீரின் கனஅளவு அதிகரித்து கடல் மட்டம் உயருகிறது. மேலும் பனிப்பாறைகள் உருகுவதும் இதற்கு மற்றொரு காரணமாக இருக்கிறது.

கடல் வெப்பமடையும் விகிதம் மிகவும் அதிகமாக இருப்பதனால் இந்திய கடலோர பகுதிகள் ஏற்கெனவே அடிக்கடி புயல் ஏற்படுவது போன்ற பாதிப்புகளை சந்திக்கத் தொடங்கிவிட்டன.

இதனால் வெள்ளம் ஏற்படுவது மீண்டும் கடல் மட்டம் உயர வழிவகுக்கிறது. வெள்ளத்தினால் கங்கா, சிந்து, பிரம்மபுத்ரா நதிகளின் டெல்டா பகுதிகள் ஏற்கெனவே வாழத் தகுதியற்ற இடங்களாக மாறி வருகின்றன.

கடல் மட்ட அதிகரிப்பு : டெல்டா பகுதிகளில் வாழ முடியாமல் போகுமா? - அதிர்ச்சி தரும் அறிக்கை
காலநிலை மாற்றம்: உக்ரைன் ரஷ்யா போரால் என்ன நிகழ்ந்து இருக்கிறது தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com