சர்வதேச நாடுகள் உலக மக்களின் கவலைகளை விட விண்ணுக்கு சென்று ஏலியன்களை சந்திக்கத்தான் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன என சில சமயம் நமக்குத் தோன்றும்.
விண்வெளியில் ஆராய எத்தனையோ விஷயங்கள் இருந்தாலும் நிலவில் அதிகாரம் செலுத்துவதுதான் நாடுகளுக்கு இடையிலான முக்கியப் போட்டியாக இருக்கிறது.
நிலவு ஆராய்ச்சி அறிவியல் சார்ந்ததாக மட்டுமே இல்லாமல் ஒரு நாட்டின் மதிப்பை, கௌரவத்தை நிலைநிறுத்துவதாக மாறியது எப்போது? போன்ற கேள்விகளுக்கு இந்த பதிவில் விடைத் தேடலாம்.
ரஷ்யா ஒரு கம்யூனிச நாடாக மாறிய போதிலிருந்து அமெரிக்காவுக்கு ரஷ்யாவுக்குமான பகைத் தொடங்கியது. சர்வதேச நாடுகளை யார் தனது கைக்குள் வைத்திருக்கிறார்கள்? மற்ற நாடுகள் யாருக்கு ஆதரவளிக்கின்றனர் என்பதில் இரு நாடுகளுக்கும் போட்டி எழுந்தது.
இரண்டு வல்லரசு நாடுகளும் தங்கள் வல்லமையைக் காட்டிக்கொள்ள பல வழிமுறைகளை மேற்கொண்டனர். மிக மிக முக்கியமாக அணு ஆயுதங்களை உருவாக்குவது. இது பிற நாடுகளுக்கு அச்சமூட்டியது. அதுமட்டுமல்லாமல், பாதுகாப்புக்காக இந்த பெரிய நாடுகளில் ஒன்றை சார்ந்திருக்கவும் வழிவகுத்தது.
மற்றொன்று நிலவுப் பயணம். இன்று வரை மக்கள் நிலவில் குடியேற்றங்களை அமைக்க முடியும் என நம்பி வருகின்றனர். இப்போது நிலவில் முடியாவிட்டாலும் செவ்வாய் கிரகத்தில் முடியலாம் எனும் பேச்சு இருக்கிறது. ஆனால் 1960களில் நிலவுப் பயணம் ஒரு நாட்டின் ஆற்றலை நிரூபிப்பதில் முக்கிய காரணியாக பார்க்கப்பட்டது.
நிலவுக்கு செயற்கைக் கோள்களை அனுப்புவதில் அமெரிக்காவை முந்தியது சோவியத் யூனியன். 1950களின் இறுதியிலிருந்து 1960 வரை நிலவுக்கு செயற்கை கோள்களை அனுப்பியது ரஷ்யா.
இந்த நேரத்தில் அமெரிக்காவின் முயற்சிகள் தோல்வியையேத் தழுவின. 1959-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், ரஷ்யாவின் லூனா-2 (Luna-2) என்ற செயற்கைக்கோள், முதன்முதலில் நிலவின் பரப்பினைத் தீண்டியது.
அதன்பின், அதே ஆண்டு அக்டோபர் மாதம், லூனா-3 (Luna-3) என்ற ரஷ்ய செயற்கைக்கோள் நிலவுக்கு அருகில் சென்று, அங்கிருந்து அதனை முதன்முதலில் புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பியது.
இதற்கடுத்து, 1966-ம் ஆண்டு பிப்ரவரி , சோவியத் அனுப்பிய மற்றொரு செயற்கைக்கோளான லூனா-9 (Luna-9) முதன்முதலில் நிலவில் தரையுறங்கியது.
காலனியாதிக்க காலத்தில் எந்த நாடு முதன் முறையாக ஒரு நிலப்பரப்பைக் கண்டுப்பிடிக்கிறதோ அந்த நாட்டுக்குத் தான் அந்த நிலம் சொந்தம் எனும் எழுதப்படாத விதி இருந்தது.
ரஷ்யாவின் செயற்கைக் கோள் நிலவில் தரையிறங்கியதாக் ரஷ்யா நிலவை உரிமைகொண்டாடுமோ என்ற அச்சம் ரஷ்யாவுக்கு எழுந்தது.
இதற்கு நான்கு மாதங்கள் கழித்தே அமெரிக்காவின் சர்வேயர்-1 (Surveyor-1) எனும் செயற்கைக்கோள் நிலவில் தரையிறங்கியது.
இதன் பிறகு நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்ததாக அமெரிக்கா கூறியது. அதனை ஃபோட்டோ ஷூட் எனக் கூறி ரஷ்யா மறுதது.
நிலவுக்காக அமெரிக்காவும் ரஷ்யாவும் சண்டையிட்டு வர, ஐ.நா நிலவு குறித்த முக்கியத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்தது.
அதில் சொல்லப்பட்ட பல விஷயங்களில், “நிலவும் அதன் இயற்கை வளங்களும் மனிதகுலத்தின் பொதுச்சொத்து” என்பதும், “நிலவு எந்த ஒரு நாட்டின் பாத்தியதைக்கும் உட்பட்டதல்ல, எந்த ஒரு நாடும் நிலவில் குடியேறுவதன் மூலமோ வேறு வகையிலோ, அங்கு தமது இறையாண்மையைச் செலுத்த முடியாது” என்பது மிகவும் முக்கியமான அம்சங்கள்.
1972 முதல் இந்த தீர்மானம் விவாதிக்கப்பட்டு, 1979ம் ஆண்டு கையெழுத்தானது. இதனை செயல்படுத்த 5 நாடுகளின் ஒப்புதல் தேவைப்பட்டது. சீலே, பிலிப்பைன்ஸ், உருகுவே, நெதர்லாந்து ஆகிய நான்கு நாடுகள் மட்டுமே ஒப்புதல் அளித்திருந்தது.
1984ம் ஆண்டு ஆஸ்திரியா ஒப்புதல் அளித்த பின்னர் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது. ஆனால், நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதில் தீவிரம் காட்டிவரும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் இதில் கையெழுத்திடவில்லை.
நிலவுக்கு யார் மனிதர்களை அனுப்புவது என்பதில் தான் இப்போது போட்டியே இருக்கிறது. இதில் மீண்டும் அமெரிக்கா முன்னிலை வகிக்கிறது எனலாம்.
ஆர்டெமிஸ் திட்டம் என்ற திட்டத்தின் மூலம் மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதாக அமெரிக்கா கூறியுள்ளது. இதற்காக ஸ்பேஸ் எக்ஸ், டைனெடிக்ஸ் மற்றும் புளூ ஆர்ஜின் ஆகிய தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.
எந்த நாடும் நிலவில் இறையாண்மை செலுத்தக் கூடாது என ஐநா கூறிவரும் நிலையில், நிலவில் தனியார் மூலம் இறையாண்மை செலுத்த முயல்கிறது அமெரிக்கா எனக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அதாவது நேரடியாக ஆட்சி செய்யாமல் கிழக்கிந்திய கம்பனி மூலம் இங்கிலாந்து இந்தியா மீது ஆதிக்கம் செலுத்தியது போல. இந்த குற்றச்சாட்டை அமெரிக்கா மறுத்தாலும் இன்னும் தீர்க்கமான வரையறைகளுடன் நிலவு ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என விண்வெளி ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust