Jacinda Ardren: பதவி விலகுவதாக அறிவித்த நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா - என்ன காரணம்?

பிரதமர் ஜெசிந்தா அர்ட்ரென் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 42 வயதாகும் இவர், இதற்கு மேலும் இந்த பதவியில் தான் தொடர்ந்தால், அது நியூசிலாந்திற்கு செய்யும் அவமதிப்பு என்று தனது உரையில் பேசியிருந்தார்.
Jacinda Ardren
Jacinda Ardrenட்விட்டர்
Published on

நியூசிலாந்து பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் ஜெசிந்தா ஆர்ட்ரென். இந்த செய்தி உலகளவில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.

நியூசிலாந்தின் 40வது பிரதமராக பதவியேற்றார் ஜெசிந்தா ஆர்ட்ரென். கடந்த 2017 முதல் லேபர் பார்ட்டியின் தலைவராகவும் இவர் பதவி வகித்து வருகிறார்.

மிக இளம் வயதில் பிரதமர் பதவியை அடைந்தவர் என்று பிரபலமடைந்தார் ஜெசிந்தா

கொரோனா வைரஸ் தொற்று உலகையே உலுக்கிய சமயத்தில், தொற்று அல்லாத நாடு என்று அறிவித்த 9 நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்று.

இந்நிலையில், தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் பிரதமர் ஜெசிந்தா அர்ட்ரென். தன்னிடம் இனி தலைமை தாங்குவதற்கான ஆற்றல் இல்லை என அவர் இதற்கு விளக்கமளித்திருக்கிறார்.

இனி மறு தேர்தலிலும் போட்டியிடமாட்டேன் என்று கூறிய ஜெசிந்தா, பதவிலிருந்த ஆறு ஆண்டுகள் எவ்வளவு சவாலான ஒன்றாக இருந்தது என்பதையும் கூறினார். அந்த பாதிப்பை பற்றி விவரிக்கும்போது ஜெசிந்தாவின் குரல் உடைந்து, அவர் தடுமாறினார்.

Jacinda Ardren
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா: அவரது வீழ்ச்சிக்கான ஐந்து காரணங்கள்

”நாம் எல்லோரும் மனிதர்கள். நம்மால் இயன்றவரை நம்மிடம் இருக்கும் அனைத்தையும் கொடுக்கலாம். ஒரு கட்டத்திற்கு பிறகு அது இயலாது.” என்று கூறியவர், தற்போது என்னிடம் ஆற்றல் இல்லை என்று தெரிவித்திருந்தார்

வரும் பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதிக்கு முன்பாகவே பதவி விலகவுள்ளார் ஜெசிந்தா

42 வயதாகும் இவர், இதற்கு மேலும் இந்த பதவியில் தான் தொடர்ந்தால், அது நியூசிலாந்திற்கு செய்யும் அவமதிப்பு என்று தனது உரையில் பேசியிருந்தார்.

2017 ஆம் ஆண்டு, முதன் முறையாக நியூசிலாந்து பிரதமர் பதவியை இவர் ஏற்றபோது இவருக்கு வயது 37 மட்டுமே. கொரோனா பெருந்தொற்று, கிறிஸ்ட் சர்ச் மசூதி துப்பாக்கிச் சூடு, ஒயிட் ஐலாண்ட் எரிமலை வெடிப்பு உள்ளிட்ட கடுமையான சூழல்களை இவர் கையாண்ட விதம், உலக தலைவர்களின் கவனத்தை பெற்றது.

அமைதியான சூழலில் நாட்டை வழிநடத்துவது வேறு, கடுமையான சூழலில் நாட்டை வழிநடத்துவது வேறு எனவும் கூறிய ஜெசிந்தா, இந்த நிகழ்வுகள் எல்லாம், தன் மீது அழுத்தத்தை அதிகரித்ததாக பேசியிருந்தார்

இரண்டாவது முறையாக தேர்தலில் தனது கட்சியை மகத்தான வெற்றிக்கு இட்டு சென்று, பதவியேற்ற ஜெசிந்தாவின் புகழ், சமீபத்தில் வெகுவாக குறைந்துள்ளது என்றே கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதற்கு ஏற்பவே, நாட்டில் நிலவும் பொருளாதார சூழல்கள் உள்ளிட்ட பிரச்னைகள் கட்சிக்கும், இவருக்கும் எதிராக திரும்பியுள்ளது

“இங்குள்ள சவால்களை சமாளிக்க நமக்கு புதிய தோள்கள் தேவை. தொழிலாளர் கட்சி வெற்றிபெறாது என நினைத்து நான் பதவி விலகவில்லை. கட்சி நிச்சயம் வெற்றிபெறும்” என்று தெரிவித்தார் ஜெசிந்தா.

Jacinda Ardren
ரிஷி சுனக்: பிரிட்டன் பிரதமர் ஆக பதவி ஏற்கவிருக்கும் இவர் யார்? இவர் இந்திய பின்னணி என்ன?

தலைவர் பதவியிலிருப்பவர், கனிவாகவும், அன்பாகவும், பச்சாதாபம் உள்ளவராகும், அதே சமயத்தில் வலுவானவராகும், தீர்கமானவராகவும் இருக்க முடியும் என்ற நம்பிக்கையுடன், நியூசிலாந்தை விட்டுச் செல்கிறேன் என நான் நம்புகிறேன். எப்போது ஒரு இடத்தில் இருந்து விலகி செல்லவேண்டும் என்று அறிந்தவர், சிறந்த தலைவராக இருக்க முடியும்” என்று சொல்லி தனது உரையை முடித்தார் ஜெசிந்தா.

ஜெசிந்தாவின் பதவி விலகல் அறிவிப்பு நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக தலைவர்களும், தொழிலாளர் கட்சியின் முக்கிய தலைவர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Jacinda Ardren
Elon Musk பதவி விலகினால் ட்விட்டர் நிறுவனத்தின் அடுத்த CEO ஒரு தமிழரா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com