கென்யா: மரம் நடுவதற்கு விடுமுறை! புதிய வழக்கத்தின் பின்னணி என்ன?

கென்யாவில் காடுகளின் பரப்பளவு 7%ஆக உள்ளது. இதனை 10 விழுக்காடாக அதிகரிக்க இந்த நிதியாண்டில் 80 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ஏன் இவ்வளவு கவனம் செலுத்தப்படுகிறது.
கென்யா: மரம் நடுவதற்கு விடுமுறை! புதிய வழக்கத்தின் பின்னணி என்ன?
கென்யா: மரம் நடுவதற்கு விடுமுறை! புதிய வழக்கத்தின் பின்னணி என்ன?Twitter
Published on

கென்யா அரசு நவம்பர் 13ம் தேதியை மரம் நடுவதற்கான விடுமுறை தினமாக அறிவித்துள்ளது. 2032ம் ஆண்டுக்குள் 15 பில்லியன் மரங்களை வளர்க்க வேண்டும் என்ற இலக்கை அடையும் முயற்சியில் மக்களை ஊக்குவிப்பதற்காக இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

காலநிலை மாற்றத்தின் தாக்கங்களில் இருந்து நாட்டைப் பாதுகாக்க நாட்டுப்பற்றுடன் மக்கள் மரங்களை நட வேண்டும் என அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

கென்யாவில் காடுகளின் பரப்பளவு 7%ஆக உள்ளது. இதனை 10 விழுக்காடாக அதிகரிக்க இந்த நிதியாண்டில் 80 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தால் ஆப்பிரிக்கா மிகப் பெரிய பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. தொடர்ந்து 5 முறை பருவமழை பொய்த்துள்ளதால் வறட்சி தீவிரமடையும் அபாயம் நிலவுகிறது.

மரங்கள் புவிவெப்பமயமாதலின் முக்கிய காரணியான கார்பனைக் கட்டுப்படுத்திக்கொள்ளும் என்பதால் மரம் நடுவதற்கு கென்யா முக்கியத்துவம் கொடுத்துவருகிறது.

காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதலுக்கு எதிராக கென்ய மக்கள் ஒற்றுமையாக போராட வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டது.

கென்யா: மரம் நடுவதற்கு விடுமுறை! புதிய வழக்கத்தின் பின்னணி என்ன?
குப்தா சகோதரர்கள் : உத்தர பிரதேசம் டூ தென் ஆப்ரிக்கா - உலகை மிரள வைத்த சகோ-களின் கதை

இந்த ஆண்டு டிசம்பர் முடிவதற்குள் 500 மில்லியன் மரங்களை நட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த இயக்கத்தின் மற்றொரு பகுதியாக அந்த நாட்டில் மரம் வெட்ட பல விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

சட்ட விரோதமாக அதிக மரம் வெட்டுபவர்கள் மீதான தண்டனையையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கென்யா: மரம் நடுவதற்கு விடுமுறை! புதிய வழக்கத்தின் பின்னணி என்ன?
கென்யா : ”ஒரு பெண்ணுக்காக மட்டும் நான் படைக்கபடவில்லை” - 3 சகோதரிகளை திருமணம் செய்த நபர்

கென்ய அதிபர் வில்லியம் ருடோ சுற்றுசூழல் மற்றும் நிலவளத்தைக் காக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் இவரைப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

சுற்றுசூழல் உண்மையான அக்கறை இருப்பவர்கள் ஆட்சியில் இருப்பதுதான் வருங்கால சந்ததியினரது வாழ்க்கைக்கும் நல்லுதவியாக இருக்கும்.

கென்யா: மரம் நடுவதற்கு விடுமுறை! புதிய வழக்கத்தின் பின்னணி என்ன?
Odisha: டேரிங்பாடி முதல் டிப்ரிகார் வரை - சுற்றுசூழல் சுற்றுலா செல்ல 10 இடங்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com