Mr.Bean : கேலிகளால் வெற்றியை தடுக்க முடியாது - ரோவன் அட்கின்சன் வளர்ந்த கதை!

கிட்டத்தட்ட எல்லா நிறுவனங்களும் அவரை நிராகரித்தனர். சில இடங்களில் அவரது முகத் தோற்றம் காரணமாக, சில இடங்களில் திடகாத்திரமான உடலமைப்பு இல்லாததால், சில இடங்களில் திக்குவாய் பிரச்னையால்.. எல்லாமே தோல்வியாக தான் இருந்தது அவருக்கு.
Mr.Bean : கேலிகளால் வெற்றியை தடுக்க முடியாது! - ரோவன் அட்கின்சன் வளர்ந்த கதை!
Mr.Bean : கேலிகளால் வெற்றியை தடுக்க முடியாது! - ரோவன் அட்கின்சன் வளர்ந்த கதை!Twitter
Published on

90'ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்தமான கார்டூன் மிஸ்டர் பீன். அனிமேஷனாகவும் லைவ் சீரியலாகவும் நாம் ரசித்த மிஸ்டர் பீனுக்கு பின்னால் இருக்கும் ஒற்றை நபர் ரோவன் அட்கிசன்.

1955ம் ஆண்டு பிறந்த இவர் 1980களில் மிஸ்டர் பீன் கதாப்பாத்திரத்தை உருவாக்கினார்.

எழுத்தாளர், நடிகர் மற்றும் நகைச்சுவையாளர் என பன்முகத் தன்மைக் கொண்ட இவர் உயிர் கொடுத்த "மிஸ்டர் பீன்" கதாப்பாத்திரம் நம்மை இன்று வரை சிரிக்க வைக்கிறது.

ஆனால் இவரது தனிப்பட்ட வாழ்க்கையில் இவரைப்பார்த்து சிரித்தவர்கள் தான் ஏராளம். அவர்கள் எல்லாரையும் 'சிரிக்கவைத்து' தன் வெற்றியை நிலைநாட்டினார் அட்கிசன்.

One Year of News Sense
One Year of News SenseTwitter

இஞ்சினியர் - நடிகர்

இங்கிலாந்தில் ஒரு மிடில் க்ளாஸ் குடும்பத்தில் பிறந்தார் அட்கின்சன்.

இவருக்கு 3 அண்ணங்கள். அறிவியலில் ஆர்வம் இருந்ததால் இஞ்சினியரிங் படித்தார் அட்கின்சன்.

கல்லூரி வாழ்க்கை அட்கின்சனுக்கு அத்தனை எளிமையானதாக இல்லை. காரணம் அவருக்கு இருந்த பேச்சு தடுமாற்றம்.

திணறித் திணறி பேசுவதனால் இளமைக்காலம் முழுவதும் அவதிப்பட்டு வந்தார் அட்கின்சன்.

அவர் போகும் வரும் இடமெல்லாம் கேலிகள் சூழ்ந்தன. அவரது உருவத்துக்காகவும் பேச்சுக்காகவும் அவரை நக்கல் செய்வது சுற்றியிருந்தவர்களின் பொழுதுபோக்காக இருந்தது.

இதனால் அவர் மிகுந்த தாழ்வுமனப்பான்மை உடைய நபராக மாறினார். மேலும் நண்பர்களே இல்லாமல் எப்போதும் தனிமையில் இருக்கவும் தள்ளப்பட்டார்.

இந்த தனிமை தான் அவரது மிஸ்டர் பீன் கதாப்பாத்திரமும் நண்பர்களே இல்லாமல் இருக்க காரணம்.

விரக்தியில் துவளாமல் தனது கவனத்தை மொத்தமும் படிப்பு பக்கம் திருப்பினார் அட்கின்சன்.

அவரை கேலி செய்தவர்கள் மூக்கு மேல் விரல்வைக்கும் அளவு படித்து ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் மேற்படிப்புக்கு தகுதி பெற்றார் அட்கின்சன்.

அப்போது தான் தனக்கு அறிவியல் நன்றாக வந்தாலும் நடிப்பு தான் நாம் மகிழ்ச்சியாக இருக்க உதவும் துறை என முடிவு செய்தார்.

ஆனால் அவரது திணறல் மற்றும் பேச்சு தடுமாற்றம் காரணமாக அவர் கலைத்துறையை துணிந்து தேர்ந்தெடுக்க முடியவில்லை.

மேற்படிப்புக்காக ஆக்ஸ்போர்ட் சென்றார்.

ஆரம்ப கால தோல்விகள்

அட்கின்சன் கல்லூரியில் படிக்கும் போது நடிப்பு தான் தனது துறை என உறுதியாக முடிவெடுத்தார்.

அதற்காக ஒரு காமடி குழுவில் இணைந்தார். ஆனாலும் அவரது திணறல் பிரச்னை அவரைத் துரத்தியது.

அவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பதற்காக பல ஆடிஷன்களுக்கு சென்றார். அனைத்திலும் ரிஜக்ட் செய்யப்பட்டார்.

சில இடங்களில் அவரது முகத் தோற்றம் காரணமாக, சில இடங்களில் திடகாத்திரமான உடலமைப்பு இல்லாததால், சில இடங்களில் திக்குவாய் பிரச்னையால்.. எல்லாமே தோல்வியாக தான் இருந்தது அவருக்கு.

தோல்விகள் துரத்தினாலும் தனது விடாமுயற்சியை கைவிடாமல் தொடர்ந்தார் அட்கின்சன்.

முட்டி மோதி தனது வெற்றிக்கான வழியையும் கண்டுபிடித்தார்.

மக்களை சிரிக்க வைப்பது தான் தனது முக்கியமான பணி என புரிந்து கொண்டு அதற்காக அவரே காமடிகளை எழுதத் தொடங்கினார்.

அப்போது சில கதாப்பாத்திரங்களை நடிக்கும் போது அவரால் திணறல் இல்லாமல் பேச முடிந்தது. இதனை உணர்ந்த போது அவரது வாழ்க்கைத் தொடங்கியது.

Mr.Bean : கேலிகளால் வெற்றியை தடுக்க முடியாது! - ரோவன் அட்கின்சன் வளர்ந்த கதை!
Steve Harvey: 30 வயதில் காலி பர்ஸ்; இப்போது ரூ.16,000 கோடி சொத்து- ஊர்குருவி பருந்தான கதை!

மிஸ்டர் பீன்

முதன் முதலாக Not the Nine O'Clock News என்ற பிபிசியின் நிகழ்ச்சியில் தோன்றினார் அட்கின்சன். இந்த நிகழ்ச்சியை அவரது நண்பர் ஒருவரே தயாரித்தார்.

அதன் பிறகு நிகழ்ச்சிகளில் தோன்றினாலும் அவர் வெற்றியடைய முடியவில்லை.

ரோவன் அட்கின்சன் தனக்காக தானே உருவாக்கிய மிஸ்டர் பீன் கதாப்பாத்திரம் அவரது வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியது.

திடகாத்திரமான உடலமைப்பு இல்லாமல், அழகான முகம் இல்லாமல், ஒரு வார்த்தைக் கூட பேசாமல் உலக மக்களைக் கவர முடியும் எனக் காட்டினார் ரோவான் அட்கின்சன்.

Mr.Bean : கேலிகளால் வெற்றியை தடுக்க முடியாது! - ரோவன் அட்கின்சன் வளர்ந்த கதை!
The Mountain Man : இறந்த மனைவிக்காக 22 ஆண்டுகள் மலையை உடைத்த மனிதர் - ரியல் ஹீரோவின் கதை!

 மிஸ்டர் பீனுக்கு முதலில், 'மிஸ்டர் வொயிட்’ (Mr.White) என்று பெயர் வைத்தார். பின்னர், ஏதாவது காய்கறிகளோடு தொடர்புடைய பெயர் வைக்கலாம் என்று யோசித்து, 'மிஸ்டர் காலிஃபிளவர்’ என்று வைத்தார். அதுவும் பிடிக்காமல், கடைசியாக வைத்த பெயர்தான், 'மிஸ்டர் பீன்.’

1990 முதல் 1995 வரை தொலைக்காட்சியில் 18 கதைகளில் மிஸ்டர் பீனாக நடித்தார். பிறகு, அனிமேட்டட் தொடராகவும், திரைப்படங்களாகவும் வந்தது. ரோவன் அட்கின்சன், பீனைப் போன்று முகங்களில் சேட்டை இல்லாமல், மிகவும் அழகாக, சொதப்பலான உளவாளியாக 'ஜானி இங்லீஷ்’ (Johnny English) என்ற கதாபாத்திரத்தில் இரண்டு திரைப்படங்கள் நடித்திருக்கிறார். இந்தப் படங்கள் ஜேம்ஸ் பாண்டை கேலி செய்பவை.

Mr.Bean : கேலிகளால் வெற்றியை தடுக்க முடியாது! - ரோவன் அட்கின்சன் வளர்ந்த கதை!
கானிம் அல் முஃப்தா : குரான் ஓதி உலகக் கோப்பையைத் தொடங்கிவைத்த இளைஞர் யார்?

கனவுகளை இறுகப்பிடித்துக்கொள்ளுங்கள்

உலக மக்களால் மிகவும் விரும்பப்படும் நகைச்சுவையாளராகத் திகழ்கிறார் அவர்.

அட்கின்சன் வாழ்வில் எந்த சூழலிலும் தனது கனவுகளை விட்டு கொடுக்காமல் இருந்தார்.

கேலிகள் சூழ்ந்து வந்த இளமைப் பருவத்தில் தான் நடிகராக வேண்டும் என ஆசைப்பட்டார்.

அவரை யாரும் நடிகராக ஏற்றுக்கொள்ளாத போது தான் தனக்கு தானே கதைகளை எழுதினார்.

ஆக்ஸ்போர்டில் அறிவியலாளராக வாய்ப்புக் கிடைத்த போது தனக்குத் தோல்விகளையே வழங்கிக்கொண்டிருந்த நடிப்பை நோக்கித் திரும்பினார்.

ஒரு கனவை கைவிடாமல் பிடித்துக்கொண்டிருந்தால் நிச்சயமாக அது நம் கைகளை உயர்த்தும் என்பதற்கு அவரது வாழ்க்கை உதாரணம்.

ஒரு வேளை அட்கின்சன் சரளமாக ஆங்கிலம் பேசியிருந்தால்... சாதாரண அமெரிக்க நடிகராக இருந்துகொண்டிருந்திருப்பார்.

அவர் மொழியே இல்லாமல் எழுதிய மிஸ்டர் பீன் பாத்திரத்தால் தான் உலகப் புகழ் பெற்றார்.

Mr.Bean : கேலிகளால் வெற்றியை தடுக்க முடியாது! - ரோவன் அட்கின்சன் வளர்ந்த கதை!
Abdu Rozik : உலகிலேயே க்யூட்டான சிங்கர் - இணையத்தில் அதிகம் தேடப்படும் இவர் யார்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com