"இந்தியாவிடம் இருந்து சுயமரியாதையை கற்றுக்கொள்ளா வேண்டும்" - பாகிஸ்தான் பிரதமர் பேச்சு

இந்தியாவில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் மற்றும் காஷ்மீர் விவகாரம் காரணமாகத்தான் எங்கள் உறவுகள் மோசமடைந்தது. அதற்கு நான் வருந்துகிறேன் - இம்ரான் கான்
இம்ரான் கான்
இம்ரான் கான்Twitter
Published on

இம்ரான் ஆட்சிக்காலத்தில் பாகிஸ்தானில் பணவீக்கம் கட்டுக்கடங்காமல் அதிகரித்திருக்கிறது. விலை வாசி உயர்வு மக்களை வெகுவாக பாதித்துள்ளது. பொருளாதார நெருக்கடியைச் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் இம்ரான்கானுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்தனர்.

பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்மீது கடந்த 3-ம் தேதி வாக்கெடுப்பு நடத்தாமல், துணைச் சபாநாயகர் காசிம் சூரி நிராகரித்தார்.

இதையடுத்து ஜனாதிபதி ஆரிப் ஆல்வி இம்ரான்கான் பரிந்துரையின் பேரில் நாடாளுமன்றத்தைக் கலைத்து உத்தரவிட்டார். இதனால் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்த விவகாரத்தைப் பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை நடத்தியது.

விசாரணை முடிவில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தைக் கலைத்த அதிபர் ஆரிப் ஆல்வியின் நடவடிக்கை சட்ட விரோதமானது. அது செல்லாது என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது 9-ம் (இன்று) வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனத் தீர்ப்பளித்திருக்கிறது.

பாகிஸ்தான்
பாகிஸ்தான் Twitter


இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நேற்று இரவு நாட்டு மக்களிடம் உருக்கமாக உரையாற்றினார்.

`இருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் தொடங்கிய கட்சி தெஹ்ரீக்-இ-இன்சாஃப். அன்றிலிருந்து இன்றுவரை எனது கொள்கைகள் மாறவில்லை. நான் நேர்மை, நீதி மற்றும் பொது நலம் ஆகிய கொள்கைகளின் படி நடந்துள்ளேன்.

உச்சநீதிமன்ற தீர்ப்பால் நான் ஏமாற்றமடைந்துள்ளேன். ஆனால், நான் பாகிஸ்தான் நீதிமன்றங்களை மதிக்கிறேன். துணைச் சபாநாயகர் ஐந்தாவது பிரிவின் கீழ் தேசிய சட்ட மன்றத்தைக் கலைத்தார். அரசைக் கவிழ்க்க அந்நிய நாடு ஒன்று சதி செய்கிறது என்ற மிகக் கடுமையான குற்றச்சாட்டைக் குறைந்தபட்சம் உச்ச நீதிமன்றமாவது அழைத்து விசாரித்திருக்க வேண்டும். அந்த ஆவணத்தைப் பார்த்திருக்க வேண்டும்.

மோடி
மோடிNews Sense

அரசியல்வாதிகளின் மனசாட்சி வெளிப்படையாக விலைக்கு வாங்கப்படுகிறது, உலகின் எந்த ஜனநாயகத்தில் இது நடக்கிறது? இதையும் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் என்று எதிர்பார்த்தோம். எந்த மேற்கத்திய நாட்டிலும் யாரும் யாரையும் வாங்க நினைக்க மாட்டார்கள் யாரும் தன்னை விற்கமாட்டார்கள் என்றார் பிரதமர் இம்ரான்கான்.

நமது நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்ற வேண்டும். அதற்காக எனது நாட்டு மக்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். `நாம் இப்படியே இருக்க வேண்டும் என்றால் நாம் ஏன் நமது சுதந்திரத்தைக் கொண்டாடுகிறோம்?’ எனப் பாகிஸ்தான் மக்களிடம் நான் கேட்க விரும்புகிறேன்.

ஒரு கட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இன்னொரு கட்சிக்குப் போவது அனைவருக்கும் தெரியும். ஊடகங்களுக்கும் எல்லாம் தெரியும். இந்தியாவை மற்றவர்களைவிட எனக்கு நன்றாகத் தெரியும். எனக்கு அங்கே இருக்கும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் மற்றும் காஷ்மீர் விவகாரம் காரணமாகத்தான் எங்கள் உறவுகள் மோசமடைந்தது. அதற்கு நான் வருந்துகிறேன்.

இம்ரான் கான்
பாகிஸ்தான் : அமெரிக்காவை எதிர்க்கும் இம்ரான் கான்; இந்தியாவிற்கு பாராட்டு - Latest Updates

பாகிஸ்தான், ரஷ்யாவுக்கு எதிராகப் பேச வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் நமக்கு அழுத்தம் கொடுத்தது. ஆனால் இதே அழுத்தத்தை இந்தியாவுக்குக் கொடுக்க அவர்களுக்குத் துணிவில்லை. இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்தே சுதந்திரம் பெற்றது. ஆனால் மேற்கத்திய நாடுகளால் பாகிஸ்தான் ஒரு டிஷ்யூ பேப்பரை போல தூக்கி எறியப்படுகிறது. இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் சுயமரியாதையைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

இம்ரான் கான்
பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு, ராஜினாமா செய்த இம்ரான்கான்

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் தலையிட எந்த ஒரு வெளிநாட்டுச் சக்திக்கும் தைரியம் இல்லை. இந்தியா ஒரு பெருமைமிக்க நாடு. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சுதந்திரமானது மற்றும் ஒவ்வொரு கடும் சூழலையும் கடந்து ரஷ்ய அரசிடமிருந்து எண்ணெய் வாங்குகிறது. இந்தியாவைப் பற்றி இப்படிப் பேச யாருக்கும் தைரியமில்லை. எந்தவொரு வல்லரசும் இந்தியாவுக்கு ஆணைகளை இட முடியாது" என உரையாற்றினார். சமீப காலமாக அடிக்கடி பாகிஸ்தான் பிரதமர் இந்தியாவைப் புகழ்ந்து பேசி வருகிறார்.

இந்த நிலையில், பாகிஸ்தான் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இம்ரான்கானின் உரைக்குப் பின்பு "தற்போது அரசே நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்கிறது" என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

இம்ரான் கான்
பாகிஸ்தானைவிட இந்தியா சிறப்பு : பாராட்டிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com