நார்வே, சுவீடனில் தமிழ் மொழிக்கான முன்னுரிமை: அரசின் நடவடிக்கைகள் என்ன? - ஒரு வாவ் செய்தி!

மொழிகளுக்கு மட்டுமல்ல, நார்வே நாட்டில் வாழும் பல்வேறு இனப்பிரிவினரும் அவரவர் பண்பாட்டினைப் பேணிக் காக்கவும் வளர்க்கவுமென நடத்தப்படும் மாநாடுகள், விழாக்களுக்கு நார்வே நாட்டில் நிதி உதவி கிடைத்து வருகிறது.
நார்வே: சுவீடனில் தமிழ் மொழிக்கான முன்னுரிமை – கல்வியிலும் அன்றாட வாழ்க்கையிலும்?
நார்வே: சுவீடனில் தமிழ் மொழிக்கான முன்னுரிமை – கல்வியிலும் அன்றாட வாழ்க்கையிலும்?Twitter

ஸ்கேண்டியவன் நாடுகள் அல்லது நார்டிக் நாடுகள் என்றழைக்கப்படும் நார்வே, சுவீடன், டென்மார்க் மற்றும் ஃபின்லாந்து நாடுகளில் அவரவர் நாட்டின் தாய்மொழிக்கான முக்கியத்துவம் மட்டுமின்றி புலம்பெயர்ந்து வந்தோர்களின் தாய்மொழிகளுக்கும் சம அளவில் அங்கீகாரமும் முக்கியத்துவமும் தந்து அனைத்தையும் பேணிக்காக்க உதவுகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளின் மொழிச்சட்டங்களும், தங்கள் நாட்டில் வசிக்கும் சிறுபான்மையினருக்கான அங்கீகாரத்தினை ‘சிறுபான்மையினர் மொழியுரிமைச்சட்டம்’ வழியாகவும் இடம்பெயர்ந்தோ அகதிகளாக வந்தோருக்கான மொழியுரிமையை, ‘மொழியியல் மனித உரிமைச்சட்டம்’ வழியாகவும் அங்கீகரிக்கின்றது.

நார்வே நாட்டில் தமிழ்மொழிக் கருத்தரங்கம்

நான் நார்வே நாட்டின் அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடத்தில் 7 ஆண்டுகள் தமிழ் மற்றும் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்துள்ளேன்.

அந்த காலகட்டத்தில் தான் ஒவ்வொரு வருடமும் தாய்மொழிக் கல்விக்கான கருத்தரங்கினை நார்வே அரசு தங்கள் நாட்டில் வசிக்கும் கல்விகற்கும் மொழியினருக்கான வலுவூட்டப்  பன்னாட்டுக் கருத்தரங்கங்களை நடத்தத் தொடங்கியது.

Norway
NorwayRepresentational

ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாநில/பிராந்திய உள்ளூர் நிர்வாகங்கள் பொறுப்பேற்று நடத்தும் இக்கருத்தரங்கில் கலந்துகொள்ளத் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் பள்ளி, வகுப்புகள் நடத்தும் ஆசிரியர், ஆசிரியைகளுக்கான பயணச்செலவு, ஒவ்வொரு மொழியாக்குமென அளிக்கப்படும் பன்னாட்டு அறிஞர்களுக்கான செலவுகள், தங்கும் விடுதிக்கான செலவு, மற்றும் கருத்தரங்கம் நடத்த நட்சத்திர விடுதி எனப் பிரமாண்டமாக நடக்கும்.

2010 நான் முதன் முதலில் பேர்கன் நகரத்தில் அப்படியொரு கருத்தரங்கில், தமிழர் வரலாறு தொடர்பான உரை நிகழ்த்தினேன், சிறு நாடகமும் நடத்தினோம். நார்வே நாடு முழுமைக்கும் இருந்து தமிழ் பயிற்றுவிக்கும் ஆசிரியர், ஆசிரியைகள், இலங்கை மற்றும் மலேசியாவிலிருந்து அறிஞர்களும் வந்திருந்தனர்.

அதன் பின், 2014இல் ஸ்டாவாங்கர் என்ற இடத்தில் நடத்த மொழியியல் கருத்தரங்கிற்கு நாங்கள் அனைவரும் விமானத்தில் சென்று நட்சத்திர விடுதியில் தங்கி நார்வே நாட்டில் தமிழ்க்கல்வி வளர்ப்புத் தொடர்பான நிகழ்வுகளில் கலந்துகொண்டோம். முதல் நாள் கருத்தரங்கில் 15க்கும் மேற்பட்ட மொழியினர் கலந்துகொண்ட கூட்டு நிகழ்வு நடந்தது.

அதில், நார்வே நாட்டில் பிறந்து வளரும் பிற மொழியினருக்குத் தாய்மொழிக் கல்வியையும் நார்வேஜிய மொழிக் கல்வியையும் வழங்குவது தொடர்பான பயிற்சிகளை நார்வேஜிய மொழியியல் மற்றும் கல்வியியல் அதிகாரிகள் எங்களுக்கெல்லாம் வழங்கினர்.

இரண்டாம் நாள் கருத்தரங்கில், ஒவ்வொரு மொழியினருக்கும் தனித்தனி அரங்கங்கள் அதே நட்சத்திர விடுதியில் ஏற்பாடுச்செய்யப்பட்டு, அவரவர் மொழி வளர்ச்சித் தொடர்பான பயிற்சிகளும் வாத-விவாதங்களும் நடந்தன.

மொழிகளுக்கு மட்டுமல்ல, நார்வே நாட்டில் வாழும் பல்வேறு இனப்பிரிவினரும் அவரவர் பண்பாட்டினைப் பேணிக் காக்கவும் வளர்க்கவுமென நடத்தப்படும் மாநாடுகள், விழாக்களுக்கு நார்வே நாட்டில் நிதி உதவி கிடைத்து வருகிறது.

அறிவியல், கணிதப் பாடங்களில் தமிழ்

தாய்மொழிகளுக்கான கல்வி வளர்ச்சிக்கென நார்வே அரசு என்ற இணையப்பக்கத்தையும் செயல்படுத்தி வருகிறது.

இதில், தமிழுக்கான பக்கங்களில் நார்வே அரசு நடத்தும் மேல்நிலை வகுப்பிற்கான தமிழ்ப்பாடத் தேர்வுக்கான பயிற்சி நூல்களும் முந்தைய ஆண்டு வினாத்தாள்களும் கிடைக்கும். அதோடு, நார்வே அரசுப் பள்ளியில் பயிலும் தமிழ் மாணவ, மாணவியரின் தாய்மொழிக் கல்விப் பயிற்சிக்காக, கணிதம், சமூக அறிவியல் உள்ளிட்டப் பாடங்களுக்கான சில பகுதிகளும் தமிழில் கிடைக்கிறது.

ஒரு தமிழனாக, “ஏதோ ஒரு மூளையில், ஏதோ ஒரு நாட்டில் தமிழ் வளர்க்க நமக்கு எவ்விதத் தொடர்பும் இல்லாத ஏதோ ஒரு அரசு செலவு செய்து ஊக்கப்படுத்துகிறார்களே” என்ற பெருமிதமும் ஒரு சராசரி மனிதனாக, “அனைத்து மொழியினரையும் மதித்து அவரவர் தாய்மொழிகளுக்கான வளர்ச்சிக்கு நாமும் உதவ வேண்டும் என்ற அறம்சார் பாடமும் கற்க முடிந்தது.

நார்வே நாட்டில் நூல்களும் கையேடுகளும் தமிழில்

நார்வே நாட்டிற்கு நான் வருவதற்கு முன்பே நார்வேஜிய-தமிழ் அகராதி ஒன்றினை அரசின் நிதியுதவியில் பேராசிரியர் தயாளன் அவர்களும் திரு ஹேமச்சந்திரன் அவர்களும் பதிப்பித்து இருந்தார்கள். விளையாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தமிழ் கையேடுகள் பதிப்பிக்கவும் அரசு நிதி உதவிக் கிடைக்கிறது.

மகப்பேறு காலங்களில் உடல்நலன் பேணல், குழந்தை வளர்ப்பு, பல்துலக்குதல் தொடர்பான கையேடுகள் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் அச்சிடப்பட்டு இருந்ததைப் பார்க்கும்பொழுது ஆச்சரியமாக இருந்து.

2009ற்கு பிறகு, நார்வேஜிய மருத்துவத்துறைக்கான தமிழ் கையேடுகளில் ஒன்றான, நீரிழிவு நோய் விழிப்புணர்வுக் கையேட்டினை தமிழ் தட்டச்சு செய்யும் பணியையும் மருத்துவர் சிவகணேசன் உள்ளிட்ட குழுவினரோடு இணைந்து நானும் பங்களித்து மகிழ்ந்தேன்.

நார்வே: சுவீடனில் தமிழ் மொழிக்கான முன்னுரிமை – கல்வியிலும் அன்றாட வாழ்க்கையிலும்?
தேசாந்திரியின் தடங்கள் : சுவீடன்-நோர்வே வடதுருவ எல்லையில் நெடும்பயணம்! | பகுதி 4

அதோடு, மருத்துவம் சார்ந்த எவ்வித நடவடிக்கைகளுக்கும் ஒவ்வொரு மொழியினரும் தங்கள் தாய்மொழியைச் சார்ந்த மொழிப்பெயர்ப்பாளரை உடன் வைக்கக் கோரிக்கை வைக்க முடியும். அம்மொழிப்பெயர்ப்பாளருக்கான செலவினை அரசே ஏற்றுக்கொள்ளும்.

என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவரின் தனிப்பட்ட அனுபவத்தினையும் இங்கே பகிரலாம் என்று இருக்கிறேன். என்னுடைய நண்பரின் தந்தை ஓஸ்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார், அவருக்கும் ஆங்கிலமும் சரிவரத் தெரியவில்லை, நார்வேஜிய மொழியும் தெரியாது. அவரை கவனித்துக்கொள்ளும்  தலைமைச் செவிலியர் என் நண்பரிடம் உதவிக்கேட்டு, “சாப்பிடுகிறீர்களா?, வலிக்குதா?, கழிவறை செல்ல வேண்டுமா? மருந்து வேண்டுமா? வீட்டில் யாருடனேனும் பேச வேண்டுமா?” உள்ளிட்ட சொற்களைக் கற்றுக்கொண்டு அதனை ஆங்கில எழுத்திலும் நார்வேஜிய எழுத்திலும் தமிழ் உச்சரிப்புப் புரிந்துகொள்ள ஏதுவாக பெரிய தாளில் அச்சிட்டு நண்பரின் தந்தையின் கட்டில் அருகே ஒட்ட வைத்துள்ளார்.

நார்வே: சுவீடனில் தமிழ் மொழிக்கான முன்னுரிமை – கல்வியிலும் அன்றாட வாழ்க்கையிலும்?
நார்வே : அமெரிக்க ஷாமனுடன் காதல் - அரச பட்டத்தை துறந்த இளவரசி!

மருத்துவக் கல்வியும் நார்வேயில் தாய்மொழி மதிப்பெண்ணும்:

நார்வே நாட்டின் பள்ளிக்கூட மேல்நிலை வகுப்பில், இயற்பியல், வேதியியல், உயிரியியல், கணிதம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளோடு, சர்வதேச மொழிகள் (ஜெர்மன், ஃபிரெஞ்சு, ஸ்பானியம், தமிழ், பெர்சியம், அரேபியம் உள்ளிட்ட மொழிகளில்) ஒன்றை மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுத்து தேர்வெழுத வேண்டும்.

Vijay Asokan
Vijay AsokanAuthor

மேல்நிலை வகுப்பு மூன்று ஆண்டுகளிலும் இந்த மொழிப்பாடங்களில் ஒன்றில் தேர்வெழுதினால், இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியியல் பாடங்களில் மதிப்பெண் குறைந்திருந்து, இம்மொழிப் பாடத் தேர்வில் மதிப்பெண் அதிகமாக வாங்கியிருந்தால், மருத்துவம்/பொறியியல் சேர்க்கைக்கான கூட்டுமதிப்பெண்ணில், குறைந்த மதிப்பெண் வாங்கிய பாடத்தை நீக்கிவிட்டு மொழிப்பாட மதிப்பெண்ணை சேர்த்துக்கொள்ளலாம்.

அதாவது, நோர்வே நாட்டினில் தமிழ் மொழி பாடத்தில் பெறும் மதிப்பெண், நோர்வே நாட்டின் மருத்துவக் கல்வி நுழைவிற்கு உதவுகிறது. சமீபத்தில் நோர்வே நாட்டினில் மருத்துவக் கல்வியியல் சேர்ந்த தமிழர்களின் எண்ணிக்கை பெருகிவருகிறது. அதற்கு மிக முக்கியக் காரணமாக என் அனுபவத்தில் இருந்து பார்த்தால் கூட, எனக்கு தெரிந்த, நான் தமிழாராசிரியராக வகுப்பெடுத்த பலரும் தமிழால் உயர்வு பெற்றவர்களே!

நார்வே: சுவீடனில் தமிழ் மொழிக்கான முன்னுரிமை – கல்வியிலும் அன்றாட வாழ்க்கையிலும்?
தேசாந்திரியின் தடங்கள் : ஏன் சுவீடன், நார்வே சொர்க்கபுரியாக இருக்கிறது? | பகுதி 1

சுவீடனிலும் எங்கள் அனுபவம்:

அதேபோன்று, ஏற்கனவே சுவீடனில் தாய்மொழிக் கல்வி மற்றும் தாய்மொழியிலான நேர்முகத் தேர்வுப் பற்றி முந்தைய கட்டுரையில் எழுதியிருந்தேன். மருத்துவத் துறையிலும் எங்களுக்கு சில அனுபவம் உண்டு.

பள்ளியில் பயிலும் அனைத்துக் குழந்தைகளுக்கும் உடல்நலப் பரிசோதனை செய்யப்படும். அதற்கென ஒவ்வொரு வயதிற்கேற்ப என்தந்த தருணங்களில் எவ்வித சிகிச்சைக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டும் பள்ளிகளிலும் அறிவிப்பார்கள், அரசின் மருத்துவத்துறையின் வீட்டருகே இருக்கும் மருத்துவமனைகளில் குறிப்பேடு வந்தடையும்.

சுவீடனில் வசிக்கத் தொடங்கிய காலத்தில், டோர்சுலாண்டா என்னும் பகுதியின் பள்ளியிலேயே செவிலியர் ஆலோசனைக்கென அவ்வப்பொழுது அழைப்பு வரும். பள்ளி வளாகத்திலேயே உடல்நலன் மற்றும் மனநல ஆலோசனைக்கென அப்பள்ளியில் தனிப் பகுதியும் செவிலியர் மற்றும் வருகைதரு மருத்துவரும் இருந்தனர். செவிலியரும் குழந்தைக்கு சுவீடிஷ் மொழி தெரியாதத் தருணங்களில் எங்களுடன் அமர்ந்து தமிழில் சில சொற்களைக் கற்றுக்கொண்டு எங்கள் மகனுக்கு சில விளக்கங்களை அளித்தார்.

அதோடு, பல் மருத்துவமனை சிகிச்சைக்கென குழந்தைகளை அழைத்துச் சென்றபொழுது, அங்குள்ள மருத்துவர் எங்கள் தாய்மொழி தமிழ் என்பதை அறிந்து, எங்கள் குழந்தைகளைத்  தமிழ் தெரிந்த கேரளப் பெண் மருத்துவருக்குப் பரிந்துரைத்து அவரிடமே மேலதிக தொடர் சிகிச்சைக்குச் செல்ல உதவிப் புரிந்தார்.

நார்வே: சுவீடனில் தமிழ் மொழிக்கான முன்னுரிமை – கல்வியிலும் அன்றாட வாழ்க்கையிலும்?
தாய் மொழி தினம் : வெறும் அனுசரிப்பல்ல, தேசிய இனங்களின் உரிமைக்குரல்

குழந்தைகள் விசயத்தில் மொழியைக் கையாளுதல் தெரியாத மொழியில் தான் பேசுவதை அறம் சார்ந்து அவர் தவிர்ப்பதாகவும் தமிழ்த் தெரிந்த மருத்துவர் இவ்வளாகத்தில்  உள்ள பொழுது அவரிடம் தொடர் சிகிச்சைக்குச் செல்வதே குழந்தைக்கும் ஆரோக்கியம் எனச் சிரித்துக்கொண்டே விளக்கப்படுத்தினார். இதுவும் டோர்சுலாண்டா பகுதியில் அம்மூல்ட் பல் மருத்துவமனையில் நடந்த நிகழ்வு!

இப்படியாக, எங்கள் குழந்தைகளுக்கு இயல்பாகவே தாய்மொழியின் மீதான பற்றிற்குக் காரணமாக நார்வே நாடும் சுவீடன் நாடும் அமைந்துவிட்டது.

எங்கள் இளைய மகனிடம் யாராவது ஆங்கிலத்தில் பேசினாலோ புரியாத சொல்லை ஆங்கிலத்தில் கூறிவிட்டாலோ, மிகத் தன்னம்பிக்கையுடன், “நான் இன்னும் ஆங்கில மொழியினைக் கற்கத் தொடங்கவில்லை, எனக்கு ஆங்கிலம் தெரியாது தமிழில் கூறுங்களேன்” எனச் சொல்லிவிடுவார். தமிழில் பேசுவதும் தமிழோடு வாழ்வதும் எவ்வித இடர்பாடையும் கொடுக்காத ஸ்கேண்டியணேவியன் நாடுகளில் வசிக்கிறோம் என்பதே பெருமைதான்!

நார்வே: சுவீடனில் தமிழ் மொழிக்கான முன்னுரிமை – கல்வியிலும் அன்றாட வாழ்க்கையிலும்?
சுவீடன் : 110 மொழிகளுக்கு தாய்மொழிக் கல்வி வழங்கும் நாடு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com