டிக்டாக் வீடியோ பொதுவில் மக்களின் வாழ்க்கைத் தருணங்களை மகிழ்ச்சியாக மாற்றுவதற்குப் பயன்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால் பொழுது போக்கிற்கான இந்த செயலியை அளவில்லாமல் சொந்த வாழ்க்கையின் பிரச்சினைகளுக்குப் பயன்படுத்தும் போது அது எந்த எல்லைக்கும் சென்றுவிடலாம் என்பதை அமெரிக்காவில் நடந்த இந்த சம்பவம் காட்டியிருக்கிறது.
அமெரிக்காவில் ஒரு பாகிஸ்தானிய ஆண் தனது மனைவியோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்திருக்கிறார். இந்த விவாகரத்தில் தன் பக்கம் உள்ள நியாயம் குறித்து அந்தப் பெண் டிக்டாக்கில் வீடியோக்கள் வெளியிட்டிருக்கிறார். இதனால் அந்த பாகிஸ்தானியர் ஆத்திரமடைந்தார்.
அவர், அமெரிக்காவின் ஜியார்ஜியாவிலிருந்து சிக்காக்கோ வரை கிட்டத்தட்ட 1,400 கிலேமீட்டர் காரில் பயணம் செய்து தனது முன்னாள் மனைவியைக் கொலை செய்தார். பின்னர் அவரும் தற்கொலை செய்து இறந்து போனார். டிக்டாக்கினால் இரண்டு மரணங்கள். ஒன்று கொலை, மற்றொன்று தற்கொலை. அப்படி என்ன நடந்தது அவர்களுக்கிடையில்?
அந்தப் பெண்ணின் பெயர் சானியா கான் (29). அவர் ஒரு புகைப்படக் கலைஞராக அமெரிக்காவல் பணியாற்றினார். தனது கசப்பு நிறைந்த மணவாழ்க்கையிலிருந்து தான் எப்படித் தப்பித்தேன் என்று அவர் டிக்டாக்கில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோக்களில் தனது வலி நிறைந்த விவாகரத்திலிருந்து எப்படி தனது வாழ்வின் காயங்களை ஆற்றிக் கொண்டிருக்கிறார் என்பதை ஆவணப்படுத்தினார்.
போலீஸ் அறிக்கையின் படி அந்தப் பெண்ணின் முன்னாள் கணவரான ரஹீல் அகமதுவுக்கு வயது 39. தனது முன்னாள் மனைவியின் டிக்டாக் வீடியோக்களால் அவர் கோபமுற்றார். குறிப்பாக தெற்காசியச் சமூகத்தினர் பலர் அந்த வீடியோக்களை பார்த்து எதிர் வினையாற்றியிருக்கின்றனர். இதுதான் ரஹீலின் ஆத்திரத்திற்குக் காரணம். அதற்குப் பழிவாங்கவே தனது 14 மணிநேர கொலைப்பயணத்தை மேற்கொண்டு முன்னாள் மனைவியின் வீட்டிற்குச் சென்றார்.
இந்தச் சம்பவம் கடந்த வாரம் நடந்திருப்பதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன. ரஹீல் அகமதின் குடும்பத்தினர் அல்பாரெட்டா போலீசுக்கு ஒரு புகார் கொடுத்தனர். அதில் ரஹீலை காணவில்லை என்று குறிப்பிட்டிருந்தனர். இதனால் அவர்கள் சானியா கானின் வீட்டிற்குச்சென்று அவர் எப்படி இருக்கிறார் என்பதை சோதித்தறியுமாறு அவர்கள் போலீசிடம் கூறியிருந்தனர்.
இதை அடுத்து போலீஸ் சானியா இருக்கும் ஓஹியோ தெருவிற்கு வந்து அவரது குடியிருப்பை சோதித்தது. அப்போதுதான் அந்த வீட்டினுள் ஒரு ஆணும் பெண்ணும் துப்பாக்கி காயங்களால் வீழ்ந்து கிடந்ததை போலீசார் பார்த்திருக்கின்றனர்.
சானியா கான் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். அகமது அருகில் உள்ள நார்த்வெஸ்டர்ன் மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப் பட்டாலும் அங்கே அவரும் இறந்து போனதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் போலீசு ஒரு துப்பாக்கியை கண்டெடுத்தாகவும் கூறினர்.
இப்படி ஒரு பாகிஸ்தானிய பெண் அநியாயமாக கொலை செய்யப்பட்டது அங்கே வாழும் தெற்காசிய சமூகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக தெற்காசிய பெண்கள் பலரும் இதை தம்மோடு ஒப்பிட்டுப் பார்த்தனர். விவாகரத்தான பெண்கள் தமது கணவன்மார்களை விட்டு பிரியும் போது அவர்களும் இதே போன்ற களங்கங்களையும், தனிமைப்படுத்தலையும் எதிர்கொண்டதாக அவர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்காவில் வசிக்கும் ஒரு மகாராஷ்டிராவைச் சேர்ந்த பெண், “அந்தப் பெண் போலவே என்னையும் பார்க்க முடிந்தது" என்று என்பிசி நியூசிடம் கூறினார். “அந்தப் பெண் அவனை விட்டு விலகிச் சென்றதால்தான் மகிழ்ச்சியாக உயிர்வாழ முடிந்தது. அவளால் அவனுடன் வாழ்க்கையை நடத்தியிருக்கவே முடியாது" என்றும் அவர் கூறினார்.
சானியா கான், டென்னசி மாநிலத்தில் சாட்டநூகாவை பூர்விகமாகக் கொண்டவர். அவர் தனது மணவாழ்க்கைப் போராட்டங்களை டிக்டாக்கில் பேசியிருந்தார். பெண்களுக்கு எல்லைகள் என்று வரையறுக்கப்படும் அச்சுறுத்தல்களைச் சட்டைசெய்ய வேண்டாம் என்று அவர் தனது சக பெண்களைக் கேட்டுக் கொண்டார். தனது விவாகரத்தை தனது சொந்த குடும்பமும், சில தெற்காசிய சமூகத்தினரும் ஆதரிக்கவில்லை என்பதையும் அவர் அந்த வீடியோக்களில் பகிர்ந்து கொண்டார்.
“தெற்காசிய சமூகப் பெண்ணாக இருப்பதினாலேயே விவாகரத்து என்பது சில சமயம் தோல்வியடையலாம்" என்று ஒரு வீடியோவில் அவர் பேசினார். இதனால் சமூகம் பெண்கள் மீது முத்திரை குத்தும். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அனுசரணையாக இருக்கமாட்டார்கள். மேலும் நம்மீது கடும் அழுத்தத்தைக் கொடுப்பார்கள் என்றெல்லாம் அவர் பேசியிருந்தார். இதனால் பெண்கள் தமது மணவாழ்க்கையிலிருந்து வெளியேறுவது சிரமத்திற்குரியது என்று அவர் வருத்தப்பட்டார்.
இப்படி தனது மணவாழ்க்கை மற்ற பெண்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அவர் டிக்டாக்கில் வீடியோக்களை பகிர்ந்திருக்கிறார். ஆனால் அவர் கணவரோ அதை, தான் அவமானப்படுத்தப்பட்டது போல எடுத்துக் கொண்டு சானியாவை கொன்று விட்டு அவரும் தற்கொலை செய்து விட்டார்.
மணவாழ்க்கையிலும் சரி, அதிலிருந்து பிரிவதும் சரி நாகரீகமாகவும், பண்போடும், சுதந்திரமாகவும் இருக்க வேண்டும். இல்லையேல் மகிழ்ச்சியைக் கொண்டு வருவதாகக் கூறப்படும் மணவாழ்க்கையே நரகத்தின் வாயிலாக மாறி விடுகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust