Peanut : பிறக்கும் போதே இறக்க வேண்டிய கோழி - உலகிலேயே அதிக ஆண்டுகள் வாழ்ந்து சாதனை!

இப்போது இருபது ஆண்டுகள் உயிருடன் வாழ்ந்திருக்கும் பீனட், பிறக்கும் போது அதன் முட்டையில் இருந்து கூட வெளியே வராமல் செத்துப்போயிருக்குமாம்.
Peanut 20 : பிறக்கும் போதே இறக்க வேண்டிய கோழி - உலகிலேயே அதிக ஆண்டுகள் வாழ்ந்து சாதனை!
Peanut 20 : பிறக்கும் போதே இறக்க வேண்டிய கோழி - உலகிலேயே அதிக ஆண்டுகள் வாழ்ந்து சாதனை!Twitter
Published on

அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் மாகாணத்தில் வசிக்கும் பெண்ணின் வளர்ப்பு கோழி உலகிலேயே வயதான கோழி என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது.

இந்த கோழியின் வயது குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் 304 நாட்கள் என உறுதிபடுத்தப்பட்டப்பின் இந்த பட்டத்தை வழங்கியுள்ளனர்.

இந்த கோழியின் பெயர் பீனட். இது பெலிகன் டி'அக்கல் மற்றும் நான்கின் இனங்களின் கலவையாகும்.

வாட்டர்லூ பகுதியில் வசிக்கும் மர்சி டார்வின் என்பவர் தான் இதன் உரிமையாளர்.

கோழியின் வயதை ஜூலியா பார்கர் என்ற கால்நடை மருத்துவர் உறுதி செய்துள்ளார். இவர் 2003ம் ஆண்டு இந்த கோழியை நன்கு வளர்ந்த நிலையில் பார்த்ததாக தெரிவித்துள்ளார் என கின்னஸ் சாதனைகள் வலைத்தளம் தெரிவிக்கிறது.

மர்சி டார்வின் வளர்க்கும் பீனட் என்ற கோழிக்கு பல பேரக்குழந்தைகளும் அவர்களுக்கு குழந்தைகளும் கூட உள்ளனராம்.

இப்போது இருபது ஆண்டுகள் உயிருடன் வாழ்ந்திருக்கும் பீனட், பிறக்கும் போது அதன் முட்டையில் இருந்து கூட வெளியே வராமல் செத்துப்போயிருக்குமாம்.

அன்று, எல்லா முட்டைகளும் குஞ்சு பொரித்த பின்னர் ஒரு முட்டை மட்டும் குளிர்ந்து பொரிக்காமல் இருந்ததாம்.

Peanut 20 : பிறக்கும் போதே இறக்க வேண்டிய கோழி - உலகிலேயே அதிக ஆண்டுகள் வாழ்ந்து சாதனை!
ஓநாய், குரங்கு, கோழியால் வளர்க்கப்பட்ட குழந்தைகள்: மிருகங்களாகவே மாறிய மனிதர்களின் கதை!

டார்வின் அதனை குளத்தில் தூக்கி எறியலாமா என்று கூட சிந்தித்திருக்கிறார்.

டார்வின் பீனட் குறித்து, "அதன் முட்டைக் கூட உடைக்க முடியாததாக இருந்தது.

நான் உடைத்து கையில் எடுத்த போது கொளகொளப்பாக கையில் ஒட்டிக்கொண்டது.

அது ஒருநாள் கூட வாழும் என நான் நினைக்கவில்லை." எனக் கூறியிருக்கிறார்.

Peanut 20 : பிறக்கும் போதே இறக்க வேண்டிய கோழி - உலகிலேயே அதிக ஆண்டுகள் வாழ்ந்து சாதனை!
அமெரிக்கா : தலையில்லாமல் 18 மாதம் வாழ்ந்த கோழி : அறிவியலை மிஞ்சும் அதிசய கதை!

தான் பெற்ற குழந்தை போல டார்வின் பீனடுடன் அன்பாக பழகியிருக்கிறார்.

முதல் இரண்டு ஆண்டுகளுக்கு அதை வீட்டுக்குள் கூட்டில் வைத்தே வளர்த்திருக்கிறார். பின்னர் மற்ற கோழிகளுடன் அதுவும் விளையாடத் தொடங்கியிருக்கிறது.

பீனட் அதன் 8 வயதில் தான் முதன்முறையாக முட்டையிடத் தொடங்கியிருக்கிறது.

இது சாதாரண கோழியை விட மிக அதிக வயது.

மேலும் ஒரு சாதாரண கோழி 5 முதல் 10 ஆண்டுகள் தான் வளரும் ஆனால் பீனட் 20 ஆண்டுகள் வளர்ந்துள்ளது.

Peanut 20 : பிறக்கும் போதே இறக்க வேண்டிய கோழி - உலகிலேயே அதிக ஆண்டுகள் வாழ்ந்து சாதனை!
கோழி முட்டை என நினைத்து golf ball ஐ விழுங்கிய பாம்பு - என்ன நடந்தது தெரியுமா?
Peanut 20 : பிறக்கும் போதே இறக்க வேண்டிய கோழி - உலகிலேயே அதிக ஆண்டுகள் வாழ்ந்து சாதனை!
ஒரு கோழி முட்டையின் விலை 47,000 ரூபாய் - அப்படி என்ன சிறப்பு?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com