இந்த ரஷ்ய பகுதியில் பேய்கள் நடமாடுகிறதா? மனிதர்கள் செல்ல முடியாத 7 திகில் ஸ்பாட்ஸ்!

Mezgorye நகரம் தெற்கு யூரல் மலைபகுதியில் உள்ளது. இங்கு வெளியாட்கள் யாரும் வரக்கூடாது. இதனை கண்காணிக்க பாதுகாப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
snake
snakeCanva

இந்த உலகம் விசித்திரமானது, அதோடு பல தெரியாத மர்ம முடிச்சுகளை தன் உள்ளே வைத்துள்ளது. அறிவியல் வளர்ந்த நிலையிலும் சில இடங்கள் குறித்த மர்ம ரகசியங்கள் இன்றும் தீர்க்க முடியாதவையாக உள்ளன.

அந்த வரிசையில் மனிதர்கள் செல்ல முடியாத இடங்கள் குறித்து தான் என்ன பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

சர்ட்சி, ஐஸ்லாந்து

இந்த இடம் 1963 முதல் 1967 வரை பரவிய எரிமலை வெடிப்பின் மூலம் உருவானது. இந்த இடத்திற்கு பொது மக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது

சில விஞ்ஞானிகள் மட்டுமே அதன் தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பைப் பற்றி ஆராய்ச்சி செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

பாம்பு தீவு, பிரேசில்

பிரேசிலில் உள்ள இந்த ஆபத்தான தீவு, ஆயிரக்கணக்கான அதிக விஷமுள்ள பாம்புகளை உள்ளடக்கியது. இதனால் இது மக்கள் வசிக்க, செல்ல தகுதியற்ற இடமாக கூறப்படுகின்றது.

இந்தத் தீவில் இருந்து உயிருடன் திரும்புவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு எனவும் கூறப்படுகிறது. பிரேசில் அரசாங்கம் கூட மக்கள் இந்தத் தீவுக்குச் செல்வதைத் தடை செய்துள்ளது. இந்த பகுதி பூமியில் மிகவும் ஆபத்தான பாம்புகள் இருக்கும் பகுதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

கின் ஷி ஹுவாங்கின் கல்லறை, சீனா

கின் ஷி ஹுவாங்கின் கல்லறை சீனாவின் மர்மமான மற்றும் மக்கள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதியாகும்.

இந்த கல்லறை முதன் முறையாக 1974 கண்டறியப்பட்டது. வரலாற்றாசிரியர்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த இடத்தை மிகவும் மர்மமானதாக கருதுகின்றனர். இந்த கல்லறையின் பெரும்பகுதி இன்னும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

snake
Malcha Mahal: இந்திய தலைநகரில் அமைந்திருக்கும் இந்த அமானுஷ்ய மாளிகை பற்றி தெரியுமா?

நிஹாவ் தீவு, அமெரிக்கா

சுமார் 160 குடியிருப்பாளர்கள் வசிக்கும் நிஹாவ் தீவு, வெளியாட்கள் வர தடை செய்கிறது. இந்தத் தீவில் குடும்பத் தொடர்பு உள்ளவர்கள் அல்லது அமெரிக்க கடற்படையுடன் இணைந்திருப்பவர்களுக்கு மட்டுமே பார்வையிட அனுமதி வழங்கப்படுகிறது.

தீவின் சுற்றுச்சூழலையும் அதன் வனவிலங்குகளையும் பாதுகாப்பதற்காக அரசாங்கம் இந்த கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அழகிய கவர்ச்சி இருந்தபோதிலும், Niihau தீவு வெளியாட்களால் அணுக முடியாததாக உள்ளது.

டூம்ஸ்டே வால்ட், நார்வே

இந்த இடம் ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்த இடம், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து 100 மில்லியன் விதைகளின் தொகுப்பைக் கொண்டுள்ளது .

நமது பூமியில் தாவரங்களை பாதிக்கும் பாதகமான சூழல் ஏற்பட்டால் உலகின் தாவரங்களை புத்துயிர் பெறுவதற்கான ஆதாரமாக செயல்படும். 2008 ஆம் ஆண்டு கட்டமைக்கப்பட்ட இந்த பகுதி பூகம்பம் மற்றும் இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போது பாதிக்காத வகையில் , தோராயமாக 200 நிலைத்து நிற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிக்குள் மனிதர்கள் செல்ல அனுமதி இல்லை.

snake
மனிதர்கள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதிகள்: இந்தியாவில் எங்கே? என்ன ஆபத்து இருக்கிறது?

போர்ட் நாக்ஸ் அமெரிக்கா

அமெரிக்கா தங்களின் முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் பாதுகாப்பாக வைக்க இந்த இடம் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. உலகிலேயே மிகவும் பாதுகாப்பான இடமாக போர்ட் நாக்ஸ் உள்ளது.

பலவித பாதுகாப்பு முறைகளை கடந்துதான் இந்த இடத்தை அடைய முடியும்.

இந்த கட்டிடம் கான்கிரீட் கிரானைட்டால் ஆனது மற்றும் எஃகு மூலம் மூடப்பட்டிருக்கும், இது எந்த விதமான தாக்குதலிலும் இருந்து பாதுகாக்கிறது. அமெரிக்காவின் முக்கிய ரகசிய ஆவணங்கள் உள்ள இந்த பகுதிக்கு சமானிய மனிதர்கள் செல்ல முடியாது.

Mezhgorye, ரஷ்யா

ரஷ்யாவின் மர்மமான பகுதிகளில் இதுவும் ஒன்று. Mezhgorye பகுதியில் பேய்கள் அலைந்து திரிவதாகவும் ஒரு கதை உள்ளது. Mezhgorye நகரம் தெற்கு யூரல் மலைபகுதியில் உள்ளது. இங்கு வெளியாட்கள் யாரும் வரக்கூடாது.

இதனை கண்காணிக்க பாதுகாப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இங்கு வெளியாட்கள் வருவதற்கு ஏன் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதும், எப்படி ஒரே இடத்தில் இந்த அளவிற்கு மர்மமான இடங்கள் உருவானது என்பதும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை , ரஷ்யாவின் விலகாத மர்மங்களில் Mezhgorye பகுதியும் ஒன்று.

snake
இந்தோனேசியாவில் இருக்கும் Chicken Church - கைவிடப்பட்ட இந்த கட்டிடம் பிரபலமானது எப்படி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com