Prince Harry: ”என் கழுத்தை பிடித்து கீழே தள்ளினார்” இளவரசர் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்!

இளவரசர் ஹாரியின் புத்தகமான Spare இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளது. இதில் பல அதிர்ச்சிகர சம்பவங்களை நினைவுக்கூர்ந்துள்ளார் இளவரசர்.
Prince Harry
Prince Harryட்விட்டர்
Published on

இங்கிலாந்து அரசக் குடும்பம் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றது. ராஜகுடும்பம் என்றாலும், வீட்டுக்கு வீடு வாசப்படி தான் என்பது போல, இளவரசர்களுக்குள் வெளியில் சொல்லப்படாத சண்டை, இளவரசி டயானாவின் மரணம், இளவரசர் ஹாரி மற்றும் மனைவி மேகன் அரசப்பட்டதை துறந்தது என பட்டியல் நீள்கிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டு, இளவரசர் ஹாரி அவரது மனைவி மேகன் தங்களது அரச பதவிகளை துறந்தனர். அதன் பிறகு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இருவரும் தோன்றினர். அவற்றில் அரசக் குடும்பம் மேகனையும், மேகனை திருமணம் செய்துகொண்டதால் தன்னையும் எப்படி நடத்தினர் என்பதை பற்றி பேசியிருந்தனர்.

இந்நிலையில், இளவரசர் ஹாரியின் புத்தகமான Spare இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளது. இதில் பல அதிர்ச்சிகர சம்பவங்களை நினைவுக்கூர்ந்துள்ளதாக தி கார்டியன், இந்துஸ்தான் டைம்ஸ் உள்ளிட்ட செய்தி தளங்கள் குறிப்பிட்டுள்ளன.

இளவரசர் ஹாரி குறிப்பிட்டுள்ள விஷயங்கள் சில சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

1. இளவரசர் வில்லியமுடனான மனக்கசப்பு:

இளவரசர் ஹாரியின் மனைவி மேகன் குறித்த விவாதம் ஒன்றின் போது, வில்லியம் தன்னை தாக்கியதாக கூறியுள்ளார் ஹாரி.

“எனது காலரை பிடித்து இழுத்து கீழே தள்ளினார். விழுந்ததில், நாய்க்கு உணவு வைக்கும் பாத்திரம் உடைந்து அதன் துகள்கள் என் மீது பட்டதில் காயம் ஏற்பட்டது. ஒரு நிமிடம் தலை சுற்றி நினைவிழந்ததுபோல ஆனது” என்றார்.

Prince Harry
எலிசபெத் மகாராணி - இளவரசர் பிலிப்பின் தசாப்தங்கள் கடந்த காதல் கதை!

2. எனது அன்பான அண்ணன் - பரம்பரை பகைவன்:

இளவரசர் ஹாரி தனது சகோதரனை அவரது அன்பான அண்ணன் என்றும் அதே சமயத்தில் தன்னுடைய பரம்பரை பகைவன் எனவும் குறிப்பிட்டுள்ளார். ”வாரிசுகளுக்கு இடையில் காலம் காலமாக இருக்கும் தகராறு, எங்களுக்குள்ளும் இருந்துவந்துள்ளது”

3. தந்தையின் வேண்டுகோள்

இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரியின் தொடர் மனஸ்தாபங்கள், சண்டைகள் குறித்து அறிந்திருந்தார் அரசர் சார்லஸ். “எனது கடைசி காலத்தை இருண்டதாக ஆக்கிவிடாதீர்கள்” என்று தன் தந்தை அவர்களிடம் கேட்டுக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்

4. உண்மையான தந்தை நான் தானா?

இளவரசர் ஹாரி, தன் தந்தை சார்லஸ் எப்போதும் தன்னிடம் ஒரு விஷயம் குறித்து நகைச்சுவையாக பேசி வந்ததாகவும், அது உண்மையில் தன்னை நெருடியதாகவும் கூறியுள்ளார்.

“நான் தான் உன் உண்மையான தந்தையா என்பது யாருக்கு தெரியும்?” என்பது தான் அந்த கேள்வி.

ஹாரி, இளவரசி டயானாவின் முன்னாள் காதலன் ஜேம்ஸ் ஹெவிட் என்பவருக்கும் டயானாவுக்கும் பிறந்த குழந்தை என்ற வதந்திகள் ஒரு காலத்தில் பரவலாக பேசப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

Prince Harry
டெல்லி : Dexter சீரிஸ் பார்த்து கொலை செய்த காதலன் - விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

5. கமிலியாவை மணக்க வேண்டாம்

தனது புத்தகத்தில் மற்றுமொரு அதிர்ச்சிகர செய்தியை கூறியுள்ளார் ஹாரி. தனது பெற்றோர் பிரிந்த பிறகு, கமிலியாவை மணக்க வேண்டாம் என்று அவரும் சகோதரர் வில்லியமும் எவ்வளவோ கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் அரசர் சார்லஸ் அதற்கு செவிசாய்க்கவில்லை எனவும் கூறியுள்ளார்

6. போதைப் பழக்கம்:

இந்துஸ்தான் டைம்ஸ் தளத்தின் அறிக்கையின்படி, இளவரசர் ஹாரி, தனது பதின்பருவத்தில், பல முறை போதை பொருளை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

7. 25 பேர் கொலை

தான் ராணுவத்தில் பணியாற்றியபோது 25 தாலிபன்களை கொன்றிருப்பதாக தெரிவித்துள்ளார் ஹாரி. ராணுவ வீரனாக இருக்கும் பட்சத்தில் இது தவிர்க்கமுடியாதது என்பதை தான் உணர்ந்ததாக கூறியுள்ளார்.

Prince Harry
Queen Elizabeth II : ராணியிடம் இருந்து வந்த கடைசி வாழ்த்து கடிதம் : என்ன இருந்தது?

8. நாஜி சீருடை விவகாரம்:

ஒரு முறை அங்கு நடத்தப்பட்ட காஸ்ட்யூம் பார்ட்டியில் ஹாரி நாஜிக்கள் சீருடையில் வந்திருந்ததால், பெரும் சர்ச்சை கிளம்பியது. ஆனால், தன்னை அந்த உடையில் வரச் சொன்னதே இளவரசர் வில்லியமும் கேட் மிடில்ட்டனும் தான் என்பதை தற்போது கூறியுள்ளார் ஹாரி

“அப்போது எனகு 20 வயது தான். என்ன செய்ய வேண்டும் என்று கேட்டபோது என்னை தூண்டிவிட்டது என் சகோதரர் தான். நான் இன்றும் நினைத்து வருத்தப்படும் நிகழ்வுகளில் இதுவும் ஒன்று”

9. இறந்த தாயுடன் பேசியது:

இளவரசர் ஹாரி ஒரு முறை, இறந்த தன் தாய் டயானாவுடன் பேச முயற்சித்ததாக கூறியுள்ளார்.

10. இளவரசி கேட் மிடில்ட்டனை அழ வைத்தது:

2018 ஆம் ஆண்டு ஹாரி மேகன் திருமணத்தின் போது வில்லியம்மின் மனைவி கேட் கர்ப்பமாக இருந்தார். அப்போது மேகன் அவரிடம் சாதாரணமாக கூறிய விஷயத்திற்கு கேட் அழத் தொடங்கியதில், வில்லியம் மேகனிடம் கடுமையாக நடந்துக்கொண்டதாக கூறியுள்ளார் ஹாரி

Prince Harry
Princess Diana : இன்றும் டயானா மரணம் குறித்து உலாவும் 5 சந்தேகங்கள் - A detailed report

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com