சீனாவிடம் மன்னிப்பு கேட்ட Snickers நிறுவனம் - காரணம் என்ன?

பிரபல அமெரிக்க சாக்லேட் நிறுவனமான மார்ஸ் புதிதாகத் தயாரிக்கப்பட்ட ஸ்னிக்கர்ஸ் சாக்லேட்டை விளம்பரப்படுத்தியது. அந்த விளம்பரம் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.
Snickers
SnickersTwitter
Published on

தைவானை தங்களது நாட்டின் ஒரு பகுதியாக சீனா கருதி வரும் நிலையில் ஸ்னிக்கர்ஸ் சாக்லேட் நிறுவனம் அதனைத் தனி நாடாக விளம்பரப்படுத்தியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

கடந்த சில நாட்களாகத் தைவான் மற்றும் சீனா இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. சீனாவின் முப்படைகளும் தைவான் தீவு நாட்டைச் சுற்றிப் பாதுகாப்பு ஒத்திகை நடத்தி வருகின்றன.

தைவான் நாடு தனக்குரியது என்று சீனா நெடுங்காலமாகத் தெரிவித்து வருகிறது. தைவான் அதை ஏற்கவில்லை. பெரும்பாலான உலக நாடுகள் தைவானை அங்கீகரிக்கவில்லை என்றாலும் சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்கா தைவானை ஆதரித்து வருகிறது.

Snickers
தைவான் வரலாறு : இந்த நாடு உருவானது எப்படி? இந்த தீவுக்கு சீனாவுடன் என்ன பகை?

இந்த நிலையில் பிரபல அமெரிக்க சாக்லேட் நிறுவனமான மார்ஸ் புதிதாகத் தயாரிக்கப்பட்ட ஸ்னிக்கர்ஸ் சாக்லேட்டை விளம்பரப்படுத்தியது. அந்த விளம்பரம் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.

அந்த ஸ்னிக்கர்ஸ் சாக்லேட் விளம்பரத்தில் தங்களின் புதிய தயாரிப்பானது தென் கொரியா, மலேசியா மற்றும் தைவான் ஆகிய "நாடுகளில்" மட்டுமே கிடைக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

Snickers
ஐஸ் கிரீம் விளம்பரத்தில் நடித்த பெண்ணை தடை செய்த இரான் அரசாங்கம்

தைவானை தங்களது நாட்டின் ஒரு பகுதியாக சீனா கருதி வரும் நிலையில் ஸ்னிக்கர்ஸ் சாக்லேட் நிறுவனம் அதனைத் தனி நாடாக விளம்பரப்படுத்தியது சர்ச்சையைக் கிளப்பியது.

இதற்காக ஸ்னிக்கர்ஸ் சாக்லேட் நிறுவனமான மார்ஸ் சீனாவிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

Snickers
சீனா மக்களின் ஆயுள் இரகசியம் இது தான் - ஆரோக்கியத்துக்கு கேரண்டி கொடுக்கும் ஒரு உணவு!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com