பிரிட்டனில் பெண்கள் வாக்குரிமைக்காக போராடிய இந்திய இளவரசி - யார் இந்த சோஃபியா துலீப் சிங்?

சோஃபியாவின் தந்தை மன்னர் துலீப் அரியணையை திரும்ப அடைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவந்தார். இதன் காரணமாக அவரை 1886ம் ஆண்டு பிரான்ஸுக்கு நாடுகடத்தினர். அதன் பிறகு கடன் சுமையால் தவித்தவர் குடும்பத்தை கைவிட்டார்.
பிரிட்டனில் பெண்கள் வாக்குரிமைக்காக போராடிய இந்திய இளவரசி - யார் இந்த சோஃபியா துலீப் சிங்?
பிரிட்டனில் பெண்கள் வாக்குரிமைக்காக போராடிய இந்திய இளவரசி - யார் இந்த சோஃபியா துலீப் சிங்?Twitter

இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு இளவரசி பிரிட்டனில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைக்க போராடினார்.

சோஃபியா துலீப் சிங் என்ற நாம் அதிகம் கேள்விப்படாத அந்த பெண்ணைப் பற்றிதான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.

பெண்களுக்கு வாக்குரிமை வேண்டி லண்டனில் 1910ம் ஆண்டு 300 பெண்கள் பேரணி மேற்கொண்டனர். அவர்களில் சோஃபியா துலீப் சிங்கும் ஒருவர்.

அணிவகுப்பாக சென்ற பெண்கள் பிரிட்டன் பிரதமர் ஹெச்.ஹெச். அஸ்கித்தை சந்திக்க முயன்றனர். அவர் சந்திக்க மறுக்கவே அணிவகுப்பு கலவரமானது.

நாடாளுமன்றத்துக்கு முன் கூடியிருந்த பெண்கள் மீது பிரிட்டீஷ் போலிசாரும் ஆண்களும் தாக்குதல் நடத்தினர். பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

இளவரசி சோஃபியா உள்பட 119 பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர். பெண்கள் வாக்குரிமை பெற வேண்டும் என்பதற்காக தொடர் போராட்டங்களை மேற்கொண்ட சோஃபியா ஒரு சீக்கிய இளவரசி.

பஞ்சாபின் கடைசி சீக்கிய பேரரசரான சர் துலீப் சிங்கின் மகள். விக்டோரியா மகாராணியின் ஆசி பெற்றவர். இவரது வாழ்க்கை குறித்து பார்க்கலாம்.

மன்னர் துலிப் சிங் சிறுவனாக இருந்தபோது அவர்களது சீக்கிய ராஜ்ஜியம் பிரிட்டிஷ் உடன் இணைக்கப்பட்டது.

அப்போது துலிப் சிங் நாடுகடத்தப்பட்டார். அப்படியாக இவர்களின் குடும்பம் பிரிட்டனுக்கு வந்து சேர்ந்தது.

சோஃபியா மன்னர் துலிப் சிங் மற்றும் ராணி பம்பா முல்லருக்கு 5வது குழந்தையாக 1876ம் ஆண்டு பிறந்தவர்.

தங்களது குடும்பத்தினருக்கு இருந்த வீட்டில் சிறுவயதைக் கழித்தார் சோஃபியா. அவரது தந்தை துலீப் அரியணையை திரும்ப அடைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவந்தார்.
இதன் காரணமாக அவரை 1886ம் ஆண்டு பிரான்ஸுக்கு நாடுகடத்தினர்.

அதன் பிறகு கடன் சுமையால் தவித்தவர் குடும்பத்தை கைவிட்டார். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஒரு துறையாக இருந்த இந்தியா ஆபிஸ் மூலம் இளவரசி சோஃபியா வாழ்வதற்கான உதவிகள் கிடைத்தன.

மன்னர் துலீப் சிங்
மன்னர் துலீப் சிங்

துலீப் சிங் விக்டோரியா மகாராணியிடம் செல்வாக்கு பெற்றிருந்ததால் பிரிட்டனில் அவர்களுக்கு இருக்க வீடு உள்ளிட்ட வசதிகள் கிடைத்தது.

மகாராணியின் கருணையாலும் அவரது விருப்பத்தின் பெயரிலும் சோஃபியா வளர்ந்த பின்னர் ஹாம்ப்டன் அரண்மனை வளாகத்தில் அவருக்கு ஒரு வீடு ஒதுக்கப்பட்டது.அங்கிருந்து தான் பெண்கள் வாக்குரிமைக்கான போராட்டத்தைத் துவக்கினார்.

துலீப் சிங் குடும்பத்தினர் இந்தியாவுக்கு வந்தால் கலகம் ஏற்படலாம் என எண்ணியதால் இளவரசி 4 முறை மட்டுமே இந்தியாவுக்கு வந்துள்ளார். ஒவ்வொரு முறையும் ஆங்கிலேய அரசு அவரது பயணங்களை கண்காணித்து வந்தது.

பிரிட்டனில் பெண்கள் வாக்குரிமைக்காக போராடிய இந்திய இளவரசி - யார் இந்த சோஃபியா துலீப் சிங்?
இதுவல்லவா காதல்! ஹாரி முதல் எட்வர்ட் வரை- காதலுக்காக பட்டத்தை துறந்த அரச குடும்பத்தினர்


தனது 30களில் ஒரு முறை இந்தியா வந்த போது கோபால கிருஷ்ண கோகலே, லாலா லஜ்பதி ராய் ஆகிய சுதந்திர போராட்ட வீரர்களை சந்தித்துப் பேசினார்.

அவர்களது சுதந்திர வேட்கையை தூண்டும் பேச்சால் ஈர்க்கப்பட்டவர் அந்த முறை 6 மாதங்கள் வரை இந்தியாவில் தங்கியிருந்தார்.

1908ம் ஆண்டு பிரிட்டனில் பெண்கள் சமூக மற்றும் அரசியல் சங்கத்தில் இணைந்தார். இந்த அமைப்பே பெண்களுக்கு வாக்குரிமை பெறுவதை முன்வைத்து போராடி வந்ததுதான்.

1911ம் ஆண்டு இந்த இயக்கத்தினருடன் டவுனிங் தெருவுக்கு சென்று இங்கிலாந்து பிரதமரின் காரை வழிமறித்தார் இளவரசி.


அடுத்தடுத்த போராட்டங்களின் மூலம் பெண்கள் வாக்குரிமை போராட்டத்தின் முக்கிய முகங்களில் ஒன்றாக மாறினார் சோஃபியா. இதற்காக பலமுறை கைது செய்யப்பட்டார்.

அரசாங்கத்தை எதிர்க்கும் விதமாக சோஃபியா மக்கள் தொகை படிமத்தை நிரப்பாமல் இருந்துள்ளார். வரி செலுத்தவும் மறுத்துவிட்டார்.

வரி செலுத்தாததால் அவரது நகைகளை பிரிட்டிஷ் அரசு கைப்பற்றி ஏலத்தில் விட்டது. இறுதியாக 1918ம் ஆண்டி பெண்களுக்கு வாக்குரிமை அளிப்பது குறித்து பிரிட்டிஷ் அரசு சுமுகமாக முடிவுக்கு வந்தது.

பெண்கள் வாக்குரிமை போராட்டம் மட்டுமல்லாமல் பல சமூக செயல்பாடுகளில் தன்னை இணைத்துக்கொண்டார். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் காயப்பட்ட இந்திய - பிரிட்டீஷ் வீரர்களின் சிகிச்சைக்காக நிதி திரட்டினார்.

பிரிட்டனில் பெண்கள் வாக்குரிமைக்காக போராடிய இந்திய இளவரசி - யார் இந்த சோஃபியா துலீப் சிங்?
விக்டோரியா மகாராணியின் இந்திய காதல்? யார் இந்த அப்துல் கரீம் - ரகசிய வரலாறு

1924ம் ஆண்டு சோஃபியா அவரது சகோதரி பம்பாவுடன் பஞ்சாப் மாகாணம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அப்போது தங்களது இளவரசியைப் பார்த்த பஞ்சாப் மக்கள் ஆனந்த கண்ணீருடன் வரவேற்புக்கொடுத்தனர்.

அந்த பயணத்தின் போது சோஃபியா ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த இடத்துக்கும் சென்று பார்வையிட்டார்.

தனது கடைசி காலத்தை சகோதரி பம்பா மற்றும் வீட்டு வேலைக்கார பெண்ணுடன் கழித்தார் சோஃபியா. அந்த நேரத்தில் “எவ்வளவு போராட்டங்களுக்கு பிறகு, பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்தால், அந்த உரிமை உங்களுக்கு அளிக்கப்படும் போது அதை பயன்படுத்த தவறமாட்டீர்கள்" என்று அடிக்கடி கூறுவாராம்.

பிரிட்டனில் பெண்கள் வாக்குரிமைக்காக போராடிய இந்திய இளவரசி - யார் இந்த சோஃபியா துலீப் சிங்?
சாப்பிடுவதில் கூட இவ்வளவு கண்டிஷனா? பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் கெடுபிடி கட்டுப்பாடுகள்!1948 ஆகஸ்ட் 22 ஆம் தேதி, தமது 71 வது வயதில் சோஃபியா உறக்கத்திலேயே இறந்தார். இப்போதும் பிரிட்டனில் நினைவுகூறப்படும் நபராக சோஃபியா திகழ்கிறார்.

இளவரசி சோஃபியாவை கௌரவிக்கும் வகையில் அங்கு அவர் முன்பு வாழ்ந்த வீட்டின் சுவரில் அவரின் பெயர் பொறித்த நினைவுச் சின்னம் திறக்கப்பட்டுள்ளது.

‘Sophia: Princess, Suffragette, Revolutionary’ என்ற அனிதா ஆனந்த் எழுதிய புத்தகத்தில் சோஃபியா பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.

பிரிட்டனில் பெண்கள் வாக்குரிமைக்காக போராடிய இந்திய இளவரசி - யார் இந்த சோஃபியா துலீப் சிங்?
15000 ஜப்பானிய வீரர்களை வீழ்த்திய 1500 பிரிட்டிஷ்-இந்திய வீரர்கள் - கோஹிமா போரின் வீர கதை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com