இலங்கை நெருக்கடி : ஆளும் அரசில் இருந்து விலகல் - செந்தில் தொண்டமான் அறிவிப்பு

இதையடுத்து, அரசாங்கத்திலிருந்து விலகி, நாடாளுமன்றத்தில் சுயேட்சையாக செயற்பட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
Go Home Gota
Go Home GotaNewsSense
Published on

இலங்கை அரசின் கூட்டணிக் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அரசாங்கத்திலிருந்து விலகியுள்ளதாக அக்கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமான் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

தினமும் 13 மணி நேர மின் வெட்டு, பெட் ரோல், டீசல், சமையல் எரிவாயுவுக்கு மைல் நீள வரிசைகளில் மக்கள், பத்திரிகைக் காகிதத் தட்டுப்பாடால் பத்திரிகைகள் டிஜிடலுக்கு மாறுவது, சாதாரண பேப்பர் தட்டுப்பாடால் பள்ளிப் பரீட்சைகள் ஒத்திவைப்பு, உணவுப் பொருட்களின் விலை தாறுமாறாக ஏறும் அவலம் …. ராபர்ட் முகாபேயின் ஆட்சியின் இறுதி நாட்களில் ஜிம்பாப்வேயின் பொருளாதார நெருக்கடியை, சமீப ஆண்டுகளாக வெனிசுவெலாவில் உலகம் கண்ட பொருளாதார வீழ்ச்சியை , 2010க்கு பின் கிரீஸ் கண்ட பொருளாதார நெருக்கடியை, இப்போது இலங்கை சந்தித்து வருகிறது.

மக்கள் வீதியில் இறங்கி போராடி வருவதை அடுத்து ஆளும் அரசிற்கான அழுத்தம் தினமும் அதிகரித்து வருகிறது.

Gotabaya
GotabayaNewsSense

சந்திப்பு… கோரிக்கை

இப்படியான சூழலில் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவுடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நேற்று சிறப்பு சந்திப்பொன்றை நடத்தியிருந்தது. மலையகத்திற்கான பல்கலைக்கழகம் அமைப்பதற்கான திட்டம், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள பிரச்சினை, ஆசிரியர் உதவியாளர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.

இவ்வாறு கலந்துரையாடப்பட்ட விஷயங்களுக்கு சாதகமான பதிலைஅதிபர் கோட்டபய வழங்கியதாக செந்தில் தொண்டமான் கூறினார்.

எவ்வாறாயினும், இச்சந்திப்பு தொடர்பில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்கள் நேற்றிரவு கலந்துரையாடியுள்ளனர்.

Go Home Gota
இலங்கை : “Go Home GOTA’ - வீதிக்கு வந்த பத்திரிகையாளர்கள்,நாட்டை விட்டு ஓடும் பணக்காரர்கள்
Go Home Gota
இலங்கை : மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் ராஜிநாமா - மீளுமா தீவு தேசம்?
Go Home Gota
இலங்கை நெருக்கடி : அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் நான்கு பெரும் தவறுகள் | பாகம் 2

தீர்மானம்

இதையடுத்து, அரசாங்கத்திலிருந்து விலகி, நாடாளுமன்றத்தில் சுயேட்சையாக செயற்பட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார். இந்த நிலையில், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து விலக, ஜீவன் தொண்டமான் தீர்மானித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஜீவன் தொண்டமான் மற்றும் மருதபாண்டி ராமேஷ்வரன் ஆகியோர் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் எதிர்பார்ப்புக்கு தலைசாய்த்தே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்த தீர்மானத்தை எட்டியதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவிக்கின்றார்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com