அமெரிக்காவில் சமீப நாட்களாக பொது இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. கடந்த மே மாதம் 2 துப்பாக்கிச் சூடு சம்வபங்கள் நடந்ததைத் தொடர்ந்து அமெரிக்காவில் பொது மக்கள் துப்பாக்கி வைத்திருப்பது தொடர்பாக விவாதம் எழுந்தது.
அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் மன்றத்தில் பதியப்பட்ட வழக்கில் "துப்பாக்கி வைத்திருப்பது அமெரிக்கர்களின் உரிமை" என தீர்ப்பு வழங்கப்பட்டது.
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. அமெரிக்கர்கள் தங்கள் பாதுகாப்புக்காக உரிமத்துடன் துப்பாக்கியை வைத்துக்கொள்ள முடியும் என்று சட்டம் இருப்பதனால் துப்பாக்கி புழக்கம் அதிகம்.
அமெரிக்கர்களால் Hyatt guns, grab gun, impact guns போன்ற வலைத்தளங்களில் ஆர்டர் செய்து துப்பாக்கிகளைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்திய மதிப்பில் துப்பாக்கிகளின் விலை 25000 ரூபாய் முதல் பல லட்சங்கள் வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் 44 மாநிலங்கள் துப்பாக்கி வைத்திருப்பதை ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்பட்ட உரிமை என வரையறுத்திருக்கின்றன. கலிஃபோர்னியா, நியூயார்க், நியூ ஜெர்சி உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் துப்பாக்கி வைத்திருப்பதற்கு ஏராளமான கட்டுப்பாடுகள் இருக்கின்றன. சில மாநிலங்களில் துப்பாக்கியை வாங்குவதற்கு உரிமம் பெறுவதுகூட அவசியமில்லை.
அமெரிக்கர்கள் பொது இடங்களுக்கு துப்பாக்கியை மறைத்து எடுத்துச் செல்ல சட்டம் அனுமதிக்கிறது. சில இடங்களில் வெளிப்படையாகவே கொண்டு செல்கின்றனர். கொரோனா பேரிடருக்கு முந்தைய புள்ளிவிவரங்கள் அமெரிக்க மக்களிடையே புழக்கத்திலிருக்கும் துப்பாக்கிகளின் எண்ணிக்கை 30 கோடி என வரையறுக்கப்படுகிறது.
கடந்த மே மாதம் நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் 30 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். இதில் 19 பேர் பள்ளிக் குழந்தைகள். டெக்ஸாசில் உள்ள எலிமன்டரி பள்ளியில் நடந்த குழந்தைகள் மீதான துப்பாக்கி சூட்டுக்கு முறையான காரணங்கள் கூட கண்டறியப்படவில்லை.
சிகாகோவில் நடந்த சம்பவத்தில் 5 பேர் இறந்தனர். இந்த சம்பவங்களைத் தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் துப்பாக்கி கலாச்சாரத்துக்கு எதிராக பேரணியில் ஈடுபட்டனர். பேரணியில் பங்கேற்ற கொலம்பியா மேயர் முரியல் பவுசர் பேசும்போது, “ பொறுத்தது போதும். நான் இன்று ஒரு மேயராகவும், தாயாகவும், லட்சக்கணக்கான அமெரிக்க மக்களின் சார்பாகவும் பேசுகிறேன். நமது குழந்தைகளை துப்பாக்கி வன்முறையிலிருந்து பாதுகாக்க வேண்டும். நாடாளுமன்றம் அதற்கான பணியை செய்ய வேண்டும்” எனப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து சரியான அனுமதியும் காரணமும் இன்றி பொது இடங்களுக்கு துப்பாக்கிக் கொண்டு செல்வதனைக் குற்றமாக்கும் வகையில் சட்டம் (New York’s restrictive law) கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால் உச்ச நீதிமன்றம் இது அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின் இரண்டாவது திருத்தத்தை மீறுவதாக தெரிவித்தது. பொது இடங்களுக்கு துப்பாக்கி எடுத்துச் செல்வது அமெரிக்கர்களின் உரிமை என நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த வழக்கை துப்பாக்கி கலாச்சாரத்துக்கு ஆதரவானவர்கள் கொண்டாடினாலும், மக்கள் வெகுவாக இதனால் அதிருப்தியடைந்தனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "சுப்ரீம் கோர்டின் இந்த முடிவு பொது அறிவு மற்றும் சட்டத்துக்கு மாறானது. இது நாம் அனைவரையும் பெரிய பாதிப்புக்கு உட்படுத்தும்" என்றுக் கூறினார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust