ஓட்டமான் : ஐரோப்பாவில் கோலோச்சிய இஸ்லாமிய பேரரசு வீழ்ந்தது எப்படி? - துருக்கியின் வரலாறு

ஓட்டமான் ராஜ்ஜியத்தின் அரசனாக இருந்த சுல்தான் செலிம் என்பவர், சுல்தானாக ஒருவர் பதவியேற்றுக் கொண்ட பின், அவரது சகோதரர்களை சிறையில் அடைத்து கொன்றுவிடுவது என்கிற விசித்திரமான, கொடூரமான கொள்கையைக் கொண்டு வந்தார்.
ஓட்டமான்
ஓட்டமான்syolacan

ஓட்டமான் சாம்ராஜ்ஜியம் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒரு காலத்தில் ஐரோப்பாவின் கணிசமான பகுதியை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த நாடு, இன்று பல்வேறு பொருளாதாரப் பிரச்சனைகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது.

அன்று ஓட்டமான் சாம்ராஜ்ஜியமாக இருந்ததுதான், இன்று துருக்கி குடியரசாக இருக்கிறது. ஓட்டமான் ராஜ்ஜியம் புகழின் உச்சத்தில் இருந்த போது, தெற்கில் வியன்னா வாயில் வரையிலும், பால்கன் பகுதியில் உள்ள பெரும்பாலான கிரீஸ், உக்ரைன் நாட்டின் கணிசமான பகுதி, மத்தியக் கிழக்கில் கூட ஒரு கணிசமான பகுதியை தன்னுள் கொண்டிருந்தது.

பல்கேரியா, ரோமானியா, மசிடோவனியா, பாலஸ்தீனம், ஜோர்டன், லெபனான்.. என்றழைக்கும் பல பகுதிகளும் ஒரு காலத்தில் ஓட்டமான் ராஜ்ஜியமாக இருந்தது.

உலக வரலாற்றில் மிகப்பெரிய & நீண்ட காலம் ஆட்சி செய்த ராஜ்ஜியங்கள் என பட்டியலிட்டால், அதில் ஓட்டமான் ராஜ்ஜியத்துக்கு நிச்சயம் ஓரிடமுண்டு என்கிறது பிபிசி வலைதளம்.

இஸ்லாமிய மதத்தாலும், இஸ்லாமிய நிறுவனங்களாலும் இந்த ராஜ்ஜியம் நீடித்து இருந்தது என்றால் அது மிகைபபடுத்தல் அல்ல.

Duncan P Walker

பிள்ளையார் சுழி போட்ட ஓஸ்மான்

பொதுவாக அரச குடும்பத்தின் பெயரில் தான் ராஜ்ஜியங்கள் நிறுவப்படும், ஆனால் ஓட்டமான் ராஜ்ஜியமோ, அரசரின் பெயரிலேயே நிறுவப்பட்டது.

1300 ஆம் ஆண்டில் செல்ஜுக் ராஜ்ஜியத்தைத் தோற்கடித்த, முதலாம் ஓஸ்மான் என்கிற அரசரின் பெயரைத் தழுவியே ஓட்டமான் ராஜ்ஜியம் உருவானது, அதற்குப் பெயரும் வைக்கப்பட்டது. முதலாம் ஓஸ்மான், ஓட்டமான் ராஜ்ஜியத்தை நிறுவிய நேரமோ என்னவோ.. தொடர்ந்து அடுத்த பல தசாப்த காலத்துக்கு ஓட்டமான் ராஜ்ஜியத்தின் நிலபரப்பு பறந்து விரிந்து கொண்டே போனது.

1345 ஆம் ஆண்டு முதல் முறையாக ஐரோப்பா மீது படையெடுத்த ஓட்டமான் ராஜ்ஜியம். பால்கன் பகுதியை வளைத்துப் போட்டது.

1402 ஆம் ஆண்டு தைமூரின் படையால் ஓட்டமன் படை தோற்கடிக்கப்பட்டாலும், 1453 ஆம் ஆண்டு பைசாண்டைன் ராஜ்ஜியத்தை துவம்சம் செய்து கான்ஸ்டான்டைன் என்கிற நகரத்தை தன் வசமாக்கிக் கொண்டது. அந்த நகரம்தான் இன்றும் உலகின் புகழ்பெற்ற நகரங்களில் ஒன்றாக திகழும் இஸ்தான்புல். அப்போது முதல் இஸ்தான்புல் ஓட்டமான் ராஜ்ஜியத்தின் தலைநகராகத் திகழ்ந்தது.

இரண்டாம் சுல்தான் மேகமத், இஸ்தான்புல் நகரத்தை வென்ற காரணத்தாலேயே, பைசாண்டைன் ராஜ்ஜியத்துக்கு முடிவுரை எழுதப்பட்டது. மேலும், ஓட்டமான் ராஜ்ஜியம் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு பெரிய சாம்ராஜ்ஜியமாக உருவெடுத்தது.

ஓட்டமான்
ஈரான் : பாலைவனம், தீவிரவாதம், போர் - நூற்றாண்டுகளாக நிம்மதியின்றி தவிக்கும் நாட்டின் கதை

இரண்டாம் கட்ட பாய்ச்சல்

செலிம் (Selim) & அவரது மகன் முதலாம் சுலைமான் அவர்களின் தலைமையின் கீழ், ஓட்டமான் பேரரசு அடுத்தகட்ட பாய்ச்சலைக் கண்டது. இவர்கள் காலத்தில் பாரசீகம், அரேபியா, ஹங்கேரி, பால்கான் பகுதிகள் என பல நிலபரப்புகளை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். ஓட்டமான் பேரரசின் பொற்காலம் என்றால் அது இவர்கள் வாழ்ந்த 1512 - 1566 வரை எனலாம்.

16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஓட்டமான் பேரரசுப் படைகள் மமழுக் ராஜ்ஜியத்தையும் (Mamlūk dynasty) தோற்கடித்து சிரியா, எகிப்து போன்ற பகுதிகளையும் தங்கள் ஆட்சிக்கு அடிபணிய வைத்தனர். வலிமையான ஓட்டமான் ராஜ்ஜிய கடற்படை, பார்பரி கோஸ்ட் பகுதியையும் தன் வசமாக்கிக் கொண்டது. இதே செலிம் காலத்திலிருந்து தான், ஓட்டமான் ராஜ்ஜியத்தில் அரசர்கள் மதகுருமார்களின் தலைவர் பதவியையும் வகிக்கத் தொடங்கினர்.

வெற்றி ரகசியம்

ஓட்டமான் ராஜ்ஜியத்தில் சிறு குறு மன்னர்களுக்கும் ஆளுநர்களுக்கும் கொடுக்கப்பட்டிருந்த அதிகாரத்தை விட, ஓட்டமான் ராஜ்ஜியத் தலைமைக்கு அதிக அதிகாரமிருந்தது. சுருக்கமாக மத்திய அரசுக்கே அதிக (அதீத) அதிகாரம்.

எப்போதும் ராஜ்ஜியத்துக்கு அடுத்த வாரிசு அறிவிக்கப்பட்டால், அது ஒருவருக்கே சென்று சேரும் வகையில் அரசர்கள் முடிவு செய்தனர்.

மிக முக்கியமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான், சுமார் 7 நூற்றாண்டுகளுக்கு ஆட்சி செய்தனர் என்கிறது பிபிசி வலைதளக் கட்டுரை ஒன்று. மறுபக்கம், அரசரே இஸ்லாமின் பாதுகாவலராகவும் கருதப்பட்டார். ஒட்டுமொத்த ராஜ்ஜியமும் இஸ்லாம் என்கிற ஒற்றைக் கொள்கையில் உறுதியாக, ஓற்றைக் காட்டாக நின்றது.

பல கலாச்சாரங்கள் நிலவினாலும், அதை அடக்கி ஒடுக்காமல் ஒற்றுமையோடு வாழ்ந்தனர். மற்ற கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்கள் முன்வைத்த யோசனைகள் ராஜ்ஜிய நிர்வாகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

ஓட்டமான்
துருக்கி : நீல மசூதி முதல் பாரம்பரிய வைன் வரை - 10 ஆச்சரிய தகவல்கள்

நம்பினால் நம்புங்கள்

ஓட்டமான் ராஜ்ஜியத்தின் அரசனாக இருந்த சுல்தான் செலிம் என்பவர், சுல்தானாக ஒருவர் பதவியேற்றுக் கொண்ட பின், அவரது சகோதரர்களை சிறையில் அடைத்து கொன்றுவிடுவது என்கிற விசித்திரமான, கொடூரமான கொள்கையைக் கொண்டு வந்தார்.

இதனால் அரச குடும்பத்தில் பிறந்த ஆண்பிள்ளைகளில் ஒருவர் அரசனாக முடிசூட்டிக் கொண்ட பின், மற்றவர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். பிற்காலத்தில் கொலை என்கிற நிலையில் இருந்து, சற்றே கருணை காட்டப்பட்டு, சிறையிலேயே நீண்ட காலத்துக்கு அடைத்து வைக்கப்பட்டனர்.

சரிவோ சரிவு - பேரரசின் சரிவு

செழிப்பாக வாழ்ந்த ராஜ்ஜியங்கள் வீழ்வதும், வீழ்ந்த ராஜ்ஜியங்கள் மீண்டும் உயிர்பெற்று வாழ்வதும் தானே வரலாறு. அப்படி, செலிம் & சுலைமான் காலத்தில் கோடிப் கட்டிப் பறந்த ஓட்டமான் ராஜ்ஜியம், மெல்ல 16 ஆம் நூற்றாண்டின் கடைசி காலத்தில் வீழத் தொடங்கியது. அதற்கு இரண்டு முக்கிய காரணங்ககளை வரலாற்று ஆசிரியர்கள் பட்டியலிடுகிறார்கள்.

ஓட்டமான்
ஜப்பான்: ராணுவ பாலியல் விடுதிகள் டு இந்தோனேசியர்கள் அடிமைத்தனம் - ஒரு சுவாரஸ்ய வரலாறு!

1. வியன்னா முற்றுகை

ஓட்டமான் ராஜ்ஜியத்தின் தொடக்க காலத்தில் இருந்தே, வியன்னா மீது அவர்களுக்கு ஒரு கண் இருந்தது. தொடர்ந்து பலமுறை வியன்னாவைக் கைப்பற்ற முயற்சித்தனர். அப்படி 1683 ஆம் ஆண்டு கடைசியாக ஒரு முறை வியன்னாவைக் கைப்பற்ற முயன்ற போது, அந்த முயற்சியில் தோற்றது ஓட்டமான் பேரரசு. அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பல்வேறு தோல்விகள் காரணமாக, 1699 ஆம் ஆண்டுவாக்கில் ஓட்டமான் ராஜ்ஜியம் ஹங்கேரியை விட்டுக் கொடுக்க வேண்டிய சூழல் உருவானது.

வியன்னா
வியன்னா

2. ஊழல் & மோசமடைந்த நிர்வாகம்

இதற்கிடையில், ஓட்டமான் ராஜ்ஜியத்தில் நிலவிய ஊழல், பாழடைந்த நிர்வாகம் போன்ற அடிப்படைப் பிரச்சனைகள் ஒட்டுமொத்த சாம்ராஜ்ஜியத்தின் அஸ்தமனத்துக்கு வித்திட்டது. 17 & 18 ஆம் நூற்றாண்டுகளில், ஆஸ்திரியா, ரஷ்யா, போலாந்து உடனான, முழுமையாகத் திட்டமிடப்படாத போர் காரணமாக ஓட்டமான் ராஜ்ஜியம் தனக்குத் தானே மூடுவிழா கண்டது.

14 ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டு வரை வலிமையான ராஜ்ஜியமாக பட்டொளி வீசிக் கொண்டிருந்த ராஜ்ஜியம், 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பா கண்டத்திலேயே பலவீனமான ராஜ்ஜியமாக நலிந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 1912 - 13 நூற்றாண்டில் நடந்த பால்கன் போர்களில் ஓட்டமான் ராஜ்ஜியத்தின் வசமிருந்த மிச்ச மீதி நிலபரப்புகளும் கரைந்து போயின.

முதலாம் உலகப் போரின் போது ஜெர்மனி பக்கம் நின்று போராடியதால், முதலாம் உலகப் போருக்குப் பிறகு, ஓட்டமான் ராஜ்ஜியமே கலைக்கப்பட்டு 1922 ஆம் ஆண்டில் துருக்கி குடியரசு பிரகடனப்படுத்தப்பட்டது.

ஓட்டமான்
செலெஸ்டியல் பேரரசு முதல் கிரேட் பிரிட்டன் வரை : உலகை ஆண்ட டாப் 5 பேரரசுகள் எவை?

இன்றைய துருக்கி

கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தான், துருக்கி நாட்டில் மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு, சுமார் 50,000 கக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ரெஸிப் தயிப் எர்தோகன் கடந்த 20 ஆண்டுகளாக அதிபராக பதவியில் இருக்கிறார். துருக்கியில் விலைவாசி கட்டுக்கடங்கக்காமல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

ஓட்டமான்
Saudi Arabia - வின் எண்ணெய் வளம் தீரப் போகிறதா? |சவுதி அரேபியா வரலாறு | பாகம் 3 | Video

அமெரிக்க டாலருக்கு நிகரான துருக்கி நாட்டின் லிரா நாணயம் கடந்த பல மாதங்களாக சரிந்து கொண்டிருக்கின்றன. இன்று வரை உலகில் அதிக சுற்றுலா பயணிகள் படையெடுக்கும் நாடுகள் பட்டியலில் துருக்கிக்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. யுனெஸ்கோ அமைப்பின் உலக பாரம்பரிய தளங்கக்கள் பட்டியலில் 19 இடங்கள் துருக்கி நாட்டில் மட்டும் இருப்பது கூடுதல் சிறப்பு. துருக்கியும், துருக்கி நாட்டு மக்களும் விரைவில் நல்வாழ்வு பெற உலகமே வேண்டுகிறது.

ஓட்டமான்
குர்து மக்கள் : தனி நாடு -  மத்திய கிழக்கில் போராடும் ஒரு தேசிய இனத்தின் விறுவிறு வரலாறு!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com