இந்தியா, சீனா, அமெரிக்கா : அதிபர் மாளிகைகளும், அதன் மதிப்பும் - வியக்க வைக்கும் தகவல்

ஒவ்வொரு நாட்டிலும், அந்நாட்டு அதிபர், பிரதமருக்கு அரசு சார்பாக மாளிகைகள் கொடுக்கப்படுகிறது. பழமை மாறா கட்டமைப்புடன் இருக்கும் அந்த பிரம்மாண்ட மாளிகைகள் இன்று செயல்பட்டு வருகிறது.
மாளிகை
மாளிகைTwitter

உலகம் முழுக்க, ஒரு மனிதனுக்கு சொந்தவீடு என்பது அத்தனை அவசியம். அரசுப் பணிகளில் உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு அரசே சலுகை விலையில் மாளிகைகளை வழங்குவதை நீங்கள் பார்த்திருக்கலாம்.

ஒரு நாட்டின் அதிபர், பிரதமர், பிரீமியர் போன்றவர்கள் அரசு பங்களாவில் தான் வாழ வேண்டும். அதற்குப் பல பாதுகாப்பு காரணங்களைக் கூறுவர்.

அப்படி சில நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் வசிக்கும் மாளிகைகளின் பெயர், அதன் பரப்பளவு மற்றும் அதன் மதிப்பு குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

சோங்நான்ஹாய் (Zhongnanhai) மாளிகை - சீனா

1421ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த சோங்நான்ஹாய் மாளிகை சீன அதிபருக்குச் சொந்தமானது. 34,39,830 சதுர மீட்டர் பரப்பில் அமைந்திருக்கும் இந்தக் கட்டடத் தொகுப்பின் மதிப்பு சுமார் 3 லட்சம் கோடி ரூபாய்.

தற்போது இந்த பிரமாண்ட வீட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் வசித்து வருகிறார். அவரோடு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர், பொலிட் பீரோ, சீனாவின் பிரீமியர், துணை அதிபர் ஆகியோரும் இதே மாளிகையில் தான் வசிக்கிறார்கள்.

சியாங் வா தே (Cheong Wa Dae) - தென் கொரியா

1989 - 91 காலத்தில் கட்டப்பட்ட, சாம்சங் நிறுவனத்தின் தாயகமான தென் கொரிய நாட்டு அதிபரின் மாளிகை இது. இதை நீல வீடு என்றும் அழைப்பர்.

2.5 லட்சம் சதுர மீட்டாருக்குப் பரந்து விரிந்திருக்கும் இதன் மதிப்பு சுமார் 11,000 கோடி ரூபாய். தற்போது தென்கொரிய அதிபர் மூன் ஜேன் இந்த வீட்டில் வசித்து வருகிறார்.

தி க்ரெம்ளின் (The Kremlin) - ரஷ்யா

1482 - 95 காலகட்டத்தில் கட்டப்பட்ட இந்த ராட்சத பங்களா வீடுதான் இன்று ரஷ்ய அதிபர்களின் உறைவிடம். நிலப்பரப்பு அடிப்படையில் உலகின் மிகப்பெரிய நாடான ரஷ்யாவின் தலைமையகம்.

2.75 லட்சம் சதுர மீட்டர் பரவி இருக்கும் இந்த வீட்டின் மதிப்பு சுமார் 10,000 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும். தற்போது ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இம்மாளிகையில் வசித்து வருகிறார்.

மாளிகை
முகலாயப் பேரரசர் இரண்டாம் பகதூர் ஷா : பஞ்சத்தில் மாண்ட கடைசி பேரரசரின் கதை

க்யூரினல் மாளிகை (Quirinal Palace) - ரோம்

1583ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த க்யூரினல் மாளிகை, இத்தாலிய அதிபர்களின் மூன்று அதிகாரப்பூர்வ மாளிகைகளில் ஒன்று. தற்போதைய இத்தாலி அதிபர் செர்ஜியோ மடரெல்லா வசிக்கும் இந்த வீடு சுமார் 1.10 லட்சம் சதுர மீட்டர் பரந்துவிரிந்திருக்கிறது. இதன் மதிப்பு சுமார் 9,700 கோடி ரூபாய்.

கன்டெய் (Kantei) - ஜப்பான்

1999ஆம் ஆண்டு டோக்யோ நகரத்தில் கட்டி எழுப்பப்பட்ட கன்டெய் மாளிகையை சொரி டைஜின் கன்டெய் (Sōri Daijin Kantei) என்று அழைக்கிறார்கள். இது ஜப்பான் பிரதமரின் அதிகாரப்பூர்வ மாளிகை.

தற்போது ஜப்பானின் பிதமர் யொஷிடெ சுகா இங்கு வசிக்கிறார். 46,823 சதுர மீட்டர் பரவி இருக்கும் இந்த வீட்டின் மதிப்பு சுமார் 5,800 கோடி ரூபாய்.

மாளிகை
ராஜபக்சே கதை தெரியும் - முசோலினி ஒரு சர்வாதிகாரியின் இறுதி நேரம் எப்படி இருந்தது தெரியுமா?

அதிபர் வளாகம் - துருக்கி

துருக்கி நாட்டின் அதிபர் ரசீப் தயீப் எர்டோகன் இங்குதான் வசிக்கிறார். இந்த அரண்மனை வளாகத்தில் சுமார் 1,150 அறைகள் இருக்கின்றனவாம். சுமார் 3 லட்சம் சதுர மீட்டர் பரப்பில் கட்டப்பட்டிருக்கும் இந்த மாளிகை சுமார் 5,400 கோடி ரூபாய் மதிப்பு கொண்டது.

ராஷ்டிரபதி பவன் - இந்தியா

இந்தியத் தலைநகர் டெல்லியில் 1919 - 29 காலத்தில் கட்டப்பட்ட குடியரசுத் தலைவர் மாளிகையில்தான். இந்தியாவின் தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இங்கு வசிக்கிறார்.

2 லட்சம் சதுர மீட்டர் பரப்பில் கட்டப்பட்டிருக்கும் இந்த மாளிகையில் நான்கு மாடங்கள் உள்ளன. மொத்தம் 340 அறைகள் பயன்பாட்டில் உள்ளன. இதன் மதிப்பு சுமார் 4,300 கோடி ரூபாய்.

மாளிகை
Mao History : சீன பழமை வாதத்தை எதிர்த்து கம்யூனிச புரட்சி ! மா சே துங் வரலாறு

மான்க்லோ அரண்மனை (Moncloa Palace) - ஸ்பெயின்

1947ஆம் ஆண்டு மேட்ரிட் நகரத்தில் கட்டப்பட்ட இந்த மாளிகை இன்று வரை அதிகாரப்பூர்வ பிரதமர் வசிப்பிடமாக இருந்து வருகிறது. தற்போது பெட்ரோ சான்செஸ் இங்கு வசித்து வருகிறார். 32,600 சதுர மீட்டர் பரப்பில் உள்ள இந்த வீடு, சுமார் 1,200 கோடி ரூபாய் மதிப்புடையது

வெள்ளை மாளிகை - தி யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா

1792ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மாளிகை இன்றுவரை அமெரிக்க அதிபரின் மாளிகையாக இருந்து வருகிறது. 132 அறைகள், 35 குளியலறைகள், 3 லிஃப்ட்கள் என சொகுசுக்குப் பஞ்சமில்லை. ஆனால் வெள்ளை மாளிகை மேலே குறிப்பிட்ட பல அதிபர் மாளிகைகளைவிட அளவில் சிறியது. 5,110 சதுர மீட்டர் அளவுகொண்ட இம்மாளிகையின் மதிப்பு சுமார் 300 கோடி ரூபாய்.

மாளிகை
தாஜ்மஹால் : ஷாஜகான் மும்தாஜ் காதல் மற்றும் சோகத்தின் கதை - ஒரு வரலாற்று பயணம்

குவின்டா டி ஆலிவோஸ் (Quinta de Olivos) - அர்ஜென்டினா

1854ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அதிபர் மாளிகையில் தான் தற்போதைய அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ ஃபெர்னாண்டஸ் வசிக்கிறார். 8,093 சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ள இதன் மதிப்பு சுமார் 185 கோடி ரூபாய்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com